கந்த புராணம்

கந்த புராணம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், விலைரூ.150 பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தை உரைநடையாக, 43 அத்தியாயங்களில் வழங்கும் நுால். கம்ப ராமாயணத்தைப் போல் ஆறு காண்டங்களைக் கொண்ட கந்த புராணத்தை, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளினார். அவருக்கு முருகப் பெருமானே அடி எடுத்துக் கொடுத்ததுடன், இலக்கணத் தெளிவையும் வழங்கினார் என்பது புராணம். அந்த வரலாற்றை விரிவாகத் தெரிவித்திருப்பதுடன், கந்த புராணச் செய்திகள் அனைத்தையும் எளிய மொழி நடையில் தெரிவிக்கிறது. வள்ளி திருமணத்துடன் நிறைவடையும் கந்த புராணத்தைத் திருத்தணி என்னும் திருத்தலத்துடன் […]

Read more

ஸ்ரீ விநாயக புராணம்

ஸ்ரீ விநாயக புராணம், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், விலைரூ.150 வியாசர் எழுதிய பதினெட்டு புராணங்களில் விநாயக புராணம் உபபுராணம் ஆகும். பிருகு முனிவர், வேதவியாசரிடம் கேட்ட விநாயக புராணத்தை வடமொழியில் பாடினார். அதைப் பின்பற்றி, கச்சியப்ப முனிவர் தமிழில் பாடினார். இந்நுாலில், 38 பகுதிகள் உள்ளன. பிரம்மாவிடம், வியாசர் விநாயகர் சரிதம் கேட்டது, அரக்கர்களை அழித்த ஆனைமுகன் குறித்து எழுதியவை சுவையாக உள்ளன. – டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 22/11/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

64 யோகினிகள் மர்மங்கள்

64 யோகினிகள் மர்மங்கள், வேணு சீனிவாசன், சங்கர் பதிப்பகம், பக். 288, விலை 275ரூ. சக்தி தெய்வ வழிபாடு வழங்காலத்திலே உள்ளது. குடும்பங்களில், ‘இல்லுறை தெய்வம்’ என, கண்ணகியை வழிபட்டுள்ளனர். கொற்றவை, மாரியம்மன் தெய்வ வழிபாடு, கோவிலில் உள்ளது என, 64 யட்சிணி, யோகினி, டாகினியர், வரலாறு, வசியம், வழிபாடு பற்றி ஆய்ந்து எழுதியுள்ளார். யோகினிகள், தெய்வங்களா, பரிவார தேவதைகளா, ஏவல், பில்லி, சூனியம், வசியம் செய்ய உதவும் கூலிப்படைகளா என ஆய்ந்துள்ளார். ஆடு, மாடு, மனிதன் என்று காளிக்கு பலி தரும் வழக்கம், […]

Read more

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும்

ஸ்ரீ வேதாந்த தேசிகர் தமிழ்த் தொண்டும் சாதனைகளும், வேணு சீனிவாசன், மங்கை பதிப்பகம், பக்.368. விலை ரூ.250. ராமாநுஜருக்குப் பிறகு தோன்றிய மிகப் பிரசித்தமான விசிஷ்டாத்வைத ஆச்சார்யர் வேதாந்த தேசிகர். சம்ஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான நூல்களை இயற்றியவர். ஸ்தோத்திரங்கள், உரைகள், வேதாந்த விளக்கம், கவிதை, நாடகம் என்று பலவாறாக நூறுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றிஇருக்கிறார். அதுமட்டுமல்லாமல், உணவு உட்கொள்ளுதல் போன்ற அன்றாட வாழ்வு நடைமுறைகளில் நாம் ஒழுக்கத்துடன் இருந்தாலே, ஆத்மிக விஷயங்களிலும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க இயலும் என்பதன் பொருட்டு, அவற்றைப் பற்றியும் இரு […]

Read more

மச்ச புராணம்

மச்ச புராணம், வேணு சீனிவாசன், கிழக்கு பதிப்பகம், பக்.312, விலை 290ரூ. திருமாலின், 10 அவதாரங்களில், முதன்மையானது மச்ச அவதாரம். வியாச முனிவரால் எழுதப்பட்ட, 18 புராணங்களுள், மச்ச புராணத்திற்கு, தனி சிறப்பு உண்டு. மீன் வடிவெடுத்து, நீர்ப்பிரளயத்தில் இருந்து, இவ்வுலகை காத்தார் என்ற புராணத்தை, எளிய நடையில் ஆசிரியர் விளக்கியுள்ளார். ஆன்மிகம் நாட்டம் கொண்டோர், இந்நுால் வாசித்தால், மகிழ்ச்சி அடைவர். நன்றி: தினமலர், 10/1/2018

Read more

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்

வெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 145ரூ. தமிழகத்தில் வாழ்ந்த சித்தர்களில் சிறந்தவர் என்று போற்றப் பெறும் திருமூலர், 3,000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், திருமந்திரப் பாடல்கள், 3,000 இயற்றினார் என்றும் கூறுவர். திருமந்திரப் பாடல்களில் கூறப் பெற்றுள்ள கருத்துக்கள் மனித வாழ்க்கைக்குப் பயன்படுவன. முயலும் செயல்களில் வெற்றி பெற திருமந்திரம் துணை செய்யும். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்கள் பலவும் திருமந்திரத்தில் உள்ளன என்பதை நுாலாசிரியர் எளிய முறையில் விளக்கியுள்ளார். ‘அன்பும் சிவமும் இரண்டல்ல. […]

Read more

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது. இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் […]

Read more

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா

கருணை மிகுந்தவள் ஸ்ரீ காளி மாதா, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 256, விலை 225ரூ. இந்நூல் சார்ந்த மார்க்கத்தின் செய்திகளுள் சில, பலவற்றை எளிய நடையில் எடுத்துரைக்கும் நூலாகும். இறைவியின் நாம ரூப பேதங்களில் காளிகாதேவி என்பதும் ஒன்று. இந்நூலாசிரியர் தேவிபாகவதம், புராணங்கள், தல வரலாறுகள் போன்றவற்றை திரட்டி கற்று இந்நூலை படைத்துள்ளார். மொத்தம், 47 தலைப்புகளில் வழங்கியுள்ள இவரின் அரிய முயற்சி பாராட்டுக்குரியது. அனுக்ரகத் தாயான அவள் வடிவம் கோர வடிவம்; உபாசகர்களுக்கு வரம் கோர உரிய ஆனந்த சொரூபம். […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

ஸ்ரீ சக்கர ரகசியங்கள்

ஸ்ரீ சக்கர ரகசியங்கள், வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-587-4.html சிவனுக்கு லிங்கத்தையும், விஷ்ணுவுக்கு சாளக்கிரமத்தையும் வைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. ஆனால் அம்பாளுக்கு மட்டுமே ஸ்ரீ சக்கரத்தை வைத்து பூஜைகள் செய்கிறார்கள். இந்த ஸ்ரீ சக்கரத்தின் சிறப்புகளை இந்நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 9/10/13. —- அர்த்தமுள்ள வாழ்வுக்கு அறுபது வழிகள், நடராசன், பத்மா […]

Read more
1 2