பழமொழி நானூறு

பழமொழி நானூறு, புலியூர்க்கேசிகன், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்டு, பக். 200, விலை 160ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று பழமொழி நானுாறு. சங்க கால பழமொழிகளின் அடிப்படையில் முன்றுறை அரையனாரால் இயற்றப்பட்டது. வாழ்வியல் நெறியை, ‘நறுக்’கென்று சுருக்கமாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் பதியும்படி கூறப்பட்டு வருவதே பழமொழி. பட்டறிவைச் சாரமாக்கி ஐயத்திற்கு அப்பாற்பட்ட குறைந்த சொற்களால் பசுமரத்தில் அம்பைச் செலுத்துவதுபோல் கூர்மையாக வெளிப்படுத்தினர். பாடல்களின் பொது இயல்பு, பாட்டின் இறுதியில் வைக்கப்பட்டிருப்பதோடு, முன் இரண்டு அடிகளில் பொருள் உணர்த்தப்படுவது சிறப்பு. பாடல்கள் பழமொழிகளின் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம்

வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கம், வெளியிட்டவர் ம.மத்தியாசு, திருநெல்வேலி, விலை 600ரூ. இத்தாலி நாட்டில் பிறந்து இந்தியாவில் தமிழகத்திற்கு வந்து இறைபணி ஆற்றியதோடு தமிழ் மொழியை வளர்த்த வீரமாமுனிவர் வழங்கிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் என்ற நூலை மூலமும் பதப்பகுப்பும், தொகுப்பும் கொண்டு நேருக்கு நேர் உரை என்ற முறையில் புதுமையாக வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் ம. மத்தியாசு. வீரமாமுனிவர் தந்தருளிய இந்நூல் பழைய ஓலைச்சுவடிகளில் உள்ளதுபோல அடி பிரிக்காமல் தொடர்ச்சியாக உரைநடைபோல் அச்சிடப்பட்டுள்ளது மட்டுமல்ல, அனைத்தும் புதிய முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்நூல் வாசிப்பவர்களுக்கு […]

Read more