விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள், சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் பல்வேறு போராட்ட வடிவங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டது. அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட இசைப்பாடல்களும் பாடப்பட்டன. ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிரான – தேசிய இயக்கத்துக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சொல்வதே இந்நூல். குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ என்று வள்ளலார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடியது, 1922ஆம் ஆண்டு […]

Read more

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது

புரட்சித் தலைவரை முதல் முதலாக பார்த்தபோது, பாபநாசம் குறள்பித்தன், முல்லை பதிப்பகம், சென்னை, விலை 30ரூ. எம்.ஜி.ஆர் பற்றி தாய் வார இதழில் இடம் பெற்ற 21 பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/7/2015.   —- ஷீரடி பாபா, வி.ஆர்.கே. ரவிராஜ், ஸ்ரீஆனந்த நிலையம், சென்னை, விலை 70ரூ. ஸ்ரீசீரடி மகான் சாயி பாபாவை கடவுளாக பாவித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பக்தர்களுக்கு, மனிதக் கடவுளின் மகத்துவத்தை இந்த நூல் மூலம் அறிந்து கொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

திருக்குர்ஆனின் பாதையில்

திருக்குர்ஆனின் பாதையில், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ. திருக்குர் ஆன் ஓர் அறிவுக் கருவூலம். அருள் சுரக்கும் பெட்டகம். மனிதகுலம் முழுமைக்குமான சொத்து. அதை ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிக்கக் கூடாது. அதை ஓதுவது ஒரு வகையான ஆன்மிக தியானம். அதை எந்த முறையில், எந்த நோக்கத்துடன் ஓதுகிறார்களோ அந்தளவுக்கு பயன் கிடைக்கும். திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? அதை ஓதுவதற்கு அடிப்படை முன் நிபந்தனைகள் என்ன? ஓதுவதன் விதிமுறைகள் என்னென்ன? கூட்டாக ஓதுவதன் தேவை என்ன? என்பன போன்ற தலைப்புகளில் […]

Read more

விநாடி வினா விடை

விநாடி வினா விடை, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. குழந்தைகள் பயனுள்ள முறையில் பொழுதைப் போக்கவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் வாண்டு மாமா எழுதியுள்ள நூல். பல்வேறு ஓவியங்கள், அதில் மாறுப்டட ஓவியங்களை குழந்தைகள் அடையாளம் காண வேண்டும் என்பது ஒரு வகை. குறிப்பிட்ட இடத்தை அடைய வழிகாட்ட வேண்டும் என்பது இன்னொரு வகை. இப்படிப் பல போட்டிகளை வைத்து அதற்கான விடைகளையும் கூறுகிறார். மேலும் குழந்தைகள் மனதைக் கொள்ளை கொள்ளும் 84 புதிர் விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 22/7/2015. […]

Read more

திருவாசகம்

திருவாசகம், இந்துமதி பதிப்பகம், சிதம்பரம், விலை 300ரூ. திருமுறைகளில் எட்டாம் திருமுறை திருவாசகம் ஆகும். திருவாசகத்திற்கு உருகார் வேறு ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது முன்னோர் கூற்று. திருவாசகத்திற்கு இதற்கு முன்னர் பலரும் உரை எழுதியுள்ளனர். இருந்த போதிலும் பேராசிரியர் அ. ஜம்புலிங்கம் சீர்களைப் பிரித்து அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை எழுதியுள்ளார். மேலும் மாணிக்கவாசகர் வரலாறு, திருவாசகத் தனிச் சிறப்பு போன்ற பல பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த உரை நூலில், மாணிக்கவாசகரின் பாடல் நயங்கள், சைவ சித்தாந்தக் கருத்துகள், […]

Read more

சங்கரன் கோவில்

சங்கரன் கோவில், மங்கையர்க்கரசி பதிப்பகம், விலை 600ரூ. சங்கரன் கோவில் – திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஊர். அந்த ஊரின் திருக்கோவில், அந்த நகரின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் அ. பழநிசாமி ஆற்றிய பணிகள், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர் என நகரின் முதல் பட்டதாரிகள், சங்கரன் கோவிலில் பிறந்த தமிழ் அறிஞர்கள் தேவநேயப் பாவாணர், இ.மு. சுப்பிரமணியம், முதல் திரையரங்கம், 62 ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் பஸ், நெசவுத் தொழில் வளர்ந்த கதை என சங்கரன்கோவிலில் நிகழ்ந்த […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 125ரூ. சங்க காலம் முதல் இன்று வரை இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிய பெண்கள் ஏராளம். அது பற்றிய அரிய செய்திகள் பலவற்றை இந்த நூலில் கூறுகிறார் தாயம்மாள் அறவாணன். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர்கள்தான். அதிலும் பெண்கள் 3 சதவீதம் பேர்களே கல்வி கற்றவர்கள். பெண்கள், பள்ளிக்கூடத்துக்கு சென்று படிக்கும் வழக்கம் வெள்ளையர்களின் வருகைக்குப்பின்னரே ஏற்பட்டது. கி.பி. 1657ல் ஹென்றிக் பாதிரியார், தூத்துக்குடிக்கு அருகில் உள்ள புன்னைக் […]

Read more

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன்

தமிழ்ப் பேரரசன் ராஜேந்திரன், வெ. நீலகண்டன், சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. இந்திய மன்னர்களில் எவரும் செய்யாத சாதனையாக, தெற்கு ஆசியாவின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த மாமன்னர் ராஜேந்திரன் பற்றிய முழுமையான தகவல்கள், சுவையான நாவல் போல விறுவிறுப்புடன் ஆக்கித் தரப்பட்டுள்ளது. சோழர்களின் வரலாறு, மன்னர் ராஜேந்திரன் ஆட்சித் திறன், அவரது கப்பல் படை சாகசங்கள், இலங்கை மன்னன் மகிந்தனை போரில் வென்று கைதியாகக் கொண்டுவந்தது, கங்கை கொண்ட சோழீச்வரம் கோவில் எழுப்பப்பட்ட விதம், அவரது இறுதிக் காலம் எப்படி […]

Read more

நாடு படும் பாடு

நாடு படும் பாடு, ஆர். நடராஜன், சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. கல்லூரி முதல்வராகவும், பத்திரிகையாளராகவும், அமெரிக்கத் தூதரக அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இந்நூலாசிரியர், தமிழிலும், ஆங்கிலத்திலும் 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பத்திரிகைகளில் எதையும் தெளிவாகவும், துணிவாகவும் எழுதும் அரசியல் விமர்சகர் என்ற சிறப்பும் இவருக்குண்டு. இந்நூலில் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் போன்றவை குறித்து துக்ளக் உட்பட பல பத்திரிகைகளுக்கு எழுதியவற்றில், சிறப்பான 51 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸின் கடந்த கால ஆட்சி குறித்த இவரது கடுமையான […]

Read more

திருவருட்பா

திருவருட்பா, திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் அருளிய திருஅருட்பா எளியவுரை, ஆறு திருமுறைகள் மற்றும் திருவருட்பா உரைநடை, புலவர் அடியன் மணிவாசகன், முதல் திருமுறை, பக். 760, விலை 400ரூ, இரண்டாம் திருமுறை, பக். 715, விலை 360ரூ, மூன்று – நான்காம் திருமுறைகள், பக். 352, விலை 200ரூ, ஐந்தாம் திருமுறை, பக். 560, விலை 280ரூ, ஆறாம் திருமுறை, தொகுதி 1, பக். 947, விலை 480ரூ, ஆறாம் திருமுறை தொகுதி 2, பக். 1122, விலை 550ரூ, திவட்பா உரை […]

Read more
1 2 3 8