101 கேள்விகள் 100 பதில்கள்

101 கேள்விகள் 100 பதில்கள் , சு.தினகரன், அறிவியல் வெளியீடு, பக்.102, விலை ரூ.80. பலவிதமான நம்பிக்கைகளின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை நிறுத்தி, அவர்களிடம் பல கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான பதில்களையும் இந்நூல் கூறுகிறது. நமக்குத் தெரியாத, நமக்கு வியப்பூட்டுகிற பல அறிவியல் தகவல்கள் மிக எளிமையாகப் புரிந்து கொள்ளும்விதத்தில் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் பல நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியவையாகவும் இருக்கின்றன. ஸ்வீடனைச் சேர்ந்த உப்பசாலா பல்கலைக்கழக ஆய்வுக்குழு தினமும் பால் குடிக்கும் பெண்களுக்கு எலும்பு பலவீனப்படுவதாக அறிக்கை ஒன்றை […]

Read more

துளிர் அறிவியல் கட்டுரைகள்

துளிர் அறிவியல் கட்டுரைகள் , தொகுப்பு: துளிர் ஆசிரியர் குழு, அறிவியல் வெளியீடு, பக்.152; விலை ரூ.150;  துளிர் மாத இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 50 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். குழந்தைகளுக்குப் புரியும்வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்களை உள்ளடக்கியவையாக உள்ளன. கரோனா வைரஸ் பற்றி உலகையே ஆளும் வைரஸ் கட்டுரை விவரிக்கிறது. பல்வேறு தொழில்நுட்பங்கள் எல்லாம் இணைந்துதான் இன்றைய உலகம் இயங்குகிறது. மருத்துவ உலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. இதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும்விதமாக "மருத்துவர்களுக்கு உதவும் […]

Read more

மனிதனாய் ஆன கதை

மனிதனாய் ஆன கதை, முனைவர் சு.தினகரன், அறிவியல் வெளியீடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், விலை 40ரூ. குரங்கிலிருந்தா? மனிதப் பரிணாமம் குறித்து ஏராளமான புத்தகங்கள் இதுவரை வந்திருந்தாலும் காலத்துக்குத் தேவையான விவாதங்களுடன், ஆய்வு நிரூபணங்களுடன் எளிய மொழி நடையில் முனைவர்.சு.தினகரன் எழுதி இருக்கும் நூல்தான், ‘மனிதனாய் ஆன கதை’. விவசாயிகள் முதல் விஞ்ஞானிகள்வரை பலரை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ‘அறிவியல் வெளியீடு’ இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது. நன்றி: தி இந்து, 8/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை

தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை, தொகுப்பு தேனி சுந்தர், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. புதிய கல்விக் கொள்கை அவசியமா? இந்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ பற்றிய தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் பார்வையை விளக்குகிறது இந்நூல். ‘விழுது’ – புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் தேனி சுந்தர். கல்வியாளர்கள் முனைவர் ச.மாடசாமி, எஸ்.எஸ்.இராஜகோபாலான், பேரா. ஆர்.ராமானுஜம், பேரா.என்.மணி, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்தப் புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு […]

Read more

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன்

அறிவியல் பார்வையில் ஹைட்ரோகார்பன், த.வி.வெங்கடேஸ்வரன், சி.இ.கருணாகரன், வ.சேதுராமன், ப.கு.ராஜன், அறிவியல் வெளியீடு, விலை 35ரூ. அறிவியல் மக்களுக்கே என்ற முழக்கத்துடன் செயல்பட்டுவரும் தமிழ்நாட்டு அறிவியல் இயக்கத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது இப்புத்தகம். ஹைட்ரோகார்பன் திட்டத்தைப் பற்றிய பல்வேறு அம்சங்களை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியலாளர்களைக் கொண்டு, அறிவியல் பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகம். அரசியல் கலக்காமல், கேள்வி பதில் வடிவத்தில், உள்ளதை உள்ளபடி தெரிவிப்பது இந்நூலின் சிறப்பு. நன்றி: தி இந்து, 6/1/2018.

Read more

சிந்துவெளி ரகசியங்கள்

சிந்துவெளி ரகசியங்கள், சு. சீனிவாசன், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. சிந்து சமவெளி நாகரிகம் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அங்கு புதைந்துபோன நகர அமைப்பைப் பார்க்கும்போது, நாகரிகத்தின் உயர்நிலையில் இருந்த சமூக அமைப்பு வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகிறது என்ற விவரங்களை இந்த நூலில் சு. சீனிவாசன் எளிமையாக எடுத்துக்கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 12/7/2017.

Read more

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள்

மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. பெண்களின் பங்களிப்பு வரலாற்றில் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குப் பல துறைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், புற்றுநோய் தாக்குதலிலிருந்து உத்வேகத்துடன் மீண்டெழுந்த பேராசிரியர் மோகனா, இதுவரை பரவலான கவனிப்பைப் பெறாமல் போன 10 பெண் விஞ்ஞானிகளைப் பற்றி இந்நூலின் வழியே அறியத்தருகிறார். பழங்காலப் பெண் கணிதவியலாளர்கள் தொடங்கி, மேரி ஆன்னிங், சாவித்திரிபாய் புலே, கமலா சோகோனி உள்ளிட்ட ஆளுமைகளின் செயலூக்கம், வாசிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. […]

Read more

ஒளி விளையாட்டு

ஒளி விளையாட்டு, எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன், அறிவியல் வெளியீடு அறிவியல் விளையாட்டுகள் பாடத்தின் ஒரு பகுதியாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவும் மாறி வரும்காலம் இது. அறிவியலை விளையாட்டு ரீதியாகக் கற்க எளிமையான பல விளையாட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள இந்நூல் எஸ்.டி. பாலகிருஷ்ணன், சி. வெங்கடேசன் ஆகியோர் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளனர். நன்றி: தி இந்து, 9/11/2016.

Read more

புதிய பூமி சூடான சூரியன்

புதிய பூமி சூடான சூரியன், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 60ரூ. பூமி பற்றியும் சூரியன் பற்றியும் அறிவயல் பூர்வமான உண்மைகளை, அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொன்னதை, நூலாசிரியர் எளிய மொழியில் தந்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- மெரிவின் நூல்களின் மதிப்பும் மாண்பும், மெர்வின் வெளியீடு, பக். 112, விலை 50ரூ. வாழும்போதே சமுதாயத்திற்காக நல்ல நூல்களை எழுதி, அதனை மதிப்பீடும் செய்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

பெருவெடி பிரபஞ்ச வரலாறு

பெருவெடி பிரபஞ்ச வரலாறு, எம்.எஸ். முகமது பாதுஷா, எஸ்.டி. பாலகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு, விலை 75ரூ. நம்மைச் சுற்றியுள்ள அண்டங்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறுவர்களுக்கான அறிவியல் விளக்க நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.   —- நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள், அரு.வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிகேஷன்ஸ், பக். 104, விலை 70ரூ. பொருளாதாரத்தில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் மிக அழகாக எடுத்துக்கூறும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Read more
1 2