தி பேர்ல் கனபி

தி பேர்ல் கனபி – ஆங்கிலம், கே.பரமசிவம், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.500. சங்க காலத்துக்குப் பின், பெரிதும் அறியப்படாத தொகுப்பாக விளங்குவது பாண்டிக்கோவை; 325 பாடல்களின் திரட்டு. அகம், புறம் கலந்த எதுகை சிறப்பமைந்த அழகிய பாக்களை உள்ளடக்கியவை. இனிமையான நான்கடி செய்யுள்களைக் கொண்டது. தலைவனும், தலைவியும் கொண்ட காதல் வேட்கையின் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி வீரத்தையும் பின்னிய பாடல்கள் படிக்க இதமானவை. எளிமையான ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இலக்கியச் செழுமை, இலக்கணப் புனைவுகளை உள்வாங்கி கருத்துக்குப் பொருந்தக்கூடிய சொற்களைத் தேர்ந்து, தமிழ்ப் பண்பாட்டுக் […]

Read more

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம்

விடிவெள்ளி மகராசன் வேதமாணிக்கம் காவியம், நாஞ்சில் நாரண.தொல்காப்பியன், ஆசியவியல் நிறுவனம், விலைரூ.400 திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த, நாஞ்சில் நாட்டில் வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த மகராசன், கிறித்தவத்துக்கு மாறிய நிகழ்வுகளும், ஒடுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக விளை நிலத்தை தானமாக வழங்கியதும் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் மன்னராட்சியின் போதிலான கயமை, சூழ்ச்சி, வீழ்ச்சி, முறைகேடுகளுக்கு துணை நின்றோரின் கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க நடந்த போராட்டங்கள் பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. போராட்டங்களில் துணை நின்ற கிறித்தவ சமய போதகர்களின் தொண்டுகளையும் அறிய முடிகிறது. ஆங்கிலேயக் கம்பெனி, திருவிதாங்கூர் அரசு, […]

Read more

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள்

சிந்தை கவர்ந்த சித்தர் பாடல்கள், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 300ரூ. தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. அறிவியல் பார்வைக்கும், ஆன்மிகத்தேடலுக்கும் உறவுப் பாலம் அமைத்து உயர்ந்த கருத்துகளை எளிமையாய் விளக்கியவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர் பாடல்களில் சிந்தை கவர்ந்த பாடல்களை முனைவர் சொ. சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் போன்ற 24 சித்தர்களின் பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடல்களுக்கும் பொழிப்புரையோ அல்லது விளக்கவுரையோ இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். […]

Read more