இலங்கையில் சிங்களவர்

இலங்கையில் சிங்களவர், இந்திய இனத் தொடர்ச்சியும் தென்னிந்தியப் பண்பாட்டு நீட்சியும், பக்தவத்சல பாரதி, அடையாளம் பதிப்பகம், விலை 160ரூ. சிங்களவர்களின் பூர்வீகம் சிங்களவர்களின் பூர்வீகம் குறித்த ஆய்வுகளில் பல அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை சென்றவர்கள் என்பதைச் சொல்கின்றன. ஆதி வரலாற்று நூல்களைப் பொறுத்தவரை, வங்காளத்தின் வங்கா நாட்டின் இளவரசிக்கும் லாலா தேசத்துச் சிங்கத்துக்கும் பிறந்த சிகபாகுவின் மகனான விஜயனில் தொடங்குகிறது இலங்கையில் சிங்களவர்களின் பூர்வீகம். இந்நூல், சமூக அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகளை மையமாகக் கொண்டு, அறிவியல்பூர்வமாக சிங்களவர்களின் பூர்வீகத்தை ஆராய்கிறது. மானுடவியல், மரபணுவியல்ரீதியான ஆய்வுகளும் […]

Read more

நடைவழிக் குறிப்புகள்

நடைவழிக் குறிப்புகள், சி.மோகன், பரிசல் வெளியீடு, விலை 150ரூ. கவனிக்க மறந்த ஆளுமைகள் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், கலாச்சாரம், சிந்தனை ஆகிய தளங்களில் தீவிரத்தோடு இயங்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளை இருபது ஆண்டுகளுக்கு முன்பாக ‘புதிய பார்வை’ இதழில் தொடராக எழுதினார் சி.மோகன். ஆளுமைகள் குறித்த அரிய தகவல்களை இத்தொடர் மூலம் வெளிக்கொண்டுவந்தார். அப்போது இத்தொடர் பெரும் வரவேற்பு பெற்றது. கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய புத்தகம் என்றும் மாணவச் சமூகம் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்றும் இந்நூல் சிலாகிக்கப்பட்டது. 13 […]

Read more

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர், பக்தவத்சல பாரதி, பாரதி புத்தகாலயம், விலை : ரூ.60 தமிழ்ச் சமூகத்தில் சாதி அமைப்பு எவ்வாறு உருவாகியிருக்க வேண்டும் என சங்க இலக்கியப் பாடல்களை முதன்மைத் தரவாகக் கொண்டு ஆராய்கிறது, 72 பக்கங்கள் கொண்ட இந்த நூல். குடி என்னும் தன்னாட்சி சமூக முறையிலிருந்து, சுற்றுவட்ட சமூக முறையின் ஊடாக செங்குத்து படிநிலை சமூக முறைக்கு தமிழ்ச் சமூகம் மாறி வந்திருப்பதாக இந்த நூலில் விளக்கியுள்ளார் பக்தவத்சல பாரதி. சங்க காலச் சமூகம் குடி அடிப்படையிலான சமூகமாக இருந்தது […]

Read more

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4

டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாகம் 1,2,3,4, பாலாஜி, சார் பதிப்பகம். தொழில்நுட்பக் கில்லாடி ஆகலாம். ஒரு விரல் நுனி அளவிலான கருவிக்கள் எப்படி ஒரு நூலாகத்தின் புத்தகங்களை எல்லாம் அடுக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான திரைப்படங்களை வைக்க முடிகிறது. ஆயிரக்கணக்கான பாடல்களைச் சேமிக்க முடிகிறது என்பது போன்ற கேள்விகளுக்கான விடை ஒரு எலெக்ட்ரானிக் மாணவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவற்றை டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் கையடக்கப் புத்தகத்தின் நான்கு பாகங்கள் கதைபோல விவரிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

இராமாயணக் கதைகள்

இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது. வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் […]

Read more

ம்… நானும்…!

ம்… நானும்…!, மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 100ரூ. கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற கவிதையில், ‘நாயர் கடை ஸ்டிராங் டீ போல, உன் மாராப்பு இல்லா மேலும் கீழும் ஆட… என்பது போன்ற வரிகள் இளைஞர்களைக் கவரும். இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கருத்தைக்கவரும். நன்றி: தினமலர், 27/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

காலத்தை வென்ற காவிய மகளிர்

காலத்தை வென்ற காவிய மகளிர், கா.விசயரத்தினம், மணிமேகலை பிரசுரம், பக். 180,விலை 115ரூ. மகாபாரதத்தில் அம்பை, திரவுபதி, சுபத்திரை இப்படி, 16 மகளிரும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, மாதவி, கோப்பெருந்தேவி, கவுந்தியடிகள், தேவந்தி ஆகிய ஐவர் பற்றியும், மணிமேகலையில் மாதவி, சுதமதி, ஆதிரை என வரும் மகளிர் பற்றியும், சீவக சிந்தாமணியில் வரும் குணமாலை, விமலை, பதுமை, சுரமஞ்சரி இப்படி எட்டு மகளிர் பற்றியும், வளையாபதி, குண்டலகேசி, கம்ப ராமாயணம் ஆகிய காவியங்களில் வரும் மகளிர் சிறப்புகளையும், அந்தந்த காவியக் கவிதைகளைச் சுருங்கக் கூறி விவரித்திருப்பது […]

Read more

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ்,  மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மைஇதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம்; வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம்; தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம், மூன்று பெண்களின் கதையைச் […]

Read more

பட்டுக்கோட்டையார் பாதையிலே

பட்டுக்கோட்டையார் பாதையிலே, சங்கை வேலவன், பக். 272, விலை 240ரூ. நாட்டுப்புறப் பாடல்களின் சுவையோடு, சந்த நயத்தோடு இக்கவிதை நுால் வெளிவந்து உள்ளது.இதில் அமைந்துள்ள கவிதைகளில் பெரும்பகுதி 1978 – 79ம் ஆண்டுகளில் உருவானவை என்பதை நுாலாசிரியர் முன்னுரையால் மட்டுமன்றி, கவிதையின் பாடுபொருள் கொண்டும் உணர முடிகிறது. பட்டுக்கோட்டையாரின், ‘வீரர் மரபு வாழ்க!’ எனும் கவிதையை முன்வைத்து, தன் வளர்ப்புத் தாயான பார்வதியை தமிழ்த்தாயாக பாவித்து முதல் வணக்கம் கூறி நுாலைத் துவங்குகிறார். ‘மீண்டும் ஒரு சுதந்திரம் வேண்டும்’ எனும் உரிமை முழக்கக் கவிதையோடு […]

Read more

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை, தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் […]

Read more
1 2 3 8