எங்கேயும் பெண்மை

எங்கேயும் பெண்மை, மு.வேல்முருகன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 55ரூ. ‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின் அவலம் அறிவீரோ? அழகுச் சிலையைப் பின்தொடர்ந்து காதல் மொழிகள் கூறுகிறார்; அவள் அதை ஏற்க மறுத்தாலோ அமிலத்தை முகத்தில் வீசுகிறார்’ என்ற கவிதை வரிகள், பெண்ணின் அவலத்தைக் கூறுவதாக உள்ளது. நன்றி: தினமலர்17/9/2017.

Read more

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்)

இலக்கியப் பதிவுகளில் மதுரை (இரு தொகுதிகள்), தொகுப்பாசிரியர்கள் : சு.சந்திரா, ரா.கவிதா, த.சுதந்திரமணி, பாவை பப்ளிகேஷன்ஸ்,  பக்.1208, விலைரூ.900. மதுரையில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை சார்பில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை இரு தொகுப்பு நூல்களாக்கி வெளியிட்டுள்ளனர். கற்காலம் முதல் தற்காலம் வரை மதுரையின் வரலாறு, கலை, பண்பாடு, மக்களின் வாழ்க்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதல் தொகுப்பில் ‘வரலாற்றுச் சிறப்பில் மதுரை39‘ […]

Read more

வெற்றிச் சிம்மாசனம்

வெற்றிச் சிம்மாசனம், ப. ஜான் கணேஷ், தி ஒரிஜினல்பிரிண்டிங் பிரஸ், விலை 60ரூ. “நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை அர்த்தப்படும், யோசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், வாழ்க்கை வசப்படும்” என்பார்கள். அதுபோல வாழ்க்கை வசப்படவும், வெற்றி நிசப்படவும் வழிகாட்டிடும் புத்தகம் இது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.   —- கார்ல் மார்க்ஸ், வெ. சாமிநாத சர்மா, பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 120ரூ. தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில், மார்க்சியத்தைப் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் தமிழக மக்கள் அறிந்து […]

Read more

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர்

தமிழக வரலாற்றுத் தடத்தில் மகளிர், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 220ரூ. வரலாற்றில் மகளிரையும், மகளிரின் வரலாற்றையும் வெளிக்கொணரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி நூலாகும். தொடக்க காலத்திலிருந்து தமிழக மகளிர், சமூக சீர்திருத்தங்களும் மகளிர் இயக்கங்களும், மகளிர் கல்வி, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – தன்னாட்சி இயக்கம் வரை, விடுதலைப் போராட்டத்தில் தமிழகப் பெண்கள் – காந்தியின் காலம், பெண்களும் வாக்குரிமை இயக்கமும், பெண்களின் ஆரோக்கிய நல முன்னேற்றம் ஆகிய ஏழு தலைப்பின் கீழ் சங்க காலம் முதல் 1947 வரையிலான நிகழ்வுகளை சான்றுகளின் […]

Read more

தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ. தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- 1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ. பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , […]

Read more

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்

ஜி.சுப்பிரமணிய ஐயர் சரித்திரம், செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 142, விலை 90ரூ. சமகால வரலாற்று ஆவணம்! திருவையாறு எனும் ஊரில் பிறந்து, பள்ளி ஆசிரியராக நுழைந்து, கல்லூரி ஆசிரியராக உயர்ந்து, ஐந்து பேரை இணைத்துக்கொண்டு, 1878ல் ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பத்திரிகை துவங்கி, 1882ல் ‘சுதேச மித்திரன்’தமிழ் பத்திரிகை துவங்கி, விடுதலைப் போருக்கு உழைத்த தியாகி ஜி. சுப்பிரமணிய ஐயரின் வரலாற்று நூல் இது. இதில் சிறப்பு என்னவென்றால், அவர் வாழ்ந்த காலத்திலேயே, 1907ம் ஆண்டில், குருமலை சுந்தரம் பிள்ளை என்பவர், […]

Read more

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு

இருபதாம் நூற்றாண்டு தலித் தமிழ்ச் சிற்றிதழ்களில் தலித் பண்பாடு, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 244, விலை 170ரூ. எதிர்ப்பு நிலையும் இருப்பு நிலையும் ஆய்வேடுகள் வெகுமக்களால் படிக்கப்படும் நூலாக வெளிவருவது அரிது. எழுதியவரையும் விடை மதிப்பீட்டாளரையும் மிக இம்சிக்கும் ஆற்றலுடைய ஆய்வேடுகள், அப்படிக் காணாமற்போதல் காலவிதி. ஆனால், ஜோஸ்பின் மேரி வழங்கியிருக்கும் இந்த ஆய்வேடு படிக்க தூண்டுவதாகவும் பொருண்மை உடையதாகவும் இருக்கிறது. அயோத்தி தாச பண்டிதர் காலத்திலேயே அடியரம் இடப்பட்ட தலித் தொடர்ச்சியானது, 20ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் வீறார்ந்து செயல்பட்டதை, நுண்மையாக அகலத்தோடும் […]

Read more

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம்

ஜி. சுப்பிரமணிய ஜயர் சரித்திரம், குருமலை சுந்தரம் பிள்ளை, பதிப்பாசிரியர் செ. ஜெயவீரதேவன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 124, விலை 90ரூ. புதிய விழிப்பின் ஆதின கர்த்தர்களில் ஒருவர் என்று பாரதியால் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். ஒரே நேரத்தில் அரசியல், சமூக சீர்திருத்தம், இதழியல் என பல நிலைகளில் செயல்பட்ட முன்னோடி. சமூக சீர்திருத்தத்தை வெறும் வார்த்தைகளில் மட்டுமின்றி, நடைமுறை வாழவிலும் கடைப்பிடித்தவர். மூத்த மகள் தம் பன்னிரண்டாவது வயதில் கணவனையிழக்க அதே ஆண்டின் இறுதியில் அப்பெண்ணுக்கு அவர் மறுமணம் செய்து […]

Read more

லட்சுமி என்னும் பயணி

லட்சுமி என்னும் பயணி, லட்சுமி அம்மா, மைத்ரி புக்ஸ், விலை 180ரூ. சிறு வயதிலேயே குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, பதின்ம பருவத்தில் வேலைக்கு சென்று, தொழிற்சங்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு போராட்டவாதியாக வாழ்ந்து வரும் லட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி என்று தனது போராட்ட தளத்தை விரிவாக்கிய லட்சுமி, குழந்தை பருவம் முதல் அன்றாடம் எதிர் கொண்ட சோதனைகள், வேதனைகளை நெஞ்சை தொடும்படி வடித்திருக்கிறார். போராட்டம், அரசியல், உழைப்பு என பொதுவாழ்வில் ஈடுபடும் […]

Read more

மார்கஸ் எங்கல்ஸ் பேசுகிறார்கள்

மார்கஸ் எங்கல்ஸ் பேசுகிறார்கள், எஸ்.தோதாத்திரி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 82, விலை 50ரூ. கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரின் மூல நூல்கள் தற்போது கிடைப்பது அரிதாகிவிட்டது. ஆனால் மார்க்சியத்தை விளக்கும் நூல்கள் தாராளமாகக் கிடைக்கின்றன. மார்க்சிகயத்தைப் பற்றி பிறர் எழுதிய நூல்களில் இருந்து மார்க்சியத்தை விளக்காமல், மார்க்சின் மூல நூல்களிலிருந்து மார்க்சியத்தை விளக்கினால் என்ன? என்ற எண்ணத்தின் விளைவாக இந்நூல் உருவாகியுள்ளது. இந்நூலில் ஒன்பது கட்டுரைகள் அடங்கியுள்ளன. மார்க்சின் தத்துவம், அரசியல், பொருளாதாரக் கருத்துகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன. ‘கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான […]

Read more
1 2 3 6