உன்னுள் யுத்தம் செய்
உன்னுள் யுத்தம் செய், இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், விலை 180ரூ. ஐ.பி.எஸ். அதிகாரியான இரா.திருநாவுக்கரசு, சுய முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளைக் கொண்ட 31 கட்டுரைகளை இந்த நூலில் தந்து இருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொள்வது போல அமைத்து இருப்பதால் அவை, சுவையான சிறுகதைகளைப் படிப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வது எப்படி? வாழ்க்கையை எவ்வாறு சந்திப்பது? போன்ற பல வினாக்களுக்கு இந்த நூலில் விடைகள் தரப்பட்டுள்ளன. எளிமையான வாசகங்கள், யதார்த்தமான உரையாடல்களைக் கொண்டு இருப்பதால், இந்தக் கட்டுரைகளை எளிதாக […]
Read more