ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்,  ஆ.மாதவன், வாலி பதிப்பகம், பக்.160, விலை ரூ.110. மலையாளம், வங்கமொழி, பிரெஞ்ச், ரஷ்யன், இத்தாலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன். தகழி, மாதவிக்குட்டி, பொன்குன்னம் இல்லியாஸ், கெ.யூ.அப்துல்காதர், மாப்பசான், பால்ஸாக், மாக்சிம் கார்க்கி, பொக்காஷியோ, பிரபாத் குமார் முகர்ஜி ஆகிய புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1956 முதல் 1973 வரை திராவிடன், பகுத்தறிவு, போர்வாள், கண்ணதாசன் ஆகிய சிற்றிதழ்களில் இக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொகுப்பில் இடம் […]

Read more

முதல் வரிசை மூன்றாவது இருக்கை

முதல் வரிசை மூன்றாவது இருக்கை, படுதலம் சுகுமாரன், ஆரம் வெளியீடு, விலை 160ரூ. ஆழமான சிறுகதைகளை எழுதுவதில் வல்லவர் படுதலம் சுகுமாரன். இந்தத் தொகுதியில் அவருடைய 35 கதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாம் நெஞ்சைத் தொடும் கதைகள். அநாவசியமாக வளர்த்தாமல், நாலைந்து பக்கங்களில் கதையை அடக்கி விடுவது இவருடைய சிறப்புகளில் ஒன்று. முதல் கதையான “மாப்பிளை”, 5 பக்கங்களில் பிரமாதமாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/11/2016.

Read more

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம்

பாஞ்சாலக்குறிச்சி வீர சரித்திரம், ஜெகவீர பாண்டியனார், தோழமை வெளியீடு, விலை 500ரூ. பாஞ்சாலங்குறிச்சி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர்கள், வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும் ஆவர். அவர்கள் இருவரும் சிற்றரசர்களாக இருந்தபோதிலும் பேரரசரும் போற்றும்வகையில் வீரம் செறிந்தவர்கள். இந்த நூலில் முதல் பாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றையும், இரண்டாம்பாகத்தில் ஊமைத்துரையின் வரலாற்றையும் ஜெகவீர பாண்டியனார் விரிவான முறையில் எழுதியுள்ளார். இதன் மூலம் வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை ஆகியோரின் வீரம் செறிந்த வாழ்க்கை மற்றும் அவர்களது தேசப்பற்று, தெய்வப்பற்றை அறிந்து கொள்ள முடிகிறது. உயிர் துறக்க […]

Read more