மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார், முகிலை ராசபாண்டியன், முக்கூடல், பக். 64, விலை 60ரூ. நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதை உணர்ந்து, உணர்த்தியவர். அதனால்தான், மன்னர் குலத்தில் உதித்த நம்மாழ்வாருக்குச் சீடரானார். அவரைப் போற்றி, ‘கண்ணி நுண் சிறுத்தரம்பு’ என்ற நூலையும் பாடினார். மதுரகவி ஆழ்வாரின் வரலாறு மிக எளிய நடையில் நூலாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் வரலாற்று நூல்களில் தனிச்சிறப்புப் பெற்றது. நன்றி: தினமலர், 24/5/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

சங்ககால வானிலை

சங்ககால வானிலை, முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன், முக்கூடல், பக். 272, விலை 300ரூ. வானிலையும் காலநிலையும்தான் மனிதன் முதல் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வரை அத்தனையும் தோன்றக் காரணம். வானிலை குறித்து சங்ககாலத்திலேயே ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனை உணர்த்தும் வகையில் சங்க இலக்கிய நூல்களில் கோள்களின் இயக்கம் முதல், மேகம், மழை, இடி, மின்னல், வெப்பசலனம் என்று வானிலை சார்ந்த அத்தனை விஷயங்களும் இடம் பெற்றிருப்பதை உதாரணங்களுடன் விளக்கும் நூல். நம் முன்னோரின் வானிலை அறிவு(வியல்) நுட்பம் ஆச்சரியப்படவைக்கிறது. நன்றி: குமுதம், 6/11/19 . இந்தப் […]

Read more