திறந்த புத்தகம்

  திறந்த புத்தகம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 211, விலை 170ரூ. திறந்த புத்தகம் என்னும் இந்நுால், முகநுாலில் எழுதிய, 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. ‘அப்பாவும் நானும்’ எனும் கட்டுரையில், அப்பா இருக்கும் அறையில் தான், நான் புத்தகங்களைப் பரப்பி வைத்துக் கொண்டிருப்பேன். ‘என் அறை என்று தான் பேர்; ஆனா, உன் புத்தகங்கள் தான் இருக்கு’ என்று கோபமாக முணுமுணுப்பார் என்று குறிப்பிட்டிருப்பது, இந்நுாலின் ஆசிரியர் பல நுால்களை படிக்கும் வழக்கத்தை கொண்டவர் என்பது தெரிகிறது. நன்றி:தினமலர், 25/3/2018

Read more

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள்

சில கவிதைகள் சில கதைகள் சில கட்டுரைகள், அழகிய சிங்கர், விருட்சம்,  பக். 136, விலை ரூ.100. எழுத்தாளர் அழகியசிங்கரின் 27 கவிதைகள், 8 சிறுகதைகள், 12 கட்டுரைகள் ஆகியவை அடங்கிய தொகுப்பு இது. பெரும்பாலான சிறுகதைகள் மிகவும் எளிமையாகவும் நேரடித்தன்மையுடனும் இருக்கின்றன. எழுத்தாளரான வங்கி அதிகாரி மீது வாடிக்கையாளர் ஒருவர் புகார் கொடுக்க, அதனால் அவருக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட வங்கி ஊழியர் ஒருவரை மீண்டும் பணியில் சேர்க்க முயற்சி செய்யும் வங்கி அதிகாரி முடிவில் தோல்வியடைவது […]

Read more

நீங்களும் படிக்கலாம்

நீங்களும் படிக்கலாம், அழகிய சிங்கர், விருட்சம், பக். 90, விலை 60ரூ. முழுநேர வாசகன் என்பது மிகவும் உயர்ந்த விஷயம் என்று இந்திய இலக்கியம் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார், க.நா.சு., வாழ்நாள் முழுவதும் படிப்பதிலேயே தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் அழகிய சிங்கர். சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட, 3,000 பக்கங்களுக்கு மேல் அவர் படித்த, 20 புத்தகங்களின் விபரங்கள் தான், ‘நீங்களும் படிக்கலாம்’ என்ற இந்த சிறிய நூல். எல்லாரும் புத்தகங்கள் வாசிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் தான் இவை. எஸ்.ராமகிருஷ்ணன் […]

Read more

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்

எளிய தமிழில் ஆங்கில இலக்கணம், பி.சி. கணேசன், நர்மதா பதிப்பகம், விலை 120ரூ. உலக மொழியான ஆங்கிலத்தை பிழையின்றி கற்பது அவசியம் என்ற நோக்கத்தில் படைக்கப்பட்டது இந்நூல். தமிழ் இலக்கணத்திற்கும், ஆங்கில இலக்கணத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆகவே ஆங்கில இலக்கணத்தின் அமைப்பு முறைகளை தமிழில் விளக்கிச் சொல்லி எளிதில் புரிய வைக்கிறார் நூலாசிரியர் பி.சி. கணேசன், ஆங்கிலத்தை பயில விரும்பும் அனைவரும் இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- நவீன விருட்சம், அழகிய சிங்கர்,விலை 100ரூ. 1988ம் ஆண்டு […]

Read more

ரோஜா நிறச்சட்டை

ரோஜா நிறச்சட்டை, அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, சென்னை, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-0.html அன்றாடத்தின் கதைகள் ஆசிரியரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பில் 14 கதைகள் உள்ளன. புரியாத பிரச்சினை கதையில் இன்றைய தவிர்க்க முடியாத இருபாலர் கல்வி, தலைமுறை இடைவெளி போன்ற விவகாரங்கள் அலசப்படுகின்றன. மற்ற ஆடவருடன் யதார்த்தமாக மகள் பழகுவதைப் பார்த்து தந்தை பதறுகிறார். சந்தேகிக்கிறார். கடன் கொடுத்தவன் கலங்கும் விதம் சொல்கிறது இருபது ரூபாய் கதை. துக்கடா விஷயங்கள் என்று நாம் கருதுபவை, […]

Read more

ராம் காலனி

ராம் காலனி, அழகிய சிங்கர், விருட்சம், சீத்தாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், 16, ராகவ்ன காலனி, மேற்கு மாம்பலம், சென்னை 33, பக். 166, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-190-2.html 25 ஆண்டுகளாக நவீன விருட்சம் என்ற இலக்கியச் சிற்றேட்டை நடத்தி வருகிறார் அழகிய சிங்கர். 60 வயதாகிற அவரது, 3வது சிறுகதைத் தொகுதி இது. படிப்பவரின் கவனத்தை ஈர்க்கும்படி, பல கதைகளை எழுதி இருக்கிறார் அழகிய சிங்கர். சிறுகதை எழுத, முனையும், ஆரம்ப எழுத்தாளர்கள் அழகிய சிங்கரின் கதைகளில் […]

Read more

விருட்சம் கதைகள்(தொகுதி 1)

விருட்சம் கதைகள்(தொகுதி 1), அழகிய சிங்கர், விருட்சம் வெளியீடு, விலை 100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-135-6.html சில சிறுகதைகளை ஜனரஞ்சகமான பத்திரிகைகளில் வெளியிடமுடிவதில்லை. அப்படி வெளிவராமைக்கு இதழ் சூழலில் நிறைய காரணங்கள் உண்டு. அதற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு விருட்சம் கதைகள் தொகுதி 1. 1990ஆம் ஆண்டில் வெளியான இத்தொகுப்பு இப்போது இரண்டாம் பதிப்பாக வெளியிகியிருக்கிறது. இக்கதைகள் வெகுஜன இதழில் இடம் பெறாதது. இந்த நூல் 300 பிரதிகள் மட்டுமே 2012 டிசம்பரில் வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அஜீத் […]

Read more