அப்பாவின் கதை

அப்பாவின் கதை, நடின் கார்டிமர், தமிழில் பட்டு எம். பூபதி, ராஜராஜன் பதிப்பகம், பக். 328, விலை 125ரூ. நடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற, புகழ்மிக்க தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவல் அப்பாவின் கதை. இது நிறவெறி காலனி ஆதிக்க அதிகாரக் கொடுமையை எதிர்த்துப் போராடும் ஆப்பிரிக்க மக்களின் கதை. ஓர் ஆணுக்கும், இரண்டு பெண்களுக்கும் இடையில் மலரும் அன்பு, ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் உள்ள அன்பு, ஒரு மனிதனை அவன் தேசத்தின் இனத்தின் அடிமைத்தளையினை […]

Read more

அடைமழை

அடைமழை, ராமலக்ஷ்மி, அகநாழிகை பதிப்பகம், மதுராந்தகம், விலை 100ரூ. நடுத்தர வர்க்கத்திற்கு மிக அருகில் இருக்கக்கூடிய எழுத்து சமீப காலங்களில் அருகிவிட்டது. நடுத்தர வர்க்கமும் அவர்களுக்கான எழுத்தாளர்களும் காட்சி ஊடகங்களுக்கு மாறிவிட்டார்கள் என்று நினைத்த தருணத்தில் காட்சி தருகிறார்கள் ராமலக்ஷ்மி போன்ற எழுத்தாளர்கள். மிக சுவாரஸியமான நடையில், சிறந்த சிறுகதைகளை வழங்கியிருக்கிறார் ராமலக்ஷ்மி. வாழ்வின் அபத்தங்கள் முரண்பாடுகள், உறவுச் சிக்கல்களை மிக நயமாக தனது கதையில் எடுத்துக்காட்டிச் செல்கிறார் ராமலக்ஷ்மி. ஒவ்வொரு கதையிலும் முதல் வரியிலேயே கதை ஜிவ்வென பயணிக்கத் துவங்குகிறது. அதனால் முதல் […]

Read more

கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more