கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும், தா. பாண்டியன், என்.சி.பி.எச். வெளியீடு, விலை 140ரூ. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தா.பாண்டியன், ‘கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் மார்க்ஸின் வாழ்க்கையைக் கூறும் அதே நேரம், இந்தியா குறித்து மார்க்ஸ் கூறிய முக்கிய பகுதிகளைப் பற்றியும் விவரிக்கிறது. இந்தியாவின் வறுமை குறித்து ஆராய்ந்த தாதாபாய் நௌரோஜியும் மார்க்ஸும் பிரிட்டிஷ் அருங்காட்சியக நூலகத்தில் அடுத்தடுத்த அறைகளில் ஒரே பிரச்சினையின் வெவ்வேறு பரிமாணங்கள் பற்றி பல ஆண்டுகளுக்கு ஆராய்ந்ததைச் சுட்டிக்காட்டுகிறது. சோஷலிச […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்,  தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.140. கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங்களிப்பையும் எடுத்துக் கூறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நாளில், அதனை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அந்தச் சிந்தனையை எவ்வாறு பெற்றார்? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. கார்ல்மார்க்ஸ் அவருடைய இளமைப் பருவத்திலேயே பைபிளின் ஆதியாகமத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கியது, […]

Read more

பொதுவுடைமையரின் வருங்காலம்?

பொதுவுடைமையரின் வருங்காலம்?, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 250ரூ. மார்க்ஸியத்தை சாமியாரிஸம் ஆக்கக்கூடாது! இப்படி ஒரு புத்தகத்தைக் கம்யூனிஸ்ட் விமர்சகரோ அல்லது எதிரியோ எழுதி இருந்தால், கம்யூனிஸ்ட்டுகள் (எல்லா பிராண்ட் கம்யூனிஸ்ட்டுகளும்தான்!) அந்த நபர் மீது விழுந்து பிறாண்டி இருப்பார்கள். ஆனால், எழுதியவர் ஒரு கம்யூனிஸ்ட். அதுவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர். அதுவும், தா. பாண்டியன் என்பதால் மார்க்ஸியப் புத்தகங்களை மலையளவு வெளியிட்டுள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இந்தப் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறது. ‘பொதுவுடைமை’ என்ற […]

Read more

மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.204, விலை ரூ.170. சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நூலாசிரியர், மேடைப் பேச்சு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தலைவர்களின் மேடைப் பேச்சுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வாறு பயன்பட்டன? சுதந்திரப் போராட்ட காலத்தில் “மேடை ஏறியோர்க்கு மேடையில் ஏறுவது தெரியும்; இறங்கியவுடன் எங்கு போவோம் என்பது தெரியாது. ஏறினால் ரயில் – இறங்கினால் ஜெயில்’‘ என்ற நிலை அப்போது இருந்தது என்பன போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. […]

Read more

கம்பனின் அரசியல் கூட்டணி

கம்பனின் அரசியல் கூட்டணி, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 140ரூ. கடந்த காலத்தில் படைக்கப்பட்ட ஓர் இலக்கியம், நிகழ்காலத்தில் எப்படிப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது இந்நூல். கிஸ்கிந்தாவில் சுக்கிருவனின் உதவியை ராமன் நாடவேண்டி வருகிறது. ஏனெனில் சீதையைக் கவர்ந்து சென்றவன் ராவணன் என்பதைத் தெரிந்து கொண்டபின், தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கவும், துயரில் சிக்கிவிட்ட மனையாளை மீட்கவும், வலிமை மிக்க, வரபலம், படைபலம், தம்பியர் துணை, ஆட்சி அதிகாரம் கொண்டுள்ள ராவணனை எதிர்க்க இருவரின் வில்கள் மட்டுமே போதாது […]

Read more

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

மார்க்சிய சிந்தனை சுருக்கம் (மூலதனம் பற்றிய எளிய விளக்கம்), தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 184, விலை 135ரூ. சமூக விஞ்ஞானி கார்ல் மார்க்ஸி எழுதிய மூலதனம் என்ற நூலின் சாராம்சத்தை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள நூல். பொருளியல் அறிவுடையவர்கள் மட்டுமே மார்க்ஸின் மூலதனத்தைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி, பாமர மனிதர்களும் மூலதனத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற பெரிய முயற்சியின் நூலாசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த நூலை மார்க்சிய […]

Read more

நெல்சன் மண்டேலா

நெல்சன் மண்டேலா, தா. பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 308, விலை 260ரூ. நெல்சன் மண்டேலாவை தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் என்றோ, ஒரு போராளி என்றோ ஒரு சில வார்த்தைகளில் கூறிவிட முடியாது. நிற வெறியை எதிர்த்து தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களுக்காகப் பெரும் போராட்டமே நடத்தி, அதில் வெற்றியும் கண்டு, அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிய ஒரு மாமனிதர், ஒரு தியாகி. மண்டேலா சிறையில் இருந்தபோது அவரால் […]

Read more