பஷீர் நாவல்கள்

பஷீர் நாவல்கள்; ஆசிரியர் வைக்கம் முகம்மது பஷீர், தமிழில்: குளச்சல் யூசுப், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.575/- தனிமனிதரின் உலகம் மிகப் பெரிய வெளிச்சங்களைத் தன்னகத்தே மிக ஆழத்தில் வைத்திருக்கிறது. ஆழத்தில் படிந்திருக்கும் அதிசயங்களைத் திறந்து காண்பித்தவர் பஷீர். எண்ணங்களிலும் வாழ்விலும் என்றுமே குறைந்திடாத பேரன்புகளைக் குழந்தைமையின் மாசில்லா வார்த்தைகளில் இலக்கியமாக்கியவர். வெவ்வேறு தருணங்களில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பஷீரின் எட்டு நாவல்களையும் தொகுத்து ‘காலச்சுவடு’ வெளியிட்டிருப்பது தமிழ் வாசகர்களுக்கான ஒரு அழகிய பரிசு. வைக்கம் முகம்மது பஷீரின் நுட்பமான எழுத்துகளையும், இழையோடும் நகைச்சுவையையும், […]

Read more

பெருவலி

பெருவலி, சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், விலை: 225 சுகுமாரனின் ‘பெருவலி’ நாவலில் வலி என்பது வலிமை, நோய்மை என்பதாக இருவேறு பொருள்களைத் தருகிறது. அதிகாரத்தின் வலியையும் அகவலியையும் கடந்த காலத்தினூடே நிகழ்கால அரசியல் அடக்குமுறைகளோடு பொருத்திப் பார்க்கும்படியான நிகழ்வுகளோடு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. வலிமை எங்கிருந்தாலும் அது அதிகாரத்தைக் கொண்டு அடக்குமுறைக்கு உட்படுத்தி அடிமையாக்கலாம் என்பதை நாம் வரலாறு நெடுகக் காண்கிறோம். ஷாஜகானின் மகள் இளவரசி ஜஹானாராவைப் பற்றி மிகுபுனைவு இல்லாமல் அவளின் அந்தரங்க நாட்குறிப்புகளை வைத்துக் கவித்துவ மொழியில் இந்நாவலை எழுதியுள்ளார் சுகுமாரன்.   அரச குலத்துப் பெண்களின் […]

Read more

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும்

தமிழ் குழந்தை இலக்கியம் விவாதங்களும் விமர்சனங்களும், சுகுமாரன், தாமரை பப்ளிகேஷன்ஸ், பக். 134, விலை 115ரூ. சிறுவர் இதழ்கள் எங்கே போயின? மகாகவி பாரதியாருக்கு, ஒருநாள் அசா தாரணமான சூழ்நிலை ஏற்பட்டது. மனைவி செல்லம்மா வெளியில் போய்விட்டார். குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பாரதியாருக்கு. குழந்தையிடம், பாட்டுப் பாடட்டுமா என்று கேட்கிறார். இப்போது பாடக் கூடாது. தூங்கும்போதுதான் பாட வேண்டும் என்று குழந்தை அவருக்குச் சொல்கிறது. குழந்தையின் உலகத்தை விளக்கும் பதிவு இது. குழந்தைக்fகுப் பாட்டு எழுதும்போது, குழந்தையின் நிலையில் இருந்து துவங்கவேண்டும். […]

Read more

தனிமையின் நூறு ஆண்டுகள்

தனிமையின் நூறு ஆண்டுகள், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், தமிழில்-ஞலன் சுப்பிரமணியன், சுகுமாரன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை 350ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html கதை சொல்லும் முறையில் புதிய திசைகள் திறந்துவிட்ட எழுத்து மார்க்கேஸுடையது. மகோந்தா என்ற நகரம் உருவாவதிலிருந்து அழிவது வரை அதை உண்டாக்கிய குடும்பத்தின் வழிவழியாய் வருகிற மனிதர்களைச் சுற்றிப் போகிறது கதை. ஒரே மூச்சில் படித்து மூடும் வேகம் கொண்டவர்களுக்கல்ல இந்தப் புத்தகம். ஒரு நகரத்தின் பிறப்பு, எழுச்சி, வீழ்ச்சி என்பது எந்தவொரு நாடு, […]

Read more

பாரதி குழந்தை இலக்கியம்

பாரதி குழந்தை இலக்கியம், சுகுமாரன், உலகத் தமிழர் பதிப்பகம், 4, சவுராஸ்டிரா நகர், சூளைமேடு, சென்னை 94, விலை 70ரூ. பாப்பா பாட்டை தவிர குழந்தை இலக்கியத்திற்கென்று எதையும் பாரதியார் எழுதவில்லை என்று சிலர் எண்ணுகிறார்கள். அதனை பொய்பிக்கும் வகையில் மகாகவி பாரதியார் எழுதிய பாடல்கள், கதைகளில் இருந்து குழந்தை இலக்கியம் என்னும் தலைப்பில் ஒரு நூலை தொகுத்து வழங்கி உள்ளார் ஆசிரியர் சுகுமாரன். இந்த நூலில் பாரதியாரின் கவிதைகள், கதைகள் இடம் பெற்று உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/2012.   —-   […]

Read more