அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள்
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள், சசிமதன், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 65ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-141-8.html
உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது என்பது மற்ற உயிரினங்களுக்கான வாழ்க்கை நியதி. ஆனால் மனித வாழ்க்கை அவற்றையும் கடந்து, அறிவார்ந்த நிலையில் சிந்தித்து, திட்டமிட்டு வாழ்வதாகும். அதற்கு நிறைய கஷ்டங்களையும், பிரச்னைகளையும் மனிதன், தன் வாழ்நாளில் சந்திக்க வேண்டியுள்ளது. அதில் வெற்றி பெற்றவனே சிறந்த வாழ்க்கையை அடைந்தவனாவான். அதற்கு வெறும் படிப்பறிவு மட்டும் போதாது, அனுபவரீதியாகக் கிட்டும் பட்டறிவும் வேண்டும். அதை நமக்கு முன்வாழ்ந்தவர்கள் குறிப்புகளாக விடுடச் சென்றுள்ளார்கள். அதில் சிலவற்றை இந்நூலாசிரியர் எளிய நடையில் இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். இவற்றில் சில நமக்கு ஏற்கெனவே அறிந்ததாகவும், பல புதியதாகவும் உள்ளன. குறிப்பாக, எரிவாயு சிக்கனத்திற்குத் தேவையான யோசனைகள் முதல், விலைவாசியை எப்படி சமாளிப்பது, உணவு பண்டங்களை பாதுகாப்பது எப்படி, எதைச் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும், குழந்தையின் அறிவுத் திறனை உயர்த்துவது எப்படி, பயணத்திற்குப் பயன்படும் குறிப்புகள், இல்லத்தை சுத்தமாக வைப்பதால் ஏற்படும் நன்மைகள், நல்ல பெயரைத் தட்டிச் செல்வது எப்படி என்பது வரை சுமார் 32 விஷயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை குடும்பத்தினர் தங்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும், வளரும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கை எளிதாகவும் சிறப்பாகவும் அமைய உதவும். -பரக்கத். நன்றி: துக்ளக், 4/9/2013.
—-
வெற்றி உங்களிடமே, மெர்வின், குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 240, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-170-5.html
வெற்றியைத் தேடி நாம் எங்கும் அலையத் தேவையில்லை. அது நம்மிடமே இருக்கிறது என்பதை ஆசிரியர் பல இடங்களில் நிறுவியுள்ளார். வெற்றி பெற வயது வித்தியாசம் இல்லை. வெற்றி பெறுவதற்காகத்தான் நாம் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்திருக்கிறோம். இளைஞர்களின் கையில்தான் வருங்காலத்தின் பொற்காலமே அடங்கியிருக்கிறது. ஒரு முக்கியமான காரியத்தில் உங்கள் மனதை இடைவிடாமல் ஈடுபடுத்திப் பாருங்கள். வெற்றி நிச்சயம். ஒரு குறிக்கோளுடன் இயங்குவதில்தான் வெற்றியே அடங்கியுள்ளது. வெற்றி பெற்ற அறிஞர்கள், சான்றோர்களின் வாழ்வையும், மேற்கோள்களையும் ஆசிரியர் உதாரணமாகக் காட்டி நூலைச சிறக்கச் செய்துள்ளார். நன்றி; குமுதம், 4/9/2013
| அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள் |