கடைத்தெருக் கதைகள்

கடைத்தெருக் கதைகள், ஆ. மாதவன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆ. மாதவன் தமிழ்ச் சிறுகதை உலகில் அனைவராலும் அறியப்பட்ட எழுத்தாளர். இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் அனைத்தும் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டு, அன்றைய சிற்றிதழ்களில் வெளியானவை. மறுபதிப்பு காண்பதும் இவை வெளியான சிற்றிதழ்களும் இத்தொகுப்பின் சிறப்புக்கு சாட்சியங்கள். திருவனந்தபுரத்தில் அங்காடி வீதியில் கடை வைத்திருந்தவர் பார்க்க நேர்ந்த மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையில் நேர்ந்த, நேர்ந்திருக்கக்கூடிய, நேர்ந்திருக்க வேண்டிய சம்பவங்களின் நீட்சிதான் இந்தச் சிறுகதைகள். கடைத்தெருவில் சிற்றேவல் செய்தும், […]

Read more

குருதிப்புனல்

குருதிப்புனல், இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-072-1.html தமிழ்நாட்டில் நடந்த கலவரங்களில், தஞ்சை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நடந்த கலவரம் முக்கியமானது. மிராசுதாரர்களுக்கும், விவசாயிகளுக்கும் நடந்த தகராறில், விவசாயிகள் சுமார் 40பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்ற சிறந்த நாவல். உணர்ச்சியும் […]

Read more

அவர்கள் பெண்கள்

அவர்கள் பெண்கள், லூர்துமேரி, நாஞ்சில் பதிப்பகம், 67/1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 125ரூ. கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனித பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு. இயேசு உயிர்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில் இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதே நேரம் இறைப்பணியையும் தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த […]

Read more