மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html

தமிழச்சி, தான் வாழ்ந்த கிராமத்தின் இரண்டு இடுக்குகளை இன்னமும் மறக்காமல், தனக்கான நிழலாக, தான் தலை சாய்க்கும் மடியாக மல்லாங்கிணறை நினைத்திருப்பதும், அக்கம்பக்கத்தினரை அளவிட முடியாத பாசத்தோடு அவர் அணுகும் விதமும், மஞ்சணத்தி, குப்பைமேனி, வெந்தயக் கீரை என இயற்கையின் வரங்களை வைத்து வைத்தியம் பார்க்கும் கிராமத்து மக்களின் வாழ்வியலை, சொலவடையாக மருத்துவமாக, பேச்சுவழக்காக, உயிரார்ந்த நேசமாக கிராமத்தின் அத்தனைவிதமான ஆசாபாசங்களோடு அடையாளப்படுத்தி இருக்கிறார். -நன்றி: விகடன், 25/7/13.  

—-

 

போஜராஜன், விகடன் பிரசுரம், விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-6.html

போஜன், பெரும் புலவன், மொழி, இலக்கியம், சமயம், தத்துவம், இசை, விஞ்ஞானம், சிற்பம், கட்டக்கலை, மருத்துவம், போர்க்கலை என அனைத்துத் துறைகளிலும் அவனுக்கு இருந்த புலமைக்கு அவன் இயற்றிய நூல்களே சான்று. கவிகளை ஆதரித்துப் போற்றினான். இலக்கியத் துறையில் சம்பூராமாயணத்தை இயற்றினான். சிருங்கார மஞ்சரி கதா என்ற கதையைஎழுதினான். போஜன் எழுதிய நூல்களில் கட்டக்கலை பற்றிப் பேசும் சமாரங்கண சூத்ரதாரா என்ற நூல் நகர நிர்மாணம் பற்றிப் பேசுகிறது. போஜன் கட்டியதாகச் சொல்லப்படும் 104 கோயில்களில், சைவக் கோயில்களே பெரும்பாலானவை. -நன்றி: விகடன், 25/7/13.  

—-

  பண்டிகைக்கால சைவ சிற்றுண்டிகள், மீனா சங்கரன், லியோ புக் பப்ளிஷர்ஸ், 36, முதல் பிரதான சாலை, சி.ஐ.டி. நகர், நந்தனம், சென்னை 35 விலை 100ரூ.

சமையல் குறிப்புகள் கொண்ட புத்தகங்கள் நிறைய வெளிவந்துள்ளன. அவற்றில் இருந்து மாறுபட்ட புத்தகம் இது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொருவிதமான சிற்றுண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த சிற்றுண்டிகளைத் தயாரிக்கும் விதத்தை எழுதியுள்ளார் மீனா சங்கரன். பெண்களுக்கு பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 24/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *