சதுரகிரி சித்தர்கள்

சதுரகிரி சித்தர்கள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை: ரூ.300. சித்தர்களின் பூமி எனப்படும் சதுரகிரிக்குச் செல்லும் பயண அனுபவமாக இந்த நூல் விரிவடைகிறது. சதுரகிரி பயணத்தின்போது கண்ட காட்சிகள், அந்த இடம் தொடர்பான தகவல்கள் ஆகியவை பக்திப்பெருக்குடன் விளக்கப்பட்டு இருக்கின்றன. அவை தொடர்பான மரபுவழிக் கதைகள், அமா னுஷ்யமான செய்திகள் ஆகியவையும் தரப்பட்டு இருக்கின்றன. அங்கு செல்வதற்கான ஆபத்தான பாதைகள் குறித்தும், பாதுகாப்பாக எவ்வாறு செல்வது என்பது பற்றியும் தகவல் தரப்பட்டு இருக்கிறது. பெண் சித்தர் ஒருவரின் தரிசனம் கிடைத்த அதிசய தகவல், பாண்டவர்கள் […]

Read more

அறியப்படாத தமிழகம்

அறியப்படாத தமிழகம், தொ.பரமசிவன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை: ரூ.100. சாதாரண நடைமுறையில் இருந்தாலும், தாம் அதிகம் பொருட்படுத்தாத பல விஷயங்களை எடுத்துக்கொண்டு, அதன் பழங்கால வரலாறு, பண்பாடு என்ன என்பவை இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கப்பட்டு இருக்கின்றன. உப்பு, எண்ணெய், அறியப்படாத தேங்காய் வழிபாடு, உரல்-உலக்கை, விநாயகர் வழிபாடு, பல்லாங்குழி போன்ற பலவற்றின் வேர்களை ஆராய்ந்து படைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் வியப்பை அளிப்பவையாக உள்ளன. பிறப்பு இறப்புத் தீட்டுகளால் பாதிக்கப்படாத ஒரே விழா பொங்கல் பண்டிகை என்ற தகவலும் தரப்பட்டு இருக்கிறது. மதுரையில் வாழ்ந்த […]

Read more

பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை

பகவத் கீதை மகாகவி பாரதியார் உரை, பதிப்பாசிரியர்: முனைவர் கி.இராசா, பார்த்திபன் பதிப்பகம்; விலை:ரூ.60. பகவத் கீதையில் உள்ள அத்தனை ஸ்லோகங்களுக்கும் மகாகவி பாரதியார் எழுதிய விளக்க உரை இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அவர் ரத்தினச் சுருக்கமாக சில வரிகளில் உரை எழுதி இருந்தாலும், அவற்றில் ஆழ்ந்த கருத்துகள் பொதிந்து இருக்கின்றன. பாரதியாரின் உரை என்பதால் ஆங்காங்கே கவிதை நடை மிளிர்கிறது. பாரதியார் வேதாந்தி என்பதால் இந்த உரையில் வேதாந்தக் கருத்துகள் மேலோங்கி இருக்கின்றன. பகவத் கீதை, நன்கு தொழில் புரியும்படி […]

Read more

சாணக்கிய நீதி

சாணக்கிய நீதி, கீர்த்தி, செந்தமிழ்ப் பதிப்பகம், விலை:ரூ.120. சாணக்கியர் சமூக நீதியாகத் தெரிவித்த 330 ஸ்லோகங்களின் மூல சா மும், அவற்றுக்கான எளிய தமிழ் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ள இந்த நூல் மூலம் சாணக்கியரின் சமூக நீதியைத் தெரிந்துகொள்ளலாம். நன்றி: தினத்தந்தி, 17/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்

முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள், தொகுப்பாசிரியர்: கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், வெளியீடு: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், விலை:ரூ.100. தமிழக சட்டசபையில் முஸ்லிம் லீக் உறுப்பினர்களாகப் பணியாற்றியவர்கள் சட்டமன்ற விவாதத்தில் தெரிவித்த கருத்துகள் ஏற்கனவே இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ள நிலையில், 3-வது பாகமாக இந்த நூல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் வாணியம்பாடி எச்.அப்துல் பாசித், அரவக்குறிச்சி கலீலுர் ரஹ்மான், கடையநல்லூர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் உரைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தனது தொகுதி பிரச்சினைகளுடன், சிறுபான்மையினரின் பிரதிநிதியாக, ஹஜ் […]

Read more

தமிழர் திருமண முறைகள்

தமிழர் திருமண முறைகள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை:ரூ.200. தமிழர்களின் திருமண் முறைகள் எவ்வாறு நடைபெற்றன? அதற்கான காரணங்கள் என்ன? திருமணத்திற்கு என்ன பொருத்தம் தேவை உள்பட பயனுள்ள பல தகவல்கள் இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 17/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

360 டிகிரி காதல் கதைகள்

360 டிகிரி காதல் கதைகள், ஜி.மீனாட்சி, வானதி பதிப்பகம், விலை: ரூ.150. எந்தக் காலத்திய காதல் என்றாலும், அந்தக் காதல் தொடர்பாக எழுதப்படும் கதைகள் அனைத்தும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்னும்போது, மனதையும் நிச்சயம் கவரும் என்பதை இந்த தற்காலக் காதலர்கள் பற்றிய கதைகள் அனைவர் நூல் நிரூபித்து இருக்கிறது. டீன் ஏஜ் காதலை விவரிக்கும் 5 கதைகள் இந்த நூலில் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்களன்களில் கட்டமைக்கப்பட்டு இருப்ப தால், 5 கதைகளையும் மனம் லயித்துப் படிக்க முடிகிறது. வெவ்வேறு […]

Read more

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை

தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் பாமாலை, வெளியீடு: உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், விலை:ரூ.40. நவதிருப்பதிகளில் ஒன்றான தென்திருப்பேரையில் உள்ள தெய்வமான மகர நெடுங்குழைக்காதர் மீது நம்மாழ்வார் பாடிய 100 பாடல்களும், அவற்றின் பொருளை உணர்ந்துகொள்ளுமாறு தமிழ்த்தாத்தா உ.வே.சாமி நாதையர் எழுதிய குறிப்புரையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 17/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு. காவ்யா. விலை: ரூ.270. கரிசல்காடு பரந்த பூமி என்றாலும், அதில் உள்ள இளையரசனேந்தல், குருவிகுளம் ஆகிய இரண்டு ஜமீன்கள் பற்றிய முழுமையான தகவல்களை இந்த நூல் தாங்கி இருக்கிறது. கட்டபொம்மனை தூக்கிலி டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பிரித்தாளும் சூழ்ச்சியாக இளையரசனேந்தல் ஜமீனை ஆங்கிகலேயர்கள் இரண்டாகப் பிரித்தார்கள் என்றும், இப்போதும் அங்கே வெளிநாட்டு குளிர்பானங்கள் காணப்படுவது இல்லை என்றும் இந்த நூலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குருவிகுளம் ஜமீனின் அரண்மனை இப்போது தீப்பெட்டி கம்பெனியாக உள்ளது என்பதும் இதில் பதிவு செய்யப்பட்டு […]

Read more

கண்டுகொண்டேன் சாயிபாபா

கண்டுகொண்டேன் சாயிபாபா, த.மா.ஜெம்புலிங்கம், ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன், விலை 100ரூ. சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவரது அருமை பெருமைகளைக் கூறும் 230 பாடல்களைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. அத்தனை பாடல்களும் மரபுக் கவிதைகள் என்றாலும், அவற்றைப் பேச்சு வழக்குத் தமிழில் கொடுத்து இருப்பதால் எளிதில் பொருள் விளங்கிப் படிக்க முடிகிறது. பல்வேறு கடவுள்களின் அவதாரங்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 2 3 223