குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450. குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் […]

Read more

போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், பக். 304, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000023529.html யாழ்ப்பாணத் தமிழரான இந்நூலாசிரியர், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி வருபவர். போதிதர்மரைப் பற்றிய அற்புதமான பல விஷயங்களைத் தேடிப் பிடித்து இந்நூலில் தொகுத்துள்ளார். புத்த பெருமானின் மறுஅவதாரமாகப் பேசப்படும் போதி தர்மர், தமிழகத்தில் தோன்றிய பௌத்த ஞானியாவார். இவர் ஆன்மிகம் மட்டுமின்றி, அறிவியல், தற்காப்புக் கலை, அக்குபஞ்சர், சித்த மருத்துவம், உடல் உறுப்புகள் தானம் பற்றிய மருத்துவ விஞ்ஞானம், […]

Read more

குருவிக்கூடு

குருவிக்கூடு, கோவன் பதிப்பகம், சென்னை, விலை120ரூ. பத்திரிகைகளில் சிறுகதை வெளிவருவது குறைந்துவிட்டது. ஆனால் சிறுகதை படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடவில்லை. அப்படிப்ட்டவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியும், தெவிட்டாத இன்பமும் அளிக்கக்கூடியது பிரபல எழுத்தாளரும், பேராசிரியருமான முகிலை இரா. பாண்டியனின் குருவிக்கூடு சிறுகதைத் தொகுதி. கதைகள் ஒவ்வொன்றும் மனதை வருடுகின்றன. எனினும் பாரம் என்ற சிறுகதை புதிய உச்சத்தைத் தொடுகிறது. ஜான் என்ற மனவளர்ச்சி குன்றிய குழந்தையைப் பற்றிய கதை. பிறருக்கு உதவுவதையே லட்சியமாகக் கொண்ட தங்களுக்கு இக்குழந்தை ஏன் பிறந்தது? தங்களுக்குப் பின் அக்குழந்தையைக் காக்கப்போவது […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 304, விலை 200ரூ. போதி தர்மர் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள அற்புதமான நூல். தமிழகத்தில் ஆன்மிக அறிவு பெற்று, அதனை சீனாவில் முழுமையாக அதாவது ‘சென்’மதக் கோட்பாட்டை உருவாக்கியவர் என்ற பெருமை படைத்தவர் போதிதர்மர். ஆன்மிகப் போதனைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் இந்திய ஞானி இவர். நோக்கு வர்மக் கலையின் முன்னோடி, கராத்தே என இப்போது பிரபலமாகியுள்ள தற்காப்புக் கலையின் தந்தை, சிறந்த மருத்துவ அறிஞர், அக்குபஞ்சர் […]

Read more

மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-336-2.html எந்தவொரு மதத்தையும் சாராதவன் என்று தன்னைப் பற்றி கூறும் இந்நூலாசிரியர், மதம் சார்ந்த நம்பிக்கையான மறுபிறப்பு பற்றி வெளியான பல்வேறு செய்திகளையும், ஆய்வுகளையும் விருப்பு வெறுப்பு இன்றி இந்நூலில் தொகுத்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மெய்யியல் துறையின் பாடநூல்களில் ஒன்றாகவும் இந்நூல் உள்ளது. ஆன்மா அழிவற்றது. உடல்தான் அழியக்கூடியது என்பது அனைத்து மதங்களும் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு தத்துவம். […]

Read more

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான தகவல்கள், எஸ்.குருபாதம், மணிமேகலை பிரசுரம், பக். 372, விலை 250ரூ. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல் துறையில் ஆசிரியராக இருக்கும் குருபாதம் எழுதியுள்ள, இந்த நூலின் உள்ளடக்கம். பிறப்புக்குப் பின் பிறப்பு-இறப்பு குறித்து அலசுகிறது. ஆசிரியர் இந்த சர்ச்சைக்குரிய மிக சிக்கலான, நுட்பமான விஷயத்தை ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன், மிகுந்த பொறுப்புடன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு எழுதியிருக்கிறார். இவருடைய கருத்துக்களுடன் உடன்படுகிறோமோ இல்லையோ, நூலாசிரியரின் நேர்மையான அணுகுமுறைக்கு மதிப்பளிக்க வேண்டும். தமிழில் இது மாதிரியான, வித்தியாசமான புத்தகங்கள் வந்திருப்பதாகத் தெரியவில்லை. -ஜனகன். நன்றி: […]

Read more

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள்

மறுபிறப்பு பற்றியு ஆச்சரியமான தகவல்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, விலை 250ரூ. மறுபிறப்புத் தொடர்பான பல உறுதியான ஆவணங்களையும், செய்திகளையும் ஆழமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் எஸ். குருபாதம் தேடித் தொகுத்துள்ளார். குறிப்பாக மரணத்துக்கு பிறகும் வாழ்வு உண்டு என்ற கருத்தை இந்நூல் பிரதிபலிக்கிறது. சாக்ரட்டீஸ், காளிதாசர், திருவள்ளுவர், சேக்ஸ்பியர், சுப்ரமணிய பாரதியார் போன்றவர்களின் ஞானம், அறிவு, புத்திக்கூர்மை, திறமை போன்ற ஆற்றல்களுக்கு உந்து சக்தியாக, அவர்களின் ஞாபக கலங்களில் பதிவாகியிருந்த முந்தைய பிறப்புகளில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியே காரணமாக இருக்க வேண்டும் […]

Read more