திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசகர், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கவரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கெட்டி அட்டையில், சிறப்பாக, பைண்ட் செய்யப்பட்டுள்ளது. தினமும் எடுத்து வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது. நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்றது. திருவாசகத்தில் உருகும் பக்தர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பெட்டகம். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more

திருவாசகம்

திருவாசகம், இந்துமதி பதிப்பகம், சிதம்பரம், விலை 300ரூ. திருமுறைகளில் எட்டாம் திருமுறை திருவாசகம் ஆகும். திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் கூற்று. திருவாசகத்திற்கு இதற்கு முன்னர் பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்த போதிலும் பேராசிரியர் அ. ஜம்புலிங்கம் சீர்களைப் பிரித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை எழுதியுள்ளார். மேலும் மாணிக்கவாசகர் வரலாறு, திருவாசகத் தனிச் சிறப்பு போன்ற பல பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த உரை நூலில், மாணிக்கவாசகரின் பாடல் நயங்கள், சைவ சித்தாந்தக் கருத்துகள், […]

Read more

கங்கை கொண்ட சோழன்

கங்கை கொண்ட சோழன், பாலகுமாரன், விசா பப்ளிக்கேஷன்ஸ், நான்கு பாகங்கள் சேர்த்து  விலை 1630ரூ. மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி, மாமன்னராக விளங்கிய ராஜேந்திர சோழனின் வரலாற்றுப் பின்னணியில் மிக சுவாரசியமாக எழுதப் பெற்ற நாவல். சரித்திர நாவல் என்பது தகவல் களஞ்சியம் அல்ல. ஆய்வுக்கட்டுரை அல்ல. அது ஓர் உணர்வுப் பெருக்கு என்று கூறும் இந்த நாவலின் ஆசிரியர் பாலகுமாரன், தனது உணர்வுகளைத் திரட்டி, இந்த சிரித்திர நாவலைப் படைத்து இருக்கிறார். கப்பல்கள் கட்டும் திறன், கடற்பயணம், போர்க்களம் போன்றவற்றின் நுணுக்கங்களை உள்வாங்கி, […]

Read more

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை

என் பிள்ளைகளுக்குப் பரீட்சை, சுவாமி விமூர்த்தானந்தர், ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை 4, பக். 67, விலை 25ரூ. உள்ளுணர்வுக் கதைகள் என்று அழைக்கப்பெறும் 15 சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன படிக்கப் படிக்கச் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது. சிறுவர்கள் விரும்பிப் படிக்கவும் நல்ல வழியில் சிந்தனையை வளர்க்கும் படியான கதைகளைக் கொண்டிருப்பது சிறப்பு. அஃறிணையிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியருக்கிறது என்பதை அந்தப் பூனைகளின் குடும்பம், கொசு தர்மம் போன்ற கதைகள் உணர்த்துகின்றன. அன்பு என்ற கதை, […]

Read more