பாஸ்ராவின் நூலகர்

பாஸ்ராவின் நூலகர், ஜேனெட் வின்டர், அன்பு வாகினி, பாரதி புத்தகாலயம், பக். 32, விலை 30ரூ. ஈராக் நாட்டில் போர் மூண்ட போது அந்த நாட்டின் பாஸ்ரா நகரில், தலைமை நூலகத்தின் தலைமை நூலகராக இருந்தவர் ஆலியா முகமது பேக்கர். நாடே குண்டு மழைக்கிடையில் கருகியது. அந்த நிலையிலும், தானும், தன் நண்பர்களும் இணைந்து, முக்கிய நூல்களை சுமந்து காத்தவர் ஆலியா. குழந்தைகளுக்குள் புத்தக நேசத்தை வளர்க்க, இந்த படக்கதை நூல் உதவும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மௌனமாயொரு இடிமுழக்கம்

மௌனமாயொரு இடிமுழக்கம், ட்யுராங்கோ அதிரடி, முத்து காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 250ரூ. சம்மரைக் கொண்டாட சாகசங்கள் நிறைந்த விறுவிறு காமிக்ஸ்! புரட்சிப்படை, கூலிப்படை, அதிகார வர்க்கங்களுக்கு இடையே நடக்கும் ஆக்ரோஷமான சண்டைகள், சதிகள், கொடுமைகள் என்று வன்மேற்கின் ரத்தவெறி யுத்தங்களைப் படம்படமாக நகர்த்தி பிரமிக்கச் செய்யும் த்ரில்லர். பள்ஸ் காதல், பாசம், வீரம் நிறைந்த ட்ராஜெடி என்று, கோடை மலராக இரட்டை காமிக்ஸ்! கதாநாயகன் ட்யுராங்கோவின் மின்னல் வேகமும், இடிமுழக்கமாக எதிரொலிக்கும் தோட்டாக்களின் சத்தமும் கோடை மழையாகவே காமிக்ஸ் பிரியர்களைக் கொண்டாடச் செய்யும் […]

Read more

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள்

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள், கல்கி, நிலா காமிக்ஸ், பக். 42, விலை 145ரூ. கல்கியின், பொன்னியின் செல்வன், ஐந்து தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமான, வரலாற்று நாவல்களின் சிகரம். அதை, இளைஞர்களும் முதியோரும் படித்திருப்பர். அதில் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட, மன்னர்களின் வீரம், தீரம், பக்தியை கண் முன் கொண்டு வந்திருப்பார் கல்கி. அதை சிறுவர்களுக்கான படக்கதையாக மாற்றி அருமையான படைப்பாக வெளியிட்டிருக்கிறது நிலா காமிக்ஸ். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்

கல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ், நிலா காமிக்ஸ், வி 145ரூ. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனைப் பற்றி புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை. அந்த வரலாற்றுப் புதினத்தை, அழகழகான படங்கள், சுவாரஸ்யமான டயலாக்குகளுடன் படக்கதையாகத் தரும் வித்தியாசமான முயற்சி. மாதம் இருமுறை என அத்தியாயங்களின் தொடர் வெளியீடாக வருமாம். காமிக்ஸ் பிரியர்களைக் கண்டிப்பாகக் கவரும். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை, ப. தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. உருளும் காலம் உறையும் அற்புதங்களைச் செய்பவை புத்தகங்கள். சித்திரங்கள் படிக்கிற அனுபவத்தை இன்றைய குழந்தைகள் இழந்து வருவது தலைமுறை துயரம். ஏராளமான சேனல்களும், கணினிகளும் திரிக்கும் ஒளிக்கயிறுகளால் தாவிக் குதிக்கும் குழந்தைகள் சீக்கிரமே தங்களுக்கான தேவ உலகத்தை இழந்துவிடுவார்களோ எனப் பயமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் புழுதி வாசத்தையும், புத்தக வாசத்தையும் அறிமுகப்படுத்துவது நமது முதல் கடமை. சிறியோர் முதல் பெரியோர் வரை பார்க்க, படிக்கத் தக்கதாக கல்கியின் ‘பொன்னியின் […]

Read more

பிணத்தோடு ஒரு பயணம்

பிணத்தோடு ஒரு பயணம், லயன் காமிக்ஸ், விலை 200ரூ. சித்திரக்கதை வரிசையில் மற்றும் ஒரு புது வரவு. பிணத்தைப் புதைப்பதை தொழிலாகச் செய்பவனுக்கும் பணத்துக்காக பிணத்தையும் சுமந்து செல்லச் சொல்லும் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் ஒப்பந்தம், வழியில் நடக்கும் போராட்டம், முடிவில் சற்றும் எதிர்பாராத திருப்பம். சுவாரசியமாகப் படிக்கும்போது காது பக்கத்தில் தோட்டாக்கள் உரசிச் செல்வதுபோல் உணர முடிகிறது. காமிக்ஸ் பிரியர்கள் கொண்டாட இன்னும் ஒரு பொக்கிஷம். நன்றி: குமுதம், 12/7/2017.

Read more