மூலிகைக் காற்று வீசட்டும்

மூலிகைக் காற்று வீசட்டும், ஜெ.ஜெய வெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.110, விலை 100ரூ. சுற்றுச்சூழல் மாசாகி வரும் இக்காலத்தில் சுத்தமான காற்று எங்கே கிடைக்கிறது? தனிமனித முயற்சியால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும் என, இந்த நுால் மூலம் வழிகாட்டுகிறார், சித்த மருத்துவரான டாக்டர் ஜெயவெங்கடேஷ். ராசிக்கு பொருத்தமான மரத்தையோ, குலதெய்வத்தின் தலவிருட்சத்தையோ வீட்டில் நட்டு பராமரியுங்கள். மூலிகைச் செடிகளை வளருங்கள். சுத்தமான மூலிகை காற்று உங்களை சுற்றி வீசும் என்கிறார். நவக்கிரகங்கள், நட்சத்திரங்கள், வேதங்களில் தாவரங்கள் என அபூர்வமான தகவல்களுடன் தாவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. […]

Read more

மாமதுரை

மாமதுரை, பொ. இராசேந்திரன், சொ. சாத்தலிங்கம், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 282, விலை 250ரூ. பண்டைத் தமிழரின் இதிகாச, புராண, சங்ககால பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது மதுரை மாநகர். மதுரை நகரின் வரலாற்றை எழுதுவது எனும் பணியில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்களின் வரலாற்றை எழுதாமல் எழுத முடியாது என்பதைக் கூறும் நூலாசிரியர்கள் சங்ககாலப் பாண்டியர், முற்காலப் பாண்டியர், பிற்காலப் பாண்டியர் போன்றவர்களைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் கூறியுள்ளனர். பாண்டியர் இல்லையேல் தமிழ் இல்லை எனும் அளவுக்கு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் பாண்டியர்கள். […]

Read more

வேலை பெறத் தயாராகுங்கள்

வேலை பெறத் தயாராகுங்கள், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 150ரூ. வேலையில்லாத் திண்டாட்டம் என்பது நமது நாட்டில் படித்த இளைஞர்களுக்கு தடைக்கல்லாகவும், பெரும் சவாலாகவும் உள்ளது. அறிவும், திறமையும் உள்ள மாணவர்களுக்கு உகந்த வேலை இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அதைப் பெற இயலவில்லை. இதைப் போக்கும் வகையில் மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி எம். கருணாகரன், தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதிய கட்டுரைகள் இப்போது நூலாக வெளிவந்துள்ளது. வேலை பெறுவதற்கு வெறும் பட்டப்படிப்பு மட்டும் போதாது. கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள […]

Read more

ஸ்ரீ சங்கர தரிசனம் 2012

ஸ்ரீ சங்கர தரிசனம் 2012, பாரதி காவலர் கே. ராமமூர்த்தி. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகளின் 62வது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்ட ஆன்மிக சிறப்பிதழ். சிருங்கேரி மடத்தின் சிறப்புகள் கட்டுரையாக வெளியிடப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 22/9/2013.   —-   யோகா உங்கள் கையில், டாக்டர் ஜெ. ஜெயவெங்கடேஷ், ஷான்லாக்ஸ் பப்ளிகேஷன்ஸ், 61, டி.பி.கே.ரோடு, மதுரை, விலை 150ரூ.‘ உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது சிரிப்பு மட்டுமல்ல. யோகாவும்தான். இதை எப்படி முறையாக செய்வது என்பது குறித்து, 142 யோகாசனங்கள் […]

Read more