இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள்

இந்தியப் பண்பாட்டுத் தூதுவர்கள் தமிழ் நாட்டிய ஆசிரியர்கள், சண்முக செல்வகணபதி, அய்யா நிலையம், பக். 224, விலை 225ரூ. தமிழ்ப் பண்பாடு சமயம் சார்ந்தே இருந்து வந்திருக்கிறது. நடனம் என்பது சமயஞ்சார்ந்த பண்பாட்டுக் கூறு. தமிழ்நாட்டில் நடனம் முதலில் கூத்து என்றும், பின்னர் சதிர் என்றும் அழைக்கப்பட்டு, தற்போது பரதநாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பரதநாட்டியத்தை வழிவழியாகப் பயின்றும் பயிற்றுவித்தும் வந்திருக்கும் மரபினரில் சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் நாட்டிய கலைக்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றியும், அவர்களுடைய நடனம் பயிற்றுவித்த ஆசிரியர்கள், அவர்களிடம் நடனம் பயின்ற […]

Read more

அறிவார்ந்த ஆன்மீகம்

அறிவார்ந்த ஆன்மீகம், என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட், சென்னை, பக். 240, விலை 200ரூ. ஏன், எப்படி, எதற்காக என்று நம் ஆன்மிகச் செயல்களின் பின்னணியிலிருக்கும் காரணங்களை அலசும் ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நாம் பின்பற்றும் ஆன்மிகச் செயல்களின் காரணங்களை, விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபித்த ஆதாரங்களுடன் அழகுற விளக்குகிறார் நூலாசிரியர். தேங்காய் உடைப்பது ஏன்?, அணுவில் ஆண்டவன் போன்ற கட்டுரைகள் புதிய சிந்தனைகளைத் தூண்ட வல்லன. இந்த மண்ணில் உதித்த ஞானிகள், அவர்களது உபதேசங்கள், புனித நூல்கள் மூலமாகவும், […]

Read more

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம், ஏவி.எம். குமரன், டிஸ்கவரி புக் வேலஸ், சென்னை, பக். 248, விலை 200ரூ. ஏவி.எம். மெய்யப்ப செட்டியாருக்கு அருகில் இருந்து தான் கற்றுக்கொண்ட பல அரிய பாடங்களை தொடர்புடைய அந்தந்த திரைப்படங்களோடும், தானே நேரடியாகப் பணியாற்றிய சில படங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஏவி.எம்.குமரன் பதிவு செய்துள்ள தொகுப்பு. ஏவி.எம். நிறுவனம் பல்வேறு மொழிகளில் தயாரித்த திரைப்படங்களின் உருவாகத்தின் ஆரம்பம் முதல் கடைசிநாள் படப்பிடிப்பு, அதன் வெளியீடு வரை எல்லா நிகழ்வுகளிலும், கூடவே இருந்த அப்போதைய சம்பவங்கள், கலைஞர்களுடன் […]

Read more

தேவர் வருக

தேவர் வருக, இந்திரா பார்த்தசாரதி, கவிதா பப்ளிகேஷன், சென்னை, பக். 160, விலை 125ரூ. சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் தேவர் வருக குறுநாவலும் 6 சிறுகதைகளும் அடங்கிய நூல். நாவலாகட்டும், சிறுகதைகளாகட்டும் வெறும் கதைக என்கிற எல்லையத் தாண்டி, வாழ்க்கை பற்றிய பார்வையைத் தருகின்றன. இன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை ஒருவித கிண்டல் தொனியுடன் விமர்சிக்கும் தேவர் வருக நாவல். அநியாயம், அக்கிரமம் செய்பவர்களைக் கடவுள் கண்டுகொள்ளமலிருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவர் ஏதோ ஒரு வடிவத்தில் இப்போதும்கூட அக்கிரமக்காரர்களைத் தண்டித்துக் […]

Read more

வரலாறு கற்பித்தலில் புதுமைகள்

வரலாறு கற்பித்தலில் புதுமைகள், வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 320, விலை 200ரூ. ஆசிரியர் பணிக்குப் படிப்பவர்களுக்காக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்க கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின்படி வரலாறு கற்பிப்பதைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல். வரலாறு கற்பித்தலில் புதுமைகள் என்று தலைப்பு இருந்தாலும், கற்பித்தலில் இன்றைய புதுமை எப்படி படிப்படியான வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை நூல் விளக்குகிறது. கிரேக்க, ரோமானிய, இடைக்கால, மறுமலர்ச்சி கால, நவீன கால வரலாற்று எழுத்தாண்மைகளை நூல் விளக்குகிறது. இந்தியாவிலும்கூட கல்ஹனா, அபுல்பஃஸல் காலத்திலிரந்து அர்.சி. மஜும்தார் […]

Read more

இராமன் கதை

இராமன் கதை, முனைவர் ச.லோகாம்பாள், அருள் பதிப்பகம், பக். 576, விலை 430ரூ. ராமாயணத்தை பல கோணங்களிலும் நுணுக்கமாக ஆராய்ந்தெழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றையும், கதைப் போக்குடன் தம் ஆய்வுக் கருத்துகளை நிறுவுகிறார் நூலாசிரியர். ராமபிரானின் குணநலன்களை அடுக்கிக் கூறும் நுலாசிரியர், ராமன் மாபெரும் மன்னன் என்ற இறுமாப்பின் உருவகமாகவே காட்சியளிக்கிறான் என்றும், கோபத்தால் பொறுமை இழந்து அரக்கர் முதலானோரைக் கொன்று குவித்த கொடியவன் ராமன் என்று கூறும் கருத்துகள், இந்த நூலை படிப்போருக்கு நெருடலாகவே இருக்கும். தசரதன், […]

Read more

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும்

திருத்தொண்டகம் பாசுரங்களும் விளக்கங்களும், கலியன் எதிராசன்(எதிராஜுலு), கங்கை புத்தக நிலையம், சென்னை, பக். 278, விலை 100ரூ. கலியன் என்ற சிறப்புப் பெயர் கொண்ட திருமங்கையாழ்வாரின் 30 பாசுரங்கள் கொண்ட திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தத்துக்கு பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் இந்நூலை யாத்திருக்கிறார் கலியன் எதிராசன் என்ற புனைபெயர் கொண்ட எதிராஜுலு. வடிவவில், சைவ நாயன்மார் அப்பரின் தாண்டகங்களை ஒத்த இத்திருநெடுந்தாண்டகம், திருமங்கையாழ்வாரின் கடைசிப் படைப்பு மட்டுமல்ல, நாலாயிர திவ்யப்பிரபந்தத்தின் கடைசிப் பிரபந்தம் என்பதையும் வைணவ ஆசார்யார் பராசர பட்டரால் சாத்திரம் என்று போற்றப்பட்டது என்பதையும் […]

Read more

தொல்காப்பியத்தில் இசை

தொல்காப்பியத்தில் இசை, முனைவர் இராச. கலைவாணி, ஏழிசை இசை ஆய்வகம், தமிழ்க் கலையகம், மயிலாடுதுறை, பக். 608, விலை 350ரூ. சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் இசை பற்றிய செய்திகள், இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அந்த வகையில் பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், தொல்காப்பியர் நாடக வழக்கையும், உலகியல் வழக்கையும் ஆராய்ந்து ஐந்திணை நில அமைப்பு, அதற்குரிய பண்கள், இசைக்கருவிகள் பற்றி பல நூற்பாக்களில் கூறியிருக்கிறார். அத்தகைய நூற்பாக்களை மேற்கோள்காட்டி, இசை, பாவகைகள், பண்கள், இசைக்கருவிகள், இசை வடிவங்கள், இசைக்கலைஞர்கள், கூத்துகள் முதலியவற்றை மிகவும் […]

Read more

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், எஸ். குருபாதம், மணிமேகலை பிரசுரம், சென்னை, பக். 304, விலை 200ரூ. போதி தர்மர் பற்றிய விவரங்களைத் தொகுத்து வெளியிடப்பட்டுள்ள அற்புதமான நூல். தமிழகத்தில் ஆன்மிக அறிவு பெற்று, அதனை சீனாவில் முழுமையாக அதாவது ‘சென்’மதக் கோட்பாட்டை உருவாக்கியவர் என்ற பெருமை படைத்தவர் போதிதர்மர். ஆன்மிகப் போதனைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற முதல் இந்திய ஞானி இவர். நோக்கு வர்மக் கலையின் முன்னோடி, கராத்தே என இப்போது பிரபலமாகியுள்ள தற்காப்புக் கலையின் தந்தை, சிறந்த மருத்துவ அறிஞர், அக்குபஞ்சர் […]

Read more

நேசமணியின் வாழ்வும் பணியும்

நேசமணியின் வாழ்வும் பணியும், ஜி.ஐசக் அருள்தாஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 174, விலை 130ரூ. தமிழகத்துக்கு கன்னியாகுமரி என்றொரு மாவட்டம் கிடைக்கவும், கேரள மாநிலத்திலிருந்து அம்மாவட்டப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கவும் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் முக்கியமானதும் முதலாவதுமான பெயர் நேசமணி, அவரது இளைப்பாறல் இல்லாத போராட்டத்தின் மூலம்தான் தமிழகத்தின் தெற்கு எல்லை நெல்லை என்ற வரையறையில் இருந்தது, கன்னியாகுமரிவரை நீண்டது. தனது வாழ்வை, தனக்கு மட்டுமே பயனுள்ளது என்ற அளவில் தன் எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல், தான் பிறந்த […]

Read more
1 2 3 9