தமிழக வழிபாட்டு மரபுகள்

தமிழக வழிபாட்டு மரபுகள், திருச்சிற்றம்பலம் மு. அருணாசலம், சிவ. முருகேசன், சந்தியா பதிப்பகம், பக். 208, விலை 160ரூ. பேராசிரியர் மு. அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, தலவழிபாடு எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, பிடியதன் உருஉமை கொளமிகு கரியது (பக். 20) என, அப்பரடிகள் பாடியதையும், புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை […]

Read more

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல்

சீத்தலைச்சாத்தனார் மணிமேகலை ஆக்கப் பிரதியின் வாசிப்பு அரசியல், முனைவர் கா. அய்யப்பன், இராசகுணா பதிப்பகம், பக். 138, விலை 120ரூ. சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தை, ஐந்து பிரிவுகளில், ஆய்வு செய்கிறது இந்த நூல். முதல் பிரிவில் மணிமேகலை காப்பியக் கதையும், இரண்டாம் பிரிவில் இந்திர விழாவும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரிவில், மணிமேகலை கூறும் தத்துவக் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. நான்காம் பிரிவில், மணிமேகலை காப்பியத்தைப் பிற பண்டைய இலக்கியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்துள்ளார். ஐந்தாம் பிரிவில், உரையாசிரியர்கள், மணிமேகலை காப்பியத்தைப் பயன்படுத்தியுள்ள […]

Read more

தெரிந்த புராணம் தெரியாத கதை

தெரிந்த புராணம் தெரியாத கதை, டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், பக். 152, விலை 150ரூ. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை அறிந்திருக்க மாட்டார்கள். கிளைக் கதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள உட்கருத்துக்களையும், எளிய நடையில், தெளிவான முறையில், எல்லோருக்கும் புரியும் வகையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். மன்னனா? துறவியா? என்ற கட்டுரையில் ஜனகர் – பஞ்சசிகர் தொடர்புடைய நிகழ்வுகள் புலனடக்கம், சத்தியத்தின் உயர்வு, அகந்தை, ஆணவம் துறத்தல் முதலானவற்றை வலியுறுத்துகின்றன. மனைவி கூறிய கருத்தை மதித்த […]

Read more

சில பாதைகள் சில பயணங்கள்

சில பாதைகள் சில பயணங்கள், பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 144, விலை 90ரூ. சமூகத்தாக்கத்தோடு, சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்து, அதில் வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றுள்ள, மதுவிலிருந்து மீள வழிகாட்டும் சாந்தி ரங்கநாதன், அமில வீச்சுக்கு ஆளான அர்ச்சனா குமாரி, பாலியல் தொழிலாளர் குழந்தைகளைப் படிக்க வைக்கும் சோம்லே மாம், தேவதாசி ஒழிப்பில் வெற்றிகண்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, சமையல் புத்தகம் முதலில் எழுதிய மீனாட்சி அம்மாள், கர்நாடக சங்கீதக் கலைஞர் வீணை தனம்மாள், கம்யூனிஸ்ட் பார்வதி […]

Read more

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம்

ஸ்ரீவசன பூஷணம், ஆசார்ய இருதயம், தி. பாஷ்ய ராமாநுசதாசன், செல்வி. ரம்யா கஜபதி, பக். 160, 120, விலை 100ரூ, 50ரூ. வைணவ தத்துவம், இதம், புருஷணார்த்தம் ஆகியவற்றை விளக்க, ஆசாரியர்கள் எழுதியுள்ள நூல்களில், இந்த இரண்டும் பலரால் போற்றப்படுகின்றன. பெரும்பாலும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் இவை இருப்பதால், தற்காலத்தில் படிப்போர்க்குக் கடினம். அதனால் எளிய தமிழில், அவற்றுக்கு இந்த உரை நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சொல்லழகும், பொருளழகும் உடைய ஸ்ரீவசன பூஷணம் என்ற நூலை, பிள்ளைலோகாசாரியர் அருளிசெய்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் […]

Read more

ஔவைத் தமிழ் களஞ்சியம்

ஔவைத் தமிழ் களஞ்சியம், வேம்பத்தூர் கிருஷ்ணன், சுடர்மணி பதிப்பகம், பக். 144, விலை 50ரூ. அவ்வையாருக்கு ஒரு கோட்டம் கட்டும் முயற்சியில் பல்லாண்டுகளாக பாடுபடுபவர் வேம்பத்தூர் கிருஷ்ணன். அவ்வையார் பற்றி 36 அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் படிப்பவருக்கு இனிமை ஊட்டும். இக்கட்டுரை ஆசிரியர் உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராமல் அவ்வையாரை மீட்டுருவாக்கம் செய்வதில் பேரார்வம் கொண்டவர் என்பதை, அவரது இந்தத் தொகுப்பே கூறிவடும். சிவாலயம் மோகனின் முதற்கட்டுரை, திருமூலரில் துவங்கி, அவ்வை வரையில், சிவநெறி எவ்வாறு போற்றப்படுகிறது என்று கூறுகிறது. அதில் […]

Read more

இந்தியப் பயணக் கடிதங்கள்

இந்தியப் பயணக் கடிதங்கள், எலிஸா பே, தமிழில் அக்களூர் இரவி, சந்தியா பதிப்பகம், பக். 288, விலை 200ரூ. கடந்த 1779 முதல் 1815 வரை எழுதப்பட்ட, 31 கடிதங்களின் தொகுப்பு. எலிஸா எனும் ஆங்கிலேயப் பெண்மணி, கப்பல் மூலமாகவும், தரை வழியாகவும் இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தது வரை பட்ட துன்பங்களும், இன்பங்களும், கடிதங்களாய் எழுதப்பட்டுள்ளன. கள்ளிக்கோட்டை ஹைதர் அலியின் ஆட்சியின் கீழ் இருந்ததால் எலிஸாவும், அவரது கணவரும், மற்றவர்களும் சிறைப்படுத்தப்பட, சோகத்திலிருந்து விடுதலை வழங்கியது, மெட்ராஸ் எனும் சென்னை பதினெட்டாம் நூற்றாண்டில் பெண்கள் […]

Read more

யக்ஞோபவீதம் – பூணூல்

யக்ஞோபவீதம் – பூணூல், சர்மா சாஸ்திரிகள், பக். 80, விலை 60ரூ. காஞ்சி மடத்துடன் அதிக தொடர்பு கொண்டவரும், முன்பு சங்கபரிவார் அமைப்புகளுடன் இருந்தவருமான ஆசிரியர், தற்போது இந்த நூலை வெளியிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் பிராமணர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பூணூல் பற்றி தகவல்களை கூறியுள்ளார். தமிழகத்தில் பல்வேறு பிரிவினர் பூணூல் அணிகின்றனர். திருமூலர் நூலது காற்பாசம் : நுண்சிகை ஞானம் என்பார். பூணூலின் இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது, பூணூலை இலக்கணம் என்ன, வேதத்தில் பூணூல் பற்றி என்ன […]

Read more

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்

அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள், ஜோதிட சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இந்தியா என்பது மாபெரும் புண்ணியபூமி. அதன் புதல்வர்களாகிய நாம், பக்தி, தியாகம், தர்மம், நேர்மை, அன்பு, ஒழுக்கம், வீரம் இவையெல்லாம் ஒருங்கே பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் நம்மிடம் ஒற்றுமை இல்லை. இந்து நெறிமுறையைப் பாதுகாக்க வீரமும் ஒற்றுமையும் அவசியம் என்பதை உணர்த்த தம் பகுத்த அனுபவப் பின்னணி கொண்டு குமுதம் ஜோதிடம் வார இதழில் வாராவாரம் தலையங்கம் தீட்டி எழுச்சி கொள்ளச்செய்தவல் […]

Read more

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்

ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம், தொகுப்பு மணா, குமுதம் பு(து)த்தகம், சென்னை. ஜெயகாந்தன் என்ற ஆளுமை உருவான பின்னணி, வாழ்கைப் போராட்டத்தில் எழுதுகோலை அவர் ஆயுதமாக தேர்ந்தெடுத்த அனுபவம், தமிழ் இலக்கியத்தின் போக்கை மாற்றியமைத்த அவரது எழுத்தின் துணிவு, சமூகத்தின் மீதான அவரது அக்கறை, கோபம், அவர் எழுப்பிய குரல், மண் வாசனையைத் தாண்டி மனித நெடியை வீசச் செய்த அவரது கதைகள் பற்றிய பார்வை, சினிமா சார்ந்த அவரது விமர்சனங்கள் சினிமா உலகில் எத்தகைய அழுத்தத்தை ஏற்படுத்தியது, மாற்று சினிமாவுக்கான அவரது […]

Read more
1 2 3 9