உலக சினிமா வரலாறு

உலக சினிமா வரலாறு, வேட்டை எஸ்.கண்ணன், புதிய கோணம், விலை 495ரூ. சினிமாவை, அர்ப்பணிப்பு உணர்வுடன் அறிந்து கொள்ள விரும்புவோருக்கு, இந்த புத்தகம் ஒரு பொக்கிஷம். ஒரு குறிப்பிட்ட மொழி திரைப்படங்கள் என்ற எல்லைக்குள் சிக்கி விடாமல், பிரபலமான ஒவ்வொரு மொழிகளிலும், திரைப்படத் துறையின் சாதனைகளை பட்டியலிட்டுள்ளார், ஆசிரியர். இந்த புத்தகத்தை, சினிமாவின் வாழ்க்கை வரலாறு என, தாராளமாக கூறலாம். நன்றி: தினமலர், 16/9/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

உலக சினிமா வரலாறு

உலக சினிமா வரலாறு, ஜாக் சி.எல்லுஸ், தமிழில் வேட்டை எஸ். கண்ணன், புதிய கோணம், பக். 608, விலை 495ரூ. சினிமாவின் துவக்க காலத்திருந்து துவங்கி, நவீன காலம் வரையில், ஆங்கிலத்தில் வெளிவந்த, ஜாக்சி எல்லீஸின் (A History of film) என்ற நூல், உலக சினிமாவின் வரலாற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தும் நூல். இந்நூலை, வேட்டை எஸ்.கண்ணன் அழகு தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் வாசகர்களுக்கு அளித்துள்ளார். புதிய சாதனமான சினிமாவின் குழந்தை பருவம், 1895 – 1914 அமெரிக்க சினிமாவின் எழுச்சி, 1914 […]

Read more

அவமானம்

அவமானம், மண்ட்டோ படைப்புகளின் தொகுப்பு, தமிழக்கம்-ராமாநுஜம், பாரதி புத்தகாலயம், பக். 96, விலை 60ரூ. மண்ட்டோ நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென் சென்னை மாவட்டக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக் காலத்தின் அவலங்களை, துயரங்களை, கொடுமைகளை நேரில் கண்டு வெம்பியவர் மண்ட்டோ. அவரது சிறுகதைகளில் மிகுந்த துயரம் குடி கொண்டிருக்கும். பெண்கள் எந்த அளவுக்குக் கொடுமைக்குள்ளானார்கள் என்பது வெளிப்படும். மனிதாபிமானம் வெளிப்படும். அவர் அவற்றை வெளிப்படுத்தியவிதம் ஆபாசமானது என்று நீதிமன்றம் வரை […]

Read more