மனிதன் புரியாத புதிர்

மனிதன் புரியாத புதிர்(Man The Unknown), அலெக்சிஸ் காரெல், முல்லை பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நூலாசிரியர் முதல் உலகப் போரின்போது (1914-19) ராணுவ சிறப்பு மருத்துவராக அரிய சேவை புரிந்து அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற அரசுகளால் கௌரவிக்கப்பட்டு ‘நோபல்’ பரிசும் பெற்றவர். இந்நூல் மருத்துவத்தையும், மனிதனையும் விஞ்ஞானக் கண்ணோடு ஆராய்ச்சி செய்து எழுதியது. 1935ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டது. நமது முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் […]

Read more

முன்னேற்றம் உங்கள் கைகளில்

முன்னேற்றம் உங்கள் கைகளில், துடுப்பதி ரகுநாதன், வசந்தா பிரசுரம், பக். 192, விலை 125ரூ. மூத்த எழுத்தாளரான இந்நூலாசிரியர் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகள். கட்டுரைகள், குறுநாவல்களை படைத்துள்ளார். இவரின் ‘மாயமான காப்பகம்’ என்ற நாவல் 2013ல் வெளிவந்து, சிறந்த நாவலாக திருப்பூர் தமிழ்ச் சங்கத்தால் தேர்வு செய்து, விருது பெற்றது. வாழ்க்கையில் முன்னேற விரும்புவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தி, ஊக்கத்துடன் செயல்படத் தூண்டும் விஷயங்களை தினமலர் மற்றும் பாக்யா போன்ற பத்திரிகைகளில் இந்நூலாசிரியர் எழுதிய தொடர் கட்டுரைகள் வாசகர்களின் வரவேற்பை பெற்றன. அவற்றில் சிறப்பான 62 […]

Read more

நான் கண்ட அந்தமான்

நான் கண்ட அந்தமான், நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. பயணங்கள் மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன. ஒரேபாதையில் பலர் பயணித்தாலும் ஆளுக்கு ஆள் அனுபவம் வேறுபடும். அந்தவகையில் அந்தமான் தீவுக்குச் சென்று அங்கு தான் பெற்ற அனுபவத்தை, வித்தியாசமான நடையில் பயணக்கட்டுரையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

ஊதா வண்ண இலைகளின் பாடல்

ஊதா வண்ண இலைகளின் பாடல், பி.உஷாதேவி, அகநி வெளியீடு, விலை 150ரூ. பக்குவமான பத்து சிறுகதைகளின் தொகுப்பு. வேகமாக வாசிக்க விடாமல், அனுபவங்களாய் மனதுக்குள் விரிந்து யோசித்து வாசிக்க வைக்கும் வரிகள். ஒவ்வொரு கதையும் உள்ளுக்குள் தாக்கமாய்ப் பதிவதை, தவிர்க்க முடியாது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

பொன்னானவழி

பொன்னானவழி, பானுமதி கே., சீட் சக்ஸீட், விலை 250ரூ. ஆர்வம் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் வெற்றியும் இருக்கிறது. குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு வெற்றிக்கு வழிகாட்ட பெற்றோரும், ஊக்கத்துடன் செயல்பட்டு லட்சியத்தினை அடைய பிள்ளைகளும் பெற்றோர்களும் என எல்லோரும் படிக்க வேண்டிய நூல். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

அழகு ஏன் அழகாயிருக்கிறது

அழகு ஏன் அழகாயிருக்கிறது, பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 50ரூ. அழகு வெளியே இருக்கிறதா? அல்லது உள்ளேயா? மனித மூளையின் நரம்பு மண்டலத்தில் எங்கோ ஒளிந்து கிடக்கிறது அழகுணர்ச்சி. அதுதான் மனிதனின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவிக்கொண்டிருக்கிறது. அழகைப்பற்றிய ரசனை உள்ளோருக்கான அழகான நூல். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 நன்றி: குமுதம் 25/4/2018.

Read more

நானும் சினிமாவும்

நானும் சினிமாவும், ஏவி.எம்.சரவணன், தினத்தந்தி பதிப்பகம், விலை 250ரூ. சினிமா கனவுகளோடு சென்னையை எட்டிப்பார்க்கும் எந்த இளைஞனின் முயற்சியும், ஏவி.எம்.ஸ்டூடியோவை எட்டிப் பார்ப்பதில் இருந்துதான் தொடங்கும். பெருமைக்கு உரிய அந்த ஏவி.எம். என்ற மூன்றெழுத்துக்குச் சொந்தக்காரரான, ஏவி.மெய்யப்ப செட்டியாரின் மகனாகப் பிறந்து வளர்ந்து, அவரோடு இணைந்து நடந்த காலம் முதல், தானே சினிமாத் துறையில் தனித்து ஈடுபட்டு, அறுபது ஆண்டுகளைக் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது வரையான அனுபவங்களை அற்புதமாகத் தொகுத்திருக்கிறார் ஏவி.எம்.சரவணன். பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமானபோது மிகவும் ஒல்லியாக இருந்தார். […]

Read more

மனசுக்குள் மாயவலை

மனசுக்குள் மாயவலை, மேஜர்தாசன், அமராவதி, பக். 128, விலை 90ரூ. எழுத்தாளர் மேஜர்தாசன் எழுதிய சிறுகதைகள் தொகுப்பாக இந்த நுால் வெளிவந்துள்ளது. இதை சிறுகதைகள் என சொல்வதை விட, நம் வாழ்வில் சந்திக்கும் சம்பவங்கள், ஏற்படும் உணர்வுகளைத் தான், சிறுகதை வடிவில் மேஜர் தாசன் தந்துள்ளார். அதிலும், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டரிடம், திருநங்கை ஒருவர் பேசுவது, மனிதாபிமானத்தின் எடுத்துக்காட்டு. இன்றைய சமுதாய சீர்திருத்தங்களை வெளிப்படுத்தும் இந்த கதைகள், படிப்பவர்கள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றத்தை உருவாக்கும். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026598.html இந்தப் புத்தகத்தை […]

Read more

பன்னிரு திருமுறை

பன்னிரு திருமுறை, இராம.லெட்சுமணன், சகுந்தலை நிலையம், பக். 1328, விலை 1200ரூ. சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் தோத்திரம், சாத்திரம், பிரபந்தம், புராணம் என நான்கு வகையாக அமைந்துள்ளன. ஒன்று முதல், ஒன்பது வரையிலானவை தோத்திரம். 10வது சாத்திரம். 11வது பிரபந்தம். 12வது புராணம். முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் பாடியது, ‘திருக்கடைக்காப்பு’ எனவும், நாவுக்கரசர் பாடிய, நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகள் ‘தேவாரம்’ எனவும், சுந்தரர் பாடிய ‘திருப்பாட்டு’ ஏழாம் திருமுறையாகவும், மாணிக்கவாசகர் அருளியது, எட்டாம் திருமுறையாகும். ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, […]

Read more

ஆலயம் வழிபாடு

ஆலயம் வழிபாடு, முனைவர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்தப் பெருமாள், பக்.136, விலை 100ரூ. சிவாலய வழிபாடு பற்றிய ஒன்பது கட்டுரைகள் நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன. சிவாலய வழிபாட்டின் நுட்பங்கள் முதல் கட்டுரையில் தரப்பட்டுள்ளன. சிவலிங்கம் யோக நிஷ்டையையும், அதன் கீழுள்ள அஷ்டபந்தனம் மருந்து பிரகிருதி, மஹத், அகங்காரம், சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் எண் வகை பந்தங்களையும் குறிக்கிறது. பலி பீடத்தில் நாம் காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சரியங்களை பலி கொடுத்து, உள்ளே செல்ல வேண்டும். அதன் பின், தரும […]

Read more
1 2 3 8