மாணவர்களுக்கு வள்ளுவர்

மாணவர்களுக்கு வள்ளுவர், என். வீரகண்ணன், விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை 641001, பக். 168, விலை 100ரூ. இந்த நூலில், அறத்துப் பால், பொருட்பால் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள, 108 அதிகாரங்களில் உள்ள, 1080 குறட்பாக்களின் எளிய, இனிய உரைகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கற்கக் கசடற என்ற குறளை, கற்க வேண்டிய நூல்களை மிகத் தெளிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின் கற்ற கல்விக்குத் தக்கபடி நல்வழியில் வாழ வேண்டும் என்று சொல்கிறார். மாணவ, மாணவியர் படித்துப் பயன் […]

Read more

பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ. சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். […]

Read more