கனவு மெய்ப்பட வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும், வெ. துரைசாமி, ஆப்பிள் பப்ளிகேஷன்ஸ், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 29. இந்நூலாசிரியர், இந்திய அளவில் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்கத் தலைவராக பல ஆண்டுகள் தொண்டாற்றியவர். இன்றைய அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்னைகளை படம்பிடித்துக் காட்டும் இந்நூலாசிரியர், இவற்றைக் களைந்து இந்தியாவை செழிப்பான ஒரு நாடாக ஆக்கிக் காட்டும் வழிகளை இந்நூலில் கூறியுள்ளார். வாசகர்களுக்குப் போரடிக்காமல் இருக்க, விறுவிறுப்பான நாவலாக இந்நூலை உருவாக்கியுள்ளார். ஒரு சாதாரண மனிதன் இறையருளால் பிரதமராகி, நாட்டுப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதுதான் கதைக்கரு. […]

Read more

கவியரசு கண்ணதாசனின் சிங்காரி பார்த்த சென்னை

சிங்காரி பார்த்த சென்னை, கவியரசு கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், தி.நகர், சென்னை 600017, பக். 184, விலை 80ரூ. சினிமாவில் நடிக்க வந்து மானத்தோடு ஊர்திரும்பும் ஒரு கிராமத்து பெண் ணமையமாக கொண்ட நூல். 32 ஆண்டுகளுக்கு பின் மறுபதிப்பாக மலர்ந்திருக்கிறது. ஒன்று நடிகைகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அல்லது நடுரோட்டில் அலைகிறார்கள். சில நடிகைகள் கடத்தல் மன்னர்களை கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் சம்பாதிப்பதற்கு தங்கள் உடம்பைக் கொடுத்து, நானும் என் கணவரும் அமெரிக்காவிற்கு போகிறோம், ஜெனீவாவிற்கு போகிறோம் என்று பேட்டி கொடுக்கிறார்கள். […]

Read more

திமிறி எழு

திமிறி எழு, அ. ஜெயசீலி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை 98, பக். 72, விலை 40ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-985-1.html ஒரு பெண் பிறந்தது முதல் சமுதாயத்தில் என்னென்ன பிரச்னைகளுக்கெல்லாம் ஆளாகிறாள் என்பதை எடுத்துக்காட்டுகளுடனும் புள்ளி விபரங்களுடனும் கூறியிருக்கிறார் நூலாசிரியர். குழந்தை பாலியல் வன்முறை, இளம்பருவம், தாய் என்ற தியாகத் திருவுருவம் என ஒரு பெண்ணின் அனைத்து நிலைகளிலும் நின்று அலசியுள்ளார். திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் ஆகியவற்றில் பெண்கள் இழிவுபடுத்தப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்ணுக்கு […]

Read more

இலக்கியத் திறனாய்வும்

இலக்கியத் திறனாய்வும், படைப்பிலக்கியமும், முனைவர் ந. வெங்கடேசன், குகன் பதிப்பகம், 5, வி.கே.கே. பில்டிங், வடுவூர் 614019, பக். 208, விலை 150ரூ. படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்புதான். நூலைப் படைத்தவனைக் காட்டிலும், திறனாய்வாளன் புகழ்பெறும் அளவிற்கு, திறனாய்வு உலகம் வளர்ச்சி பெற்றுள்ளது. இலக்கியம் உணர்வினை வெளிப்படுத்தினால், அதில் அறிவினை செலுத்துவது திறனாய்வு. அறிவுக்கண் கொண்டு இலக்கியத்தை பார்த்து அதன் ஆழ, அகலப் பரிமாணங்களை நுணுக்கமாக வெளிப்படுத்தும் கலைதான் திறனாய்வுகலை. அந்த திறனாய்வு கலை நுட்பங்களை, இந்த நூல் அழகாக […]

Read more

ஆய்வுச் சுடர்கள்

ஆய்வுச் சுடர்கள், முனைவர் ந. வெங்கடேசன், அய்யா நிலையம், பக். 112, விலை 70ரூ. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு, முந்தைய இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை, எதையும் விடாமல் அத்தனையையும், திறனாய்வு நோக்கில் இந்த நூல் அணுகுகிறது. பள்ளு என்னும் சிற்றிலக்கியம் காட்டும் மருத நில வளத்தையும், சைவத் திருமுறைகள் காட்டும் வாழ்வியல் செய்திகளையும், அழகாக ஆய்வுக்குட்படுத்தியுள்ளார் ஆசிரியர். மு.வ. எனச் சுருக்கமாக அழைக்கப்பெறும், மு. வரதராசனாரின் உரைநடைத் திறனை வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டிற்குரியது. தமிழ் இலக்கிய அறிமுகத்தையும், ஆய்வையும் நோக்கில் படையெடுக்கப்பட்டுள்ள இந்த […]

Read more