சிலிங்

சிலிங், கணேசகுமாரன், எழுத்து பிரசுரம், விலை: ரூ.110. ரகசியங்களின் சுரங்கம் மூன்றாவது அடுக்காக இருப்பதாகச் சொல்லப்படும் மனிதர்களின் புதைநிலை மன வன்மமானது, தமிழில் புனைவுகளாக வெளிப்பட்டது குறைவு. கோபிகிருஷ்ணன் இந்தப் புள்ளியில் தொடர்ந்து எழுதினார். மனிதர்களின் மனமானது அழுக்குகள் நிரம்பிய ஓர் இருட்டறை என்பதை நிறுவ அவர் தன்னையே பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். தொடர்ந்து இரைந்துகொண்டே இருக்கும் உள்மனத்தை அவர் இறுதிவரை எழுதிக் கடக்கவே முயன்றார். மனிதர்களின் புதைநிலை மனமானது ரகசியங்களின் சுரங்கம். ஒருவர் அதைப் பொதுவெளியில் திறந்து காட்டும்போது, அவர் இந்தச் சமூகத்திரளுக்குப் பொருத்தமற்றவர் […]

Read more

அல்லிக்கேணி

அல்லிக்கேணி,  ராம்ஜீ நரசிம்மன்,  எழுத்து பிரசுரம், பக். 249, விலை ரூ. 270.   திருவல்லிக்கேணியின் காட்சியமைப்பை நம் முன் நிறுத்துவதில் தொடங்கி கால மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் வாழ்க்கையின் பரிமாணங்களை இந்நாவல் விவரிக்கிறது. நாம் நமது பால்ய பருவத்தில் விரும்புகிற ஒவ்வொரு சாகசத்தையும் அதனைத் தொடர்ந்து அடையும் பருவ மாற்றத்தையும் தன் எழுத்தில் சலிப்பு இல்லாமல் கொண்டு வந்து தந்திருக்கிறார் எழுத்தாளர் ராம்ஜீ நரசிம்மன். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் எட்டிப்பார்க்கும் நையாண்டித் தனம் வாசகர்களைக் கட்டிப்போட்டு அழைத்துச் செல்கிறது. தேர்ந்த கதையமைப்பு, நேர்த்தியான கதாபாத்திரங்கள், […]

Read more

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை, சித்ரா லட்சுமணன், எழுத்து பிரசுரம், விலை 340ரூ. தமிழ் சினிமா உலகில், திரைக்குப் பின்னால் நடைபெற்ற காதல், மோதல், துரோகம் போன்ற பலதரப்பட்ட சம்பவங்கள் இந்த நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்து இருக்கின்றன. நடிகர், நடிகைகள் மட்டும் அல்லாது, திரைப்படத்துறை சார்ந்த அத்தனை பிரிவினர் வாழ்வில் நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள், இதுவரை அறியப்படாத ஆச்சரியமான செய்திகள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய கடிதம், பல பிரபலங்கள் போராட்ட வாழ்வுக்குப் பின் திரைப்படத்துறையில் நுழைந்த கதை, சிவாஜி […]

Read more

குட்டிரேவதி கவிதைகள்

குட்டிரேவதி கவிதைகள், எழுத்து பிரசுரம், தொகுதி 1, விலை 599ரூ, தொகுதி 2,விலை 450ரூ. கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்? அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால், எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்த மருத்துவத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை […]

Read more