மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

மஹத்

மஹத், முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்ப்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ. எழுச்சியின் தொடக்கம் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான ஆனந்த் டெல்டும்ப்டே சமீபத்தில் எழுதி பெரும் கவனத்தைப் பெற்ற நூலின் மொழியாக்கம். தலித் இயக்கத்தின் தொடக்கமாகக் கருதப்படும் 1927-ம் ஆண்டு மஹத் மாநாடுகளை, அதற்கு முன்பு நடந்த உரிமைப் போராட்டங்கள், உலகளவிலான எழுச்சிகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அதன் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கும் பகுத்தாய்வு. ஆவணக் காப்பகத் தரவுகள், இதுவரை மராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன், அகநி, 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி 604408, பக். 400, விலை 300ரூ. இந்தியரின்-தமிழரின் சமூக, மதம் சார்ந்த கலாசார வாழ்க்கையின் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு குறிப்பிடத் தகுந்த, முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்திய தேவதாசி முறை பற்றித் தமிழில் முதன் முதலாக வெளிவரும் முழுமையான ஆய்வு நூல் இது என்று இந்நூலில் அறிமுகம் எழுதப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூலில், பன்னிரெண்டு தலைப்புகளில், தேவதாசி முறையின் தோற்றம், வளர்ச்சி, வாழ்க்கை […]

Read more

தமிழகத்தில் தேவதாசிகள்

தமிழகத்தில் தேவதாசிகள், முனைவர் கே. சதாசிவன், தமிழில்-கமலாலயன். பெண்கள் சார்ந்தும், பெண்ணியம் சார்ந்தும் எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் அவற்றில் சில மட்டுமே முழுமைபெற்றவையாக இருக்கின்றன. ஆனால் முனைவர் சே. சதாசிவன் எழுதி, கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் தமிழகத்தில் தேவதாசிகள் என்ற புத்தகம், தன் இலக்கைக் கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இரந்துவந்த தேவதாசி நடைமுறையைப் பற்றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். கோயில் திருப்பணிக்காகவும், சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள்தான் தேவதாசிகள் என்றழைக்கப்படும் தேவரடியார்கள். பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் நூற்றாண்டு வாக்கில் […]

Read more