செம்மண் மடல்கள்

செம்மண் மடல்கள் (ஒரு கவிஞரின் கடிதங்கள்), இரா. மீனாட்சி, கபிலன் பதிப்பகம், புதுச்சேரி, பக். 452, விலை 300ரூ.

ஆரோவில் கிராமச் செய்தி மடலில் வாசகர்களுடன் உரையாடும் நோக்கில் எழுதப்பட்ட கடிதப்பாணிக் கட்டுரைகளின் தொகுப்பு. கடிதங்கள் நிதர்சனமானவை. அதிலும் ஒரு கவிஞரின் கடிதங்கள் என்பதால் ஆழ்மன உணர்வோடும் கவித்துவத்தோடும் எழுதப்பட்டுள்ளவை. கலை, அறிவியல், பண்பாஈடு, மொழி, பிரபஞ்ச நோக்கு என விரியும் இதன் பரிமாணம் வாசிப்போருக்கு அறிவுச்சுடரேற்றும் தன்மையுடையன. காஞ்சி மகா ஸ்வாமிகள் தனக்கு தந்த நெற்றுத் தேங்காய், சங்கரா என்னும் நாமம் தாங்கி தென்னை மரமாய் வீட்டில் வளர்ந்து இருப்பதை நூலாசிரியர் சிலிர்ப்புடன் கட்டுரையாக்கியுள்ளார். இரண்டரை வயது நிறையாத மழலை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கொடுமையை எனக்கு தெரிந்த ஓர் அம்பிகையின் கதை என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். தனியொரு மனித மனத்துள் எழுத் அகவய உணர்வுகள், வரலாற்றை எவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றன என்பதற்கு இக்கடிதக் கட்டுரைகள் நல்லதோர் சான்று என்றால் மிகையல்ல. நன்றி: தினமணி, 3/11/2014.  

—-

சர்க்கரை மருந்தின்றி கட்டுப்படுத்த, தமிழ்ச்செல்வன், மருத்துவப்பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான யோசனைகளைக் கூறும் நூல். நன்றி:தினத்தந்தி. 5/11/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *