ஜுலியஸ் சீசர்

ஜுலியஸ் சீசர், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 110ரூ.

அலெக்சாண்டரைப்போல் ஒரு மாவீரர் ஜுலியஸ் சீசர், ரோமாபுரி மன்னர். கிளியோபட்ராவின்மனம் கவர்ந்து அவளை மணந்தவர். இறுதியில் ரோமாபுரியின் பாராளுமன்றத்தில், அவர்களுடைய ஆதரவாளர்களாலேயே படுகொலை செய்யப்படுகிறார். ஜுலியஸ் சீசர் வரலாற்றை சுவையாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார் ஜனனி ரமேஷ். சீசர் காலத்து ரோமாபுரி பற்றி அவர் கூறியுள்ள தகவல்களில் சில- உடல் ஊத்தோடு பிறக்கும் குழந்தைகளை பெற்றோரை கொன்றுவிடலாம். இரவு நேரத்தில் கூட்டங்கள் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. நீதிபதிகள் லஞ்சம் வாங்கினால் மன்னிப்பே கிடையாது. மரண தண்டனைதான். இறந்தவர்களின் உடல்களை, நகர எல்லைகளைத் தாண்டித்தான் புதைக்கவோ எரிக்கவோ வேண்டும். கலப்புத் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதுபோல் எத்தனையோ சுவையான தகவல்கள். நன்றி: தினத்தந்தி, 9/3/201

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *