திருக்குர்ஆனின் பாதையில்

திருக்குர்ஆனின் பாதையில், இஸ்லாமிய நிறுவனம், சென்னை, விலை 100ரூ. திருக்குர் ஆன் ஓர் அறிவுக் கருவூலம். அருள் சுரக்கும் பெட்டகம். மனிதகுலம் முழுமைக்குமான சொத்து. அதை ஒரு புத்தகத்தைப் படிப்பது போல படிக்கக் கூடாது. அதை ஓதுவது ஒரு வகையான ஆன்மிக தியானம். அதை எந்த முறையில், எந்த நோக்கத்துடன் ஓதுகிறார்களோ அந்தளவுக்கு பயன் கிடைக்கும். திருக்குர்ஆனை எப்படி ஓத வேண்டும்? அதை ஓதுவதற்கு அடிப்படை முன் நிபந்தனைகள் என்ன? ஓதுவதன் விதிமுறைகள் என்னென்ன? கூட்டாக ஓதுவதன் தேவை என்ன? என்பன போன்ற தலைப்புகளில் […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப்பாடல்கள், சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 224, விலை 170ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் பல்வேறு போராட்ட வடிவங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டது. அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு மக்களுடைய ஆதரவைத் திரட்ட இசைப்பாடல்களும் பாடப்பட்டன. ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கு எதிரான – தேசிய இயக்கத்துக்கு ஆதரவான பாடல்களைப் பாடிய போராட்ட வீரர்களின் வரலாற்றைச் சொல்வதே இந்நூல். குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ, ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ என்று வள்ளலார் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பாடியது, 1922ஆம் ஆண்டு […]

Read more

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள்

விடுதலைப் போரில் தமிழ் இசைப் பாடல்கள், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 224, விலை 170ரூ. பாட்டு திறத்தால் பாரதம் பேணியவர்கள் பாட்டு ஆயுதம் ஏந்தி போராளிகளாக மாறி, பாரத விடுதலைக்கு பாடுபட்டோர் அநேகர். அத்தகு அரும் பணியால் சிறந்து ஒளிரும் புகழ்மிக்க மகாகவி பாரதி, பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஜீவா, விசுவநாத தாஸ், பாஸ்கர தாஸ், கே.பி. சுந்தராம்பாள் போன்ற பெருமக்களின் போராட்டச் செய்திகளோடு, அவர்தம் வாழ்க்கைச் சரித நிகழ்வுகள் பலவற்றையும் சேர்த்து தொகுத்து எழுதியுள்ளார் முனைவர் சொ. சேதுபதி. […]

Read more