தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்

தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள், முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன், தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர். எம்.பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், பக். 112, விலை 70ரூ.

இசைக்குழுக்களாக வாழ்ந்த பழந்தமிழர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு சண்டை போட்டதை போர் என்று சொல்லக்கூடாது. அது தமிழர்களுக்குள் எழுந்த பூசல்களே என்பதை தொல்காப்பிய வழி சொல்வது ஆய்வுக்குரியது, மாமன்னர்கள் நடத்திய கடுமையான போர்களால் மக்கள் பட்ட சொல்லொண்ணாத் துயரங்களை புலவர்கள் எடுத்துச்சொல்லி, மன்னர்களை உணரச் செய்தது போன்ற வரலாற்றுக் காலச் செய்திகளை விளக்கும் இடங்கள் அதிகம். திணைதோறும் போர், நடுகல் வழிபாடு உள்ளிட்ட செய்திகள் பழந்தமிழர்களின் வீரத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 6/8/2014.  

—-

ஆண்டவன் உங்கள் அருகில், ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 70ரூ.

சுவாமி தேஜஸானந்தா என்ற புனைபெயரில் ப்ரியா கல்யாணராமன் குமுதம் பக்தி ஸ்பெஷலில் எழுதிய ஆன்மிகமும் தன்னம்பிக்கையும் கலந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. இறைவன்கூட அடிபடாமல் காயம் படாமல் கஷ்டப்படாமல் உருவாகிவிடவில்லை. கஷ்டங்களுக்கு ஆட்பட ஆட்படத்தான் நம் வாழ்வு சந்தோஷமான சிலையாக செதுக்கப்படும். இதுபோன்ற ஆன்மிகத்தைத் தாண்டிய வாழ்வியல் கருத்துக்கள் நூலில் நிறைய உண்டு. றுமை, விடாமுயற்சி, தீவிர நம்பிக்கை இந்த மூன்று விஷயங்கள் உங்களிடம் இருந்தால் கொலம்பஸ் மட்டுமல்ல, நீங்களும் வெற்றி பெறுவீர்கள் என்பன போன்ற அறிவார்ந்த சிந்தனைகளை, சிறு சிறு நிகழ்வுகள், சின்னஞ்சிறு கதைகள் மூலம் எடுத்துச் சொல்லி புரிய வைக்கும் உத்தி அதிகம். இறை உணர்வும் தன்னம்பிக்கையும் இருந்தாலே கடவுள் உங்கள் பக்கம் என்பதை நிறுவும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 6/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *