நேரு முதல் மோடி வரை

நேரு முதல் மோடி வரை, சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. 17 ஆண்டுகள் பதவி வகித்தார். பின்னர் அவர் மகள் இந்திரா காந்தி, பேரன் ராஜீவ் காந்தி ஆகியோரும் பிரதமராகப் பதவி வகித்தனர். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியும் என்றாலும், நேரு முதல் மோடி வரை மொத்தம் 15பேர் பிரதமர்களாக இருந்துள்ளனர் என்பது பலருக்குத் தெரியாது. அந்த 15 பேர்களும் எப்போது, எந்த சூழ்ந்லையில் ஆட்சிக்கு வந்தார்கள் என்பதையும், அவர்களுடைய சாதனைகள் பற்றியும் சுவைபடக் கூறுகிறார், பிரபல […]

Read more

இளையராஜாவைக் கேளுங்கள்

இளையராஜாவைக் கேளுங்கள், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 184, விலை 120ரூ. இசைஞானி இளையராஜாவை தரிசிக்க ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் மிகப் பெரும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது குமுதம். வாசகர்கள் கேள்விக்கு இசைஞானி அளித்த பதில்களின் மூலம் அந்த தரிசனம் சாத்தியமானது. ஆனால் அவை வெறும் பதில்கள் மட்டுமல்ல. இசைஞானியின் வாழ்க்கையை அவரது அனுபவரீதியில், அவரே சொல்லக்கேட்ட மிகப் பெரிய பேறு அது. இசை, ஆன்மீகம், குடும்பம், நட்பு, சினிமா என்று எந்த ஒன்றைப் பற்றி பேசினாலும் அதில் தன் புகழை நாட்டாமல், உண்மைகளை வெளிப்படையாகப் […]

Read more

நீ தெய்வீகமானவன்

நீ தெய்வீகமானவன், சுவாமி விவேகானந்தர், சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பதிப்பகம், பக். 448, விலை 200ரூ. விவேகானந்தரின் 150வது அவதார ஆண்டில் வெளியான சிறப்பான தொகுப்பு நூல். சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள், சோர்ந்த தனிதனை எழுப்பி, சாதனை செய்ய வைக்கும் தீப்பிழம்பை எழுப்பும் சக்தி கொண்டவை. ராம கிருஷ்ணமடம் வெளியிட்ட எழுந்திரு விழித்திரு என்னும் 11 பாகங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பரவசம் தரும் புதுநூல். இயற்கை, இறைவன், ஆன்மா பற்றிய விளக்கமும், படைப்பு என்ற தலைப்பில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. பிராண சக்தி பிரபஞ்சம் முழுவதும் […]

Read more

சங்க இலக்கிய ஆய்வு மாலை

சங்க இலக்கிய ஆய்வு மாலை, பதிப்பாசிரியர் கி.இராசா, பதிப்புத்துறை பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி 620024, பக். 212, விலை 120ரூ. இத்தொகுப்பில் உள்ள 14 கட்டுரைகளை எழுதியவர்களில், முனைவர்கள் இருவரைத் தவிர மற்ற பன்னிருவரும் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள். முதன்முதலில் தி போனே என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் சூழியற் பெண்ணியம். ஆமாம் பெண்ணியம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன சூழியற் பெண்ணியம்? சூழியற் பெண்ணியமும் திணை இலக்கியமும் என்ற கட்டுரையில் இதுபற்றி விரிவாக விளக்கியுள்ளார் கி.இராசா. ஒரே கருத்தை பல்வேறு புலவர்கள் எவ்வாறு வேறு […]

Read more

காந்தியக்கனவு

காந்தியக்கனவு, கஸ்தூரிபா காந்திர டிரஸ்ட், 11, காளிதாஸ் ரோடு, ராமநகர், கோயமுத்தூர் 9, பக். 56, டெம்மி விலை 100ரூ. 32 அற்புதமான காந்தியச் சிந்தனைகதைகள். முக்கியமாக மதுவிலக்கை வலியுறுத்தும் கதைகள், அட்டை அருமை. ஒரு நிமிடம் வாசகர்களே ஒரு கூப்பன் இணைத்து நூலைப் பற்றிய கருத்தை கேட்டு, அதை அனுப்புவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்ற அறிவிப்பு புதுமை. விலை அதிகம்.   —-   இணைப்புகள், என். நடராஜன், ஸ்ரீமாருதி பதிப்பகம், 173, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, பக். 176, […]

Read more

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும்

ஸ்ரீ சேஷாத்ரி மகான் வரலாறும் பக்தர்களின் நேரடி அனுபவங்களும், சேஷ. அனு. வெண்ணிலா, மேகதூதன் பதிப்பகம், சென்னை – 5, விலை 240 ரூ. மகான்களின் சரிதங்களை, ‘இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கப் போகிறது’ என்று மனம் சலனப்படாமல் ஆழ்ந்து படிக்கவேண்டும். திருவண்ணாமலையில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்த மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறும் அத்தகையதுதான். வாழ்க்கை வரலாறு மட்டுமின்றி சுவாமிகளோடு பழகும் பேறு பெற்ற பலரின் ஆன்மிக அனுபவங்களையும் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் இந்த நூலை எழுதியுள்ள சேஷ. அனு. வெண்ணிலா. […]

Read more