தடங்கள்

தடங்கள், எம்.ஏ.சுசீலா, மீனாட்சி புத்தக நிலையம், விலை: ரூ.225. பெண்களும் நெருக்கடிகளும் தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், விலை 180ரூ. தலைமுறைகள் யாதுமாகி ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறைப் பெண்களின் கதையைச் சொல்கிறது. கொள்ளுப்பாட்டி அன்னம்மாவுக்கு பத்து வயதில் திருமணம் நடக்கிறது. அதன் பிறகான அவளது வாழ்க்கை அடுப்படியின் கரியோடு உறைந்து போகிறது. கொள்ளுப்பேத்தி நீனா ஐஏஎஸ் படிக்கிறாள். இந்த தலைமுறை இடைவெளியை வலியோடும், உறுதியோடும் தாங்கிக்கொண்டு கல்வியையும், நம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார் அன்னம்மாவின் மகள் தேவி. காலக் கடிகாரத்தின் பெண்டுலம்போல தேவியின் மகள் சாரு அம்மாவின் வாழக்கையையும் தன்னையும் பற்றி நினைத்தபடி இருக்கிறாள். […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ. சுசீலா, வம்சி புக்ஸ், பக். 208, விலை 180ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024356.html தேவி என்ற தனித்துவம் கெண்ட பெண், தனக்கான பாதையை தானே வகுத்து, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார். அவரது வாழ்வை வரலாறுபோல் அளிக்கிறார் அவர் மகள் சாரு. இந்த நூல் தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது. குழந்தைமணமும், பெண் கல்வி மறுப்பும் இன்று அருகிப்போன பிரச்னைகளாக இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இல்லை. பால்ய விவாகத்தில் விதவையாகிப் போனவர் தேவி. எதிர்ப்புகளை […]

Read more

யாதுமாகி

யாதுமாகி, எம்.ஏ.சுசீலா, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, பக். 208, விலை 180ரூ. நாவலின் மையம் தேவி. நாவலின் முதுகுத்தண்டும், பொருள்பரப்பும் அவளே. கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி கல்வியே குறியாக அவள் செயல்படுகிறாள். சிறிய வயதிலேயே தாயின் வற்புறுத்தலால் மகளுக்குத் திருமணம் செய்து வைத்து அவள் விதவையான பிறகு அந்தக் குற்றவுணர்ச்சி தாங்க முடியாது அவளை வெறி கொண்டு படிக்க வைக்கும் சாம்பசிவம் போன்ற எளிய மனிதர்களாலும்தான் பெண் விடுதலை சாத்தியமாகிறது. தனக்கான பாதையைத் தானே […]

Read more