கவிதைப் பேழை

கவிதைப் பேழை, ஆ.கோ.குலோத்துங்கன், குகன் பதிப்பகம், விலை 350ரூ. காதல், அழகு, மழை, தனிஈழம் என மொத்தம் 82 தலைப்புகளில் 350க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கற்பனையில் உதித்த ‘ஹைக்கூ’ கவிதைகளின் தொகுப்பு. கருத்து மணம் பரப்பும், தமிழ் இன உணர்வை உரசும் கவிதைகள் சமகால நிகழ்வுகளை படம்பிடித்து காட்டும் வகையில் அமைந்துள்ளது. கண்ணியம் இதழில் வெளிவந்த கவிதைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027068.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?

நான் தேர்ந்தெடுக்கப்பட்டவளா?, நோசன் பிரஸ், சென்னை, விலை 350ரூ. 40 ஆண்டுகள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆங்கிலம் கற்பித்த ஆசிரியை அலிஸ் கே. ஜோஸ்ன் வாழ்க்கை வரலாற்று நூல். ஒரு சாதாரணப் பெண் கூச்சமும், மிரட்சியும் மிக்க ஒரு சாதுப்பெண் எவ்வாறு இறையருளால் மன உரம் பெற்றாள் என்பதைக் கூறுவதே நூலாசிரியரின் நோக்கம். சுயநலத்தோடும், வன்முறையோடும் தீயவற்றைச் சொல்லிலும், செயலிலும் மறைவாகவும், வெளிப்படையாகவும் வெட்கமின்றி வெளிப்படுத்தும் மனிதர்களிடையே நன்மையில் நாட்டம் கொண்டு குற்றங்குறைகளை நீக்கி வாழ முயற்சிப்போர் பலர் உள்ளனர். அவவ்கையில் நல்ல ஆசிரியையாக வாழ்ந்து […]

Read more

கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

சாகசப் பறவைகள்

சாகசப் பறவைகள், எஸ்ஸாரெஸ், அம்ருதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 35, பக். 138, விலை 90ரூ. To buy this Tamil book online –  www.nhm.in/shop/100-00-0001-918-6.html தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இந்தக் கதை புத்தகம் உருப்பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும், இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள், பெரும்பாலும் பெரியவர்களுக்குத்தான். ஆவலுடன் சாப்பிடச் செல்பவர்கள், டிரஸ்கோடு என்ற பெயரில் அவமானப்படுத்தும் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், வலுக்கட்டாயமாக கிரெடிட் கார்டுகள், அப்பாவிகளிடம் திணித்து, அவர்களை பாடுபடுத்தும் வங்கிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் பொது ஜனங்களுக்கு துன்பம் விளைவிக்கும் […]

Read more

அநீதி, நீதி, சமூக நீதி

அநீதி, நீதி, சமூக நீதி, தேவ். பேரின்பன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41, பி. சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, பக். 126, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-006-8.html ஆசிரியர் தேவ். பேரின்பன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர். மார்க்சியக் கொள்கைகள், தமிழியல் ஆய்வுகள், விவாதங்களை முன்னெடுக்கும் சமூக விஞ்ஞானம் இதழின் நிர்வாக ஆசிரியர். மார்க்சிய நோக்கிலான பல நூல்களின் ஆசிரியர் என்பதன் மூலம் இந்நூலின் சிறப்பை உணர்ந்து […]

Read more

இலக்கியத் திறனாய்வும்

இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ. படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்புதான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ்பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக்கண் கொண்டு இலக்கியத்தை பார்த்து அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைதான் திறனாய்வுகலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக […]

Read more