எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ. கதாசிரியர், திரைப்பட இயக்குநர் என்ற புகழுக்கு உரியவரான கலைமாமணி ஏ.சி. திருலோகசந்தர் தன் சமகாலத்து சினிமா அனுபவங்களை இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். திரு. ஏவி.எம். சரவணன் நட்பு தொடங்கி, அவரது பிறப்பின் பிரமிப்பில் ஆரம்பித்து, கல்லூரி வாழ்க்கை, முதல்பட வாய்ப்பு, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டோரை இயக்கியது, ‘அன்பே வா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம், ஜனாதிபதி பரிசு பெற்றது. ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’, […]

Read more

இலக்கியத்தில் மேலாண்மை

இலக்கியத்தில் மேலாண்மை, வெ.  இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 574, விலை 1300ரூ. தன்னம்பிக்கையும், நுண்ணறிவும் மிக்க ஒரு புதிய சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கில், இலக்கியப் பணியும் ஆற்றி வரும் இந்நூலாசிரியர், தமிழகம் அறிந்த சிறப்பான ஐ.ஏ.எஸ். அதிகாரி. மனித வாழ்க்கைக்கு சீரிய ஒழுக்கமும், நெறிகளும் மட்டுமின்றி நிர்வாகமும், மேலாண்மையும் அவசியம். இவற்றை பண்டைய இலக்கியங்களும், இன்றைய இலக்கியங்களும் எப்படி எடுத்துரைக்கின்றன என்பதை இந்நூலாசிரியர் சிறப்பான ஆய்வுத் திறனோடு, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் […]

Read more

அப்துல்கலாம் ஒரு சகாப்தம்,

அப்துல்கலாம் ஒரு சகாப்தம், ம. வசந்த், மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ. தனி மனித ஒழுக்கம், பெரியோர்களை மதிக்கும் பண்பு, கடமை உணர்ந்து செயல்படுதல், எப்படிப்பட்ட உச்ச நிலைக்குச் சென்றபோதும் பணிவையே தன் துணையாகக் கொண்டவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். அவரைப் பற்றிய புகழ்ப்பாக்களைக் கவிதை வடிவில் ஆக்கியுள்ளார் ம. வசந்த். நன்றி: தினத்தந்தி, 24/8/2016.   —- நல்லகாலம் பிறக்குது, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. ஊரில் அக்கிரமங்கள் செய்யும் மூன்று அயோக்கியர்களை, கதாநாயகன் கிறிஸ்தவ குருமார் வேடத்தில் […]

Read more

பொன்விழா சுற்றுலா

பொன்விழா சுற்றுலா, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 208, விலை 140ரூ. ஜம்பதாண்டைக் கடந்துவிட்ட நமது தேசத்தின் சுதந்திரத்தை இன்றைய தலைமுறைக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட நூல். இந்த தேசத்திற்காக பாடுபட்டு மறைந்த மாமனிதர்களின் ஊர்களுக்கு மாணவர்கள் சுற்றுலா செல்வது போன்று இந்நூலை ஜீவபாரதி படைத்திருப்பது சிறுவர்களுக்கு பயன்தரும். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 31/8/2016.

Read more

அவள் பிரிவு

அவள் பிரிவு, வெ.சாமிநாத சர்மா, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.100. வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு.சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். “ஒளி விளக்கு’ என்ற தலைப்பிடப்பட்டு தொடங்கும் கடிதம் “சங்கற்பம்’ என்ற தலைப்புடன் முடிகிறது. “என் மனைவி இறந்துவிட்டதாக என்னால் எண்ண முடியவில்லை; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்துவிடுவாளென்றுமே என் […]

Read more

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு

ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஒரு வாழ்க்கை வரலாறு. அருண் திவாரி. தமிழில்: நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், பக்.548, விலை ரூ.495. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் […]

Read more

நல்ல தமிழில் எழுதுவோம்

நல்ல தமிழில் எழுதுவோம், என் சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்.256, விலை ரூ.200. தமிழர்கள் தம் தாய்மொழியின் பெருமையை உணர்ந்து அதைப் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் பழக வேண்டும். ஏனெனில், தமிழ் மொழியில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். ஒரு மொழிக்கு ஆணிவேர் போன்றது இலக்கணம். அதை முறையாக – சரியாகக் கற்றுக் கொண்டால்தான் பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் முடியும். மொழித் தூய்மைக்கு முக்கியமானது பிழை இல்லாமல் எழுதுவதுதான். இன்றைக்கும் பலரும் தடுமாறிப் போவது வல்லின, மெல்லினச் […]

Read more

மாவீரன் அலெக்சாண்டர்

மாவீரன் அலெக்சாண்டர், எஸ்.எல்.வி. மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், பக். 312, விலை 235ரூ. ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் ஒன்றுதான்… கிரேக்கப் பேரரசன் அலெக்சாண்டரின் வாழ்க்கையைப் படிப்பதும் ஒன்றுதான் என்ற வரிகளுடன் தொடங்குகிறது இந்தப் புத்தகம். பொதுவாகவே, வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் படைப்புகளை கட்டுரை வடிவிலேயே பார்த்து பழகிய நமக்கு, இந்தப் புத்தகம் சற்று மாறுபட்டதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு கதையைப் படிப்பது போன்ற உணர்வையே தருகிறது இந்நூல். 33 யுகங்கள் எடுத்தாலும் அடைய முடியாத சாதனைகளை வெறும் 33 ஆண்டுகளில் வென்றெடுத்த […]

Read more

விடியலின் வெளிச்சம்

விடியலின் வெளிச்சம், கவிஞர் இளசை சுந்தரம், புகழ் பதிப்பகம், பக். 72, விலை 90ரூ. ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஆண்டவனுக்கு அருகில் போகலாமென்றால் ஆற்றல் மிக்கது பணமா? பகவானா? போன்ற விடைதேடும் வினாக்கள் நிறைந்த கவிதைகளின் தொகுப்பு. ஒரு காதல் பூப்பதையும், அவஸ்தைப்படுவதையும் உணர வைக்க கவிஞரால் முடிகிறது. நன்றி: குமுதம், 31/8/2016.

Read more
1 2 3 9