சுந்தர வால்மீகி ராமாயணம்

சுந்தர வால்மீகி ராமாயணம், அம்மன் சத்தியநாதன், அருள்மிகு அம்மன் பதிப்பகம், விலை 450ரூ.

ராமாயணம், பாரத தேசத்தின் தலைசிறந்த இதிகாசங்களில் ஒன்று. ராமாயணம்தானே, எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனலாம். ஆனால் இந்நூல் முழுமையையும் படித்து முடித்தால், ராமாயண நிகழ்வுகளுக்கு இத்தனை அர்த்தங்கள் உள்ளனவா, நிகழ்வுகளுக்குள் இத்துணை சூட்சுமங்களும், ரகசியங்களும் உள்ளனவா என்று அதிசயிக்கத் தோன்றும். ராமஜென்ப பூமியான அயோத்தியில் துவங்கி, சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்த அசோக வனம் வரையில் உள்ள பெரும்பாலான ராமாயண நிகழ்விடங்களுக்குச் சென்று அந்தந்த சேத்ரங்களில் அந்தந்த தலங்களில், அந்தந்த தீர்த்தங்களில், அந்தந்த மண்ணில் அமர்ந்து ஆங்காங்கு ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல் இது. காலம் காலமாய் இருந்து வரும் சந்தேகங்களுக்கான விளக்கங்களை அழகாய், ஆழமாய், ஆணித்தரமாய் எடுத்துக்காட்டுவதுடன், வண்ணப்படங்கள் மற்றும் உயிரோட்டமான கோட்டோவியங்களுடன் நூல் சிறப்புற அமைந்துள்ளது. காப்பிய நடையில் ராமன் ஒரு சிறந்த மனிதன் என்கிற முறையில் புதுக்கண்ணோட்டத்துடன் படைத்துள்ளார் நூலாசிரியர் அம்மன் சத்தியநாதன். நன்றி: தினத்தந்தி.  

—-

அரசு, பேராசிரியர் ஏ. சோதி, நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி, விலை 30ரூ.

சிறுவர்களின் நற்பண்புகளை வளர்க்கும் உயரிய நோக்கத்துடன் 12 சிறுகதைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published.