பேராசிரியர் ந. சஞ்சீவியின் இலக்கிய நூல்
பேராசிரியர் ந. சஞ்சீவியின் இலக்கிய நூல், ந.சஞ்சீவி, காவ்யா, விலை 1500ரூ.
மொழி என்பது வெறும் சப்தங்களும், அர்த்தங்களும் அல்ல. புள்ளிகளும் கோடுகளும் அல்ல, இது ஓர் இனத்தின், அதன் பண்பாட்டின், அதன் வாழ்வியல் நெறியின் ஆணிவேர். அறிவுச் சேகரம், அறச்சின்னம்.
பேராசிரியர் ந. சஞ்சீவி, கணினி இல்லாத காலக்கட்டத்திலேயே, மடிக்கணினியாக வாழ்ந்தவர். எதையும் தொகுத்து, பகுத்தும், வகுத்தும் பார்ப்பது அவரது வழக்கம். தமிழ் ஆய்வுக்கு ஓயாது உழைத்தவர். அவர் எழுதிய “செவ்வியல் இலக்கிய அடை” என்ற இந்த நூல், அவரது சிறந்த ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறது.
(‘அடை’ என்ற சொல் ‘அடைமொழி’ யை குறிக்கிறது.) பாற்கடலைக் கடைந்தால் மட்டுமின்றி நூற்கடலைக் கடைந்தாலும் அமுதம் கிடைக்கும் என்பதை இந்நூல் நிரூபிக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 11/5/2016.