வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4)

வரலாறு படைத்த வைர மங்கையர் (தொகுதி 4), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், விலை 150ரூ. ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் இன்றைய உலகில் பெண்கள் கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம். சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் இளம் பெண்களிடையே ஒரு உத்வேகத்தை தூண்டும் வகையில், சாதனை புரிந்த வைர மங்கையர்களின் வரலாற்று தரவுகளை சுவைபட படைத்துள்ளார் ஆசிரியர். நாம் இதுவரை அறியாத, விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற சில சாதனை பெண்மணிகளின் தகவல்களையும் இந்நூல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது இலக்கை […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர் (2 தொகுதிகள்)

வரலாறு படைத்த வைர மங்கையர் (2 தொகுதிகள்), பேராசிரியர் பானுமதி தருமராசன், புதுகைத் தென்றல், பக். 304, 208, விலை 200ரூ, 150ரூ. வரலாறு படைத்த இந்திய பெண்களின், வாழ்க்கை வரலாறு, இரண்டு நூல்களில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில், ஆங்கிலேயரை தோற்கடித்த முதல் பெண்ணான வேலு நாச்சியாரில் துவங்கி, ராமநாதபுர மாவட்டத்தின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க மணிமுத்தாறு அணைத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, தீக்குளிப்பு போராட்டம் வரை சென்ற ரமணி நல்லதம்பி எம்.எல்.ஏ., வரை மொத்தம் 38 பெண்களின் வரலாறு இரு பாகத்திலும் இடம்பெற்றுள்ளது. […]

Read more

வரலாறு படைத்த வைர மங்கையர்

வரலாறு படைத்த வைர மங்கையர், புதுகைத் தென்றல் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. நாட்டுக்கு உழைத்து வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் வரலாற்றை மனதைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் பேராசிரியர் பானுமதி தருமராசன். இரண்டு பாகங்களாக புத்தகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், ஈ.வெ.ரா. நாகம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி அருண்டேல் உள்பட 22 பேருடைய வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இப்புத்தகத்தின் விலை 200ரூ. அடுத்த புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி தேவி,அம்மு சுவாமிநாதன், கேப்டன் லட்சுமி […]

Read more