ஒரு விரல் புரட்சி

ஒரு விரல் புரட்சி, அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 150ரூ. ஒற்றைவிரலில் ஒரு துளி மையால் கறைப்படுத்திக் கொண்டு தேர்ந்தெடுத்த நாட்டின் கறையைப் போக்கக்கூடிய கறையில்லா அரசியல் வாதியைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலின் நோக்கம் சரியாக நடக்கிறதா? சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையான தேர்தல் நிகழ்வுகள், வெற்றிக்காக கட்சிகள் வகுத்த வியூகங்கள், அதன் விளைவுகள் என்று சுமார் ஐம்பது ஆண்டுகால இந்திய, தமிழக தேர்தல் குறித்து அலசி ஆய்ந்து எழுதப்பட்ட வரலாறு, ஓட்டுப்போடும் பொது ஜனம் முதல் […]

Read more

யுகங்களின் தத்துவம்

யுகங்களின் தத்துவம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 170ரூ. மனிதகுல வரலாற்றை ஒரு தத்துவப் பார்வையில் அருணன் இந்த நூலில் வழங்கியுள்ளார். வரலாறு வட்டமடிக்கிறதா அல்லது மேல்நோக்கி வளர்ந்து செல்கிறதா? யுகங்கள் என்ற இந்திய மரபு எதைக் கூறியது? ஆதிமனிதன் யுகம், ஆண்டாள் யுகம், நிலப்பிரபு யுகம், முதலாளித்துவ யுகம் என்று செல்கிற மனிதச் சமூகத்தின் வரலாற்றில் இந்தியாவில் ஏன் முதலாளித்துவம் மற்ற நாடுகளில் வளர்ந்த பாணியில் வெளிவரவில்லை? இந்தியாவில் அடிமை முறை இருந்ததா, இல்லையா? என்ற தேடுதலில் எழுந்த கேள்விகள் என ஒரு […]

Read more

மண்ணுக்கேற்ற மார்க்சியம்

மண்ணுக்கேற்ற மார்க்சியம், அருணன், வசந்தம் வெளியீட்டகம், மதுரை, பக். 752, விலை 400ரூ. அருணனி எழுத்து வலிமையான தர்க்க முறைகளைக் கொண்டது. இந்தத் தொகுப்பின் முதல் பார்வையிலேயே அதை உணர முடியும். இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் என எண்ணற்ற விவாதங்களை அவர் இத்தொகுதியில் நிகழ்த்துகிறார். 750 பக்கங்களுக்கு விரிவ9டகின்ற இந்நூல் 103 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. சோவித் யூனியன் சரிந்து விழுந்த பின்னரும் மார்க்சீயம் சார்ந்த தன்னுடைய உறுதியை அது வெல்லும் என்ற நம்பிக்கையை அருணன் தொடர்ந்து எழுதிவருகிறார். மார்க்சியம் வெறும் தத்துவமாக மட்டுமில்லாது […]

Read more

நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 65ரூ. விஞ்ஞானி ஆக வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழிகாட்டத்தான் ஆளிருக்காது. அப்படியாப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை வடிவில் பல நாட்டு விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவைபட விளக்குகிறது இந்நூல். — மங்காவு, சொ. அருணன், கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, புதுச்சேரி -8, விலை 60ரூ. மொத்தம் 11 சிறுகதைகள் […]

Read more