நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம், டாக்டர் கு.கணேசன், காவ்யா, பக். 445, விலை 450ரூ. வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி, துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது. ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல: இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால். நன்றி: தினமலர், 5/1/20. இந்தப் […]

Read more

வீரப்பன்

வீரப்பன், நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், பக்.456, விலை ரூ.360; சந்தனக் கடத்தல் வீரப்பனை நூலாசிரியர் சந்தித்துப் பேட்டிகள் எடுத்த சம்பவங்களின் தொகுப்பு, திகில் நாவல் வடிவில் உருவாகியுள்ளது. வீரப்பன் சபாரி சூட் அணிந்து கையைக் கட்டியிருக்கும் பழைய போட்டோ மட்டுமே பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டத்தில், தலைப்புச் செய்தியில் இடம் பெறும் வீரப்பனின் புதிய போட்டோவை தனது பத்திரிகையில் பிரசுரிக்க நூலாசிரியர் நிருபர் குழுவை அனுப்புவதில் தொடங்கும் விறுவிறுப்பு, நூலின் கடைசிப் பக்கம் வரை நீடிக்கிறது. வீரப்பனைச் சந்திக்க இரண்டரை நாள் 300 […]

Read more

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]

Read more

மலர்களுக்காக மலர்ந்தவை

மலர்களுக்காக மலர்ந்தவை, கே. ஜீவபாரதி, மேன்மை வெளியீடு, பக். 184, விலை 135ரூ. “ஓம்சக்தி’ தீபாவளி மலருக்காக நூலாசிரியர் எழுதிய “மும்மூர்த்திகளும் தமிழர்களும்’, “கப்பலோட்டிய தமிழனின் கடைசி மணித்துளிகள்\’, “மாவீரனின் கடைசி மணித்துளிகள்‘’ ஆகிய கட்டுரைகள் போன்று பல்வேறு சமயங்களில் பல்வேறு மலர்களுக்காக எழுதப்பெற்ற கட்டுரைகள் இந்த நூலில் தொகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. “வடலூர் வள்ளலாரும் பசும்பொன் தேவரும்\’ கட்டுரையில் இருபெரும் மகான்களின் வாழ்க்கையைப் பற்றிய ஒப்பீடும், “மும்மூர்த்திகளும் தமிழர்களும்“ ட்டுரையில் காந்திக்கு “மகாத்மா’ என்ற பட்டம் எப்படி, யாரால் அளிக்கப்பட்டது “  என்பதற்கான விவரமும், மரணத்தைக் […]

Read more

உற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்)

உற்றதும் உணர்ந்ததும்(3-ம் பாகம்), சுவாமி ஓங்காரநந்தா ,ஓங்காரம், விலை 350ரூ. “உற்றதும் உணர்ந்ததும்” என்ற தலைப்பில் சுவாமி ஓங்காரநந்தா எழுதி வரும் நூலில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. தமது அனுபவங்களையும், சிந்தனைகளையும் கலந்து, ஆன்மிக கட்டுரைகளாக வழங்கியுள்ளார் சுவாமி ஓங்காரநந்தா. நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- திருக்குறள் அறத்துப்பால் தெளிவுரை, மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. திருக்குறள் அறத்துப்பாலுக்கு எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதத்தில் உரை எழுதியுள்ளார் பி.வி. சண்முகம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more