உழைப்பவனுக்கும் உற்சாகம்

உழைப்பவனுக்கும் உற்சாகம் – ஜான் ரஸ்கின்; தமிழில்: செல்லூர் கண்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக்.176, விலை ரூ.120 . மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, ஜான் ரஸ்கின் எழுதிய Unto This Last) என்ற நூலைப் படித்தார். அது அவருடைய சிந்தனைமுறையையே மாற்றிவிட்டது. அந்த நூலின் தமிழாக்கம் தான் இந்நூல். விவசாயப் பொருளாதாரத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இயந்திரத் தொழில் வளர்ந்த காலத்தில் உழைப்பவர்களின் வாழ்நிலையை ஆழமாக ஆய்வு செய்து இந்நூலை ரஸ்கின் எழுதியிருக்கிறார். இயந்திரத் தொழில் வளர்ச்சியில் மனிதர்களின் அக, புற வாழ்க்கையில் நிகழும் மாற்றங்கள் […]

Read more

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சித்த மருத்துவரின் கடிதம், ஜெயராம் சேவியர், காவ்யா பதிப்பகம், விலை: ரூ.260 சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் இயல், மருத்துவம், உணவு, உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் நூல். நீரிழிவைச் சந்திப்பவர்கள் உணவின் மூலமும் உடற்பயிற்சியின் மூலமும் அதைக் கட்டுக்குள் கொண்டுவர வழிகாட்டும் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொடக்க காலத் தமிழ் நாவல்கள்

தொடக்க காலத் தமிழ் நாவல்கள், சுப்பிரமணி ரமேஷ், மேன்மை வெளியீடு, பக்.248, விலை ரூ.200. மேன்மை இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. 1879-இல் வெளியான பிரதாப முதலியார் சரித்திரத்தில் தொடங்கி, 1952-இல் வெளியான ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம் வரைக்குமான 25 நாவல்களை எழுதிய ஆசிரியர்கள் பற்றியும் அந்நாவல்கள் எழுந்த சூழலையும், அந்நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளையும் இந்நூல் விரித்துரைக்கிறது. 1888-இல் திரிசிபுரம் சு.வை.குருசாமி சர்மா எழுதி, 1893-இல் வெளியான பிரேமகலாவத்யம் தமிழின் இரண்டாவது நாவலான பி.ஆர். ராஜமய்யரால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம் மூன்று பெண்களின் […]

Read more

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை

எளிய மொழியில் உளவியல் ஆலோசனை,  தி.கு.இரவிச்சந்திரன், அலைகள் வெளியீட்டகம், பக்.316, விலை ரூ.300. வாழ்க்கையில் பலருக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடி புறவுலகில் மட்டும் ஏற்படுவதில்லை. மனதிலும் ஏற்படுகிறது. மனதில் கட்டுப்பாடின்மை நிலவுகிறது. தன்னம்பிக்கை இல்லாமல் போய், தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சமூகத்தில் மேன்மையானதாகக் கூறப்படும் போதைப் பழக்கமின்மை, கற்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற எண்ணம் வருத்துகிறது. மனதில் பதற்றம் ஏற்படுகிறது. இவை போன்ற உளவியல்சார்ந்த பல்வேறு பிரச்னைகளைப் பற்றிய விரிவான ஆய்வாகவும், அவற்றுக்கான எளிய தீர்வுகளைச் சொல்வதாகவும் இந்நூல் இருக்கிறது. நூலாசிரியரின் 28 […]

Read more

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு

அறிவு தேடலில் அறிவியல் உணர்வு, ராஜேந்திர பிஹாரி லால், தமிழாக்கம் கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், விலை 90ரூ. உணர்ந்துப் படிக்கலாம் அறிவியலை இன்று உலகம் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய பங்காற்றி இருப்பது அறிவியல்தான் என்றாலும் மூடநம்பிக்கைகளுக்குப் பின்னே ஏனோ மனிதன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அதற்குக் காரணம் இயற்கையின் புதிரான ரகசியங்களை விளக்கும் அறிவியலை அனைவருக்கும் கொண்டுசேர்க்கத் தவறியதே. அப்படி தவறவிட்டதைப் பிடிக்கும் முயற்சியே அறிவு தேடலில் அறிவியல் உணர்வு. நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நீங்களும் எடை குறைக்கலாம்!

நீங்களும் எடை குறைக்கலாம்! டாக்டர் வி.ஜி.மோகன் பிரசாத, வெளியீடு: விஜிஎம் மருத்துவமனை,  பக்.180, விலை ரூ.150. தொப்பை, அதிக எடை, உடல் பருமன் எல்லாமே ஆரோக்கியத்துக்கு ஆபத்தான அறிகுறிகள். ஆனால், இதைப் பலரும் நம்புவதில்லை. உடல் எடை தானாக அதிகரித்தது போன்று, தானாகவே ஒரு கட்டத்தில் குறைந்து விடும் என்று நம்புகிறார்கள். உடல் எடை தானாக அதிகரிக்காது. தானாக குறையவும் செய்யாது என்ற உண்மை பலருக்குப் புரிவதில்லை. மேலும், அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் ஆபத்து குறித்து மக்களிடம் விழிப்புணர்வு உருவாகவே இல்லைஎன வருத்தப்படுகிறார் […]

Read more

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே மதுரை ஞாபகம் வருதே, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக்.180, விலை ரூ.100. தூங்கா நகரம் என்ற பெயர் பெற்ற மதுரை இப்போது காவல்துறையினரின் கட்டுப்பாட்டினால் இரவு 12 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டு தூங்கும் நகரமாகிவிட்டது; ஆனால் தூங்கா நகரமாக இருந்தபோது இரவு நேரத்தில் சாப்பிட என்னென்ன கிடைத்தன? நல்ல ருசியான முறுக்குக் கடைகள் எங்கிருந்தன? சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள முக்கியமான சாலைகளான மாரட் வீதிகளுக்குஅப்பெயர் எப்படி வந்தது? மதுரையில் உள்ள காக்கா தோப்பு, வில்லாபுரம், மதிச்சியம், சொக்கிகுளம் ஆகியவற்றுக்கு […]

Read more

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?

மாற்றுக் கல்வி பாவ்லோ ஃப்ரொய்ரே சொல்வதென்ன?, அ.மார்க்ஸ், அடையாளம் பதிப்பகம், விலை 50ரூ. மௌனத்தைக் கலைக்கும் கல்வி சிந்திக்கும் திறனின் வழியாக உரையாடவும் செயலாற்றவும் வல்லமை பெற்றவர்கள் மனிதர்கள். ஆனால் இன்றைய ஆசிரியர் மாணவருக்கு இடையிலான உறவு, கல்வி நிலையங்கள் செயலாற்றும் முறை, பாடநூல் அமைக்கப்பட்ட விதம் எல்லாமே நம்மீது மௌனத்தைப் போர்த்துபவையாகவே உள்ளன என்று கால் நூற்றாண்டுக்கு முன்பே விமர்சித்தவர் கல்வியாளர் பாவ்லோ ஃப்ரேய்ரே. இந்த மௌனத்தைத் தகர்க்க அவர் முன்வைத்த மாற்றுக் கல்விமுறையைச் சுருக்கமாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் […]

Read more

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள்

இந்திய சுதந்திரப் போரில் இரு சகோதரர்கள், செ.திவான், இலக்கியச் சோலை, விலை 90ரூ. காந்தியால் தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி கிலாபத் இயக்கம். அந்த இயக்கத்தைத் தொடங்கிய அலி சகோதரர்களின் வரலாறு இது. வரலாற்று ஆய்வாளர் செ.திவானின் 120-வது நூல். நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காலனியத்தின் இன்றைய முகங்கள்

காலனியத்தின் இன்றைய முகங்கள், முரளி சண்முகவேலன், மின்னம்பலம் பதிப்பகம், விலை 110ரூ. லண்டன் தொடங்கி தூத்துக்குடி வரைக்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் ஆளும் வர்க்க அடக்குமுறைகளைப் பல்வேறு கோணங்களில் அலசும் கட்டுரைகள். பாதிக்கப்படும் சாமானிய மக்களின் நியாயங்கள் அழுத்தத்தோடு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 8