புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2),  டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ. அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க […]

Read more

நடராஜ தரிசனம்

நடராஜ தரிசனம், டாக்டர் சி.எஸ். முருகேசன், பக். 400, விலை 275ரூ. ஆதியும் அந்தமும் முதல், எங்கும் சிதம்பரம் வரை, மொத்தம் 25 தலைப்புகள் இந்த நூலில் உள்ளன. அசையாத ஐந்தெழுத்து மந்திரத்தின் அசையும் வடிவம்தான் அவர் நடனம் என்ற ஆய்வுக் குறிப்பும், இறைவன் ஆடிய ஆதி நடனம் எது என்ற கேள்விக்கு, சங்க இலக்கியங்களுள் ஒன்றான கலித்தொகையிலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதும் சுவையானவை. இறைவன் ஆடிய ஆதிக்கூத்து, மூவகை தாண்டவத்திலிருந்து நூற்றெட்டு தாண்டவ வகை வரை அனைத்தையும் வரிசைப்படுத்தி, படங்களோடு பல செய்திகளை நூலாசிரியர் […]

Read more

மண்வாசம்

மண்வாசம், தமிழச்சி தங்கபாண்டியன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 144, விலை 85ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-449-7.html தமிழகத்தின் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய கிராமத்து மணம் மாறாத எளிமையான சுவையான கட்டுரைகள் இந்நூலில் பளிச்சிடுகின்றன. மண்ணும் மருத்துவமும் என்ற பகுதியில் அனைவருக்கும் பயனளிக்கும் இயற்கை மருத்தவத்தின் மகிமைகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்களுக்கு கை வைத்தியம் முதல் பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. கிராமங்களில் வாழும், வாழ்ந்துகொண்டிருக்கும் கதாபாத்திரங்களின் பண்புகள் நகைச்சுவை கட்டுரைகளாக, […]

Read more