ஐந்தாம் மலை

ஐந்தாம் மலை, தமிழில் மொழிபெயர்ப்பு பேராசிரியர் ச.வின்சென்ட், அருட்செல்வர் நா.மகாலிங்கம், பக்.222, விலை 150ரூ. உலகின் செல்வாக்கு மிக்க நுாலாசிரியர்கள் பட்டியலில், இரண்டாம் இடம் பெற்ற போர்த்துக்கீசிய எழுத்தாளர் புவுலோ கோய்லோ. இவர் எழுதிய, ‘ரசவாதி’ என்ற நுால், 81 மொழிகளில், எட்டு கோடியே முப்பது லட்சம் பிரதிகள் விற்றன. அந்த வரிசையில் அவர் எழுதிய, ‘ஐந்தாம் மலை’ என்ற நாவல், விவிலிய நிகழ்வுகளின் பின்புலத்தில் அமைந்தது. தத்துவ பின்புலம் கொண்ட நாவலை அழகிய தமிழில், எளிதாக மொழிபெயர்த்து தந்துள்ள பேராசிரியர் ச.வின்சென்ட் பாராட்டுக்குரியவர். […]

Read more

காகதிய பேரரசு

காகதிய பேரரசு, தெலங்கான மன்னர்களின் வீர வரலாறு, ஓ.ஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. ‘காகதிய பேரரசு – தெலங்கானா மன்னர்களின் வீர வரலாறு’ என்னும் இந்நுாலில், 10 இயல்களின் வாயிலாக செய்திகள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. இயல் ஒன்றில், ஒரு கல்லுா நகரை தலைநகராகக் கொண்டு, தெலங்கானா உள்ளடங்கிய ஆந்திர தேசத்தை, கி.பி., 1150 முதல், 1323 வரை சிறப்பாக ஆட்சி செய்தோர் காகதியர்கள். காகதிருத்ர தேவா வெளியிட்ட அனுமகொண்டா கல்வெட்டுகளையும், பட்டயங்களையும் முழுமையாக ஆராய்ச்சி செய்து, கி.பி., 1882ல் […]

Read more

நொய்யல் நதிக்கரைத் தீரன்

நொய்யல் நதிக்கரைத் தீரன், விண்மீன் மைந்தன், வானதி பதிப்பகம், பக். 280, விலை 200ரூ. இருநுாறு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய வீரர்கள் பலர் மாநில அளவில் சுருக்கிப் பார்க்கப்பட்டது ஒரு வரலாற்று சோகம். 1805ல் மறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கை வரலாறு முழுமையாகக் கிடைக்காத நிலையில், வழக்காறு கதைகளிலும், செவிவழிச் செய்திகளிலும், பல சரித்திரக் குறிப்புகளிலும், காலக்கோட்டு அடிப்படையிலும் கிடைத்தவற்றைப் பல்லோரும் புனைந்தனர். அவற்றைத் தழுவி, வீரமும், விவேகமும், தீரமும், தியாகமும் நிறைந்த தீரன் சின்னமலையின் வாழ்க்கையைக் கற்பனைக் கதாபாத்திரங்களோடு புனையப்பட்ட […]

Read more

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள்

அப்துல் கலாம் வாழ்வில் 100 அரிய நிகழ்ச்சிகள், குடந்தை பாலு, வானதி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தாயின் மடியில் விளையாடிய குழந்தைப் பருவம் முதல், கோடிக்கணக்கான மக்களின் முதல் குடிமகனாக, மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த காலம் வரை, உண்மை, நேர்மை, அன்பு, அரவணைப்பு, மனிதநேயம், சமூக ஒருமைப்பாடு போன்ற விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த அறிவியல் விஞ்ஞானி கலாம் எவ்வாறு சிந்தித்தார், எப்படி செயல்பட்டார் என்பதை மக்களின் மனதில் விதைக்கிறது இந்நுால். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சிந்தனை முத்துக்கள்

சிந்தனை முத்துக்கள், வாழ்வியல் தடங்கள், நவீன ஆத்திச்சூடி, குறளின் குரல், 108 நட்சத்திரங்கள்,கவிஞர் ஆவியூரார், கே.கே.பதிப்பகம், விலை 100ரூ, 50ரூ, 40ரூ, 40ரூ, 80ரூ. நான் தானே உலகம்; எனது தானே எல்லாம்; படைப்பவன் கடமை எனக்கு எல்லாமே தரணும்’ என்ற போக்கில் மக்கள் திசைமாறியதை படம் பிடிக்கும் ஆசிரியர், இந்த ஐந்து நுால்களை உருவாக்கியிக்கிறார். அட்டலக்குமி அர்ச்சகர் ஆன இவர் இலக்கிய ஆசை கொண்டவர். நம்மைச் சுற்றி நடக்கின்ற வாழ்க்கைகளை, அதிகம் அறிந்தவர் என்ற முறையில் இவரது படைப்புகள் உள்ளன. தவிரவும் அறிவு […]

Read more

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும்

வாலி வதை ஆதிகவியும் கம்பகவியும், பிரியா இராமச்சந்திரன், வானதி பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. பல ஆண்டுகளாகத் தொடரும் நீதிமன்ற வழக்கு போல, சில கம்பராமாயண விவாதங்கள் தலைமுறைகளைக் கடந்து நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட வாலி வதை விவாதத்துக்கு, இந்நுால் வழி புதிய பங்களிப்பு செய்திருப்பவர், மருத்துவர் பிரியா இராமச்சந்திரன். ஆதிகவி வால்மீகியும், தமிழ்க்கவி கம்பனும் நல்கிய படைப்புகளில், வாலி வதையால் இராமன் முதற்கொண்டு பல்வேறு கதை மாந்தர்களும், தம் இயல்பில் அடையும் மாற்றங்களை நுாலில் நேர்த்தியாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். கிட்கிந்தா காண்டத்தில் […]

Read more

தூய்மை இந்தியா

தூய்மை இந்தியா, பெருமாள் நல்லமுத்து, பாவைமதி வெளியீடு, பக். 96, விலை 75ரூ. முதல் கதையில் ஆரம்பமான வேகத்தை கடைசி கதை வரை கொண்டு சென்றிருப்பது இன்னும் சுவாரசியம். ‘வாழ்க்கை, துாய்மை, ஓடுகாலி, பிச்சைக்காரி’ உள்ளிட்ட கதைகள், ஒவ்வொரு விதமாய் நம் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ‘ஜனனமும் மரணமும்’ கதை நெஞ்சை வருடுகிறது என்றால், ‘மனைவி’ கதையானது முகத்தில் அறைகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை மிக அழகாகவும் எளிமையாகவும் சொல்லியிருப்பது, நுாலாசிரியரின் திறமையைக் காட்டுகிறது. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

கவலையே வேண்டாம்

கவலையே வேண்டாம், என்.வி.சுப்பராமன், யுனிக் மீடியா இன் டெக்ரேட்டர்ஸ், பக். 152, விலை 120ரூ. வேகமான இந்த உலகில் ஏராளமான கடமைகளுக்குள் சிக்கித் தவிப்பதாயிருக்கிறது வாழ்க்கை. இதன் இடையே இல்லம், மனைவி, மக்கள் என்ற இல்லறக் கடமையும் நடக்கிறது. தேவைகளும், உளைச்சல்களும் நெருக்குகின்றன. ஒவ்வொருவருக்கும் தானே தன்வசம் இல்லாத தருணங்கள் பல. ஆயுள் இழப்பு முதல் பொருள் மற்றும் பண இழப்பு குடும்பப் பொருளாதாரத்தைத் தாக்கி விடுகிறது. இழப்புக்கு ஈடு பெறுதலே காப்பீடு. ஒருவரது ஆயுள் காப்பீட்டின் பயனாளி அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரே என்பதை […]

Read more

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்

குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம், க.சரவணன், நீலவால் குருவி, பக். 90, விலை 80ரூ. கணினி என்ற அறிவுச் சாதனம் இன்று, குழந்தைகளுக்கு பல விஷயங்களை விரல்நுனியில் சொடுக்கிய மறுநிமிடத்தில் அளித்து விடுகிறது; அதே வேளையில், குழந்தைகளை ஒரே இடத்தில் முடக்கி விடுகிறது. இன்றைய சமூகத்தின் தேவைகள், குழந்தைகளின் உடல்நலம் குறித்த அக்கறை, வகுப்பறை எப்படி இருக்க வேண்டும்? குழந்தைகளின் விருப்பங்கள் போன்ற பல விஷயங்களை அனுபவத்தின் அடிப்படையில் அலசி, உண்மைகளின் தரவுகளைக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது இந்நுால். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்நுால் சிறந்த […]

Read more

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை

மன நிர்வாகம் கற்க வேண்டிய கலை, சி.எஸ். தேவ்நாத், நர்மதா பதிப்பகம், பக். 224, விலை 120ரூ. ஆய கலைகள், 64 என்பர். மிகவும் அவசியமான கலை நம் மனதை அறிகிற கலை. இன்றும், மறு உலகிலும் நமக்கு கை கொடுக்கும் கலை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்கிற போது, நீ உனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறாய். மற்றவர்களுக்கு சேவைகள், நன்மைகள் செய்வதன் மூலம் உன் உடலையும் உள்ளத்தையும் துாய்மைப்படுத்திக் கொள்வாய். உன்னுள் தெய்வீக ஒளி பரவி அதன் மூலம் விமோசனம் பெறுவாய் என்று தர்மத்தின் […]

Read more
1 2 3 4 8