கேரக்டர் (பாகம் 1)

கேரக்டர் (பாகம்-1), கலைஞானம், பக்.336; ரூ.280- (பாகம்-2) நக்கீரன் வெளியீடு, பக். 328; விலை: ரூ.280;  திரைப்பட கதாசிரியர், நடிகர், பாடலாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறன் கொண்ட கலைஞானம் எழுதிய திரையுலக அனுபவங்களின் தொகுப்பு. சென்னை பாண்டிபஜாரில் கார் ஓட்டுநர்கள் 4 பேர் சினிமா கனவுகளுடன் இருந்தார்கள்.அவர்களின் கனவு நிறைவேறியதா… என்பதை ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்புடன் எழுதியிருக்கிறார். அந்த 4 பேரில் ஒருவரான பாலகிருஷ்ணன் என்கிற கலைஞானம். கே.பாக்யராஜின் “இது நம்ம ஆளு” படத்தில் ஐயர் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர். […]

Read more