நீண்ட காத்திருப்பு

நீண்ட காத்திருப்பு, கொமடோர் அஜித் போயகொட, சுனிலா கலப்பதி, தமிழில்: தேவா, வடலி வெளியீடு, விலை: ரூ.220. வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் என்ற ஒன்று இல்லை; ஆனால், ஒரு அர்த்தத்தை நம்மால் உருவாக்கிக்கொள்ள முடியுமானால், அது தரும் அலுப்பையும் விரக்தியையும் நொறுக்க முடியும். கவிஞன் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி சொல்வதுபோல மரணத்தை ஒத்திப்போட நம்மால் முடியாமல் இருக்கலாம். ஆனால், அன்றாடத்தில் உணரும் சவத்தன்மையை நம்மால் நிச்சயம் அகற்ற முடியும். கலை, அறம், உண்மை, நேசம் போன்ற ஏதோவொன்று அர்த்தத்தையும் நம்பிக்கையையும் தருவதாக உள்ளது. இலங்கையின் கடற்படையில் […]

Read more

யுத்தத்தின் முதலாம் அதிகாரம்

யுத்தத்தின் முதலாம் அதிகாரம், தேவகாந்தன், வடலி வெளியீடு, பக்.232, விலை ரூ.230. இன்று நடப்பவை நேற்றின் தொடர்ச்சியாகத்தான் இருக்கின்றன. ஈழத்தில் மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டதும் அதற்கு விதிவிலக்கல்ல.கி.பி.1800-க்கு முன்பு யாழ்ப்பாணத்தை டச்சுக்காரர்கள் ஆண்ட காலத்தில் டச்சுப் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்தப் படைவீரர்களை தமிழ் மக்கள் கொன்றழித்ததும் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு இடையில் இருந்த சாதி மோதல்கள் பல்வேறு வகைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. அது தாழ்ந்த சாதிப் பிரிவினர் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது. […]

Read more

சாகசக்காரி பற்றியவை

சாகசக்காரி பற்றியவை, தான்யா, வடலி வெளியீடு, சென்னை, விலை 50ரூ. புலம் பெயர்ந்து கனடாவில் கடந்த 20 ஆண்டுகளாக வாழும் கவிஞர் தான்யாவின் கவிதைநூல். புலம் பெயர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளே கதைகளின் மையக்கரு. பெண்களை குடும்ப அமைப்பும் சமூக அமைப்பும் எப்படி போர்க்குணம் அற்றவர்களாக மாற்றி தன்னலம், குடும்பநலம் என்கிற குறுகிய வட்டத்திற்குள் சுற்றவைக்கிறது என்பதை பதிவு செய்ததோடு அச்சூழலில்லிருந்து வெளிவர போராடிக் கொண்டிருக்கும் சாகசக்காரிகளைப் பற்றிய கவிதைகள் இவை. குடும்பம், குடும்ப உறவுகளுடனான போரே இதன் பாடுபொருளாகியிருக்கிறது. பேராற்றல் மிக்க பெண்களை […]

Read more

கொலம்பசின் வரைபடங்கள்

கொலம்பசின் வரைபடங்கள், யோ. கர்ணன், வடலி வெளியீடு, சென்னை, விலை 55ரூ. மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது ஈழத்தின் இன்றைய நிலை குறித்த யோ. கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் […]

Read more