குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450. குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் […]

Read more

நூறு பேர்

புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை, நூறு பேர், மைக்கேல் ஹெச்.ஹார்ட், தமிழில் இரா.நடராசன், மோ.வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா, மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.672, விலை ரூ.375. உலக அளவில் புதிய வரலாறு படைத்த நூறு பேரை வரிசைப்படுத்தி, அவரவர்களுக்குரிய இடத்தை அந்த வரிசையில் முன் பின்னாகக் கொடுத்து மதிப்பிட்டிருக்கும் நூல். முஹம்மத், ஐசக் நியூட்டன், ஏசு கிறிஸ்து, புத்தர் எனத் தொடங்கும் இந்த வரிசை ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், சார்லஸ் டார்வின், அலெக்சாண்டர் கிரகாம்பெல் , ஜார்ஜ் வாஷிங்டன், கார்ல்மார்க்ஸ், […]

Read more

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்

சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்,  ம.சுரேந்திரன், பாரதி புத்தகாலயம், பக்.112, விலை ரூ.100 . கொந்தளிப்பும், போராட்டமும் மிகுந்த இந்த சமூக வாழ்க்கையில், நடைமுறை வாழ்வில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கும் ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு, அதற்குத் தொடர்புடைய ஒரு சங்க இலக்கியப் பாடலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். சங்ககால சைவ சாப்பாடு, சங்ககால டாஸ்மாக், நரையைப் போக்கும் மருந்து எங்கே கிடைக்கும்?  போரூர் ஏரியும் குடபுலவியனார் ஆலோசனையும், நுங்கம்பாக்கம் ஸ்வேதாவும் பெருங்கோப்பெண்டும், பறவைகளின் […]

Read more

டிஜிட்டல் மாஃபியா – நீங்கள் டிஜிட்டல் உலகின் சோதனை எலிகள்

டிஜிட்டல் மாஃபியா – நீங்கள் டிஜிட்டல் உலகின் சோதனை எலிகள், வினோத்குமார் ஆறுமுகம், பக்.132, விலை ரூ.120. இன்று எல்லாரும் பேஸ்புக், யூ டியூப், கூகுள், இணையதளங்களைப் பயன்படுத்துகிறோம். நெட் பேங்கிங், ஆன்லைன் ஷாப்பிங், வாடகைக் கார் புக்கிங் என்பது சாதாரணமாகிவிட்டது. ஒரு தனிமனிதன் ஒவ்வொருநாளும் என்ன செய்கிறான்? எங்கே போகிறான்? என்ன வாங்குகிறான்? யாரிடம் பேசுகிறான்? எந்தமாதிரியான பொழுதுபோக்குகளை விரும்புகிறான்? எதை விரும்பிச் சாப்பிடுகிறான்? என்ன மாதிரியான உடை உடுத்த விரும்புகிறான் என்று எல்லாமும் இந்த இணைய உலகில் பதிவு செய்யப்படுகிறது. அந்தத் […]

Read more

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி

பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி (கால வரிசையில்ஆவணப் பதிவுகள்) – பதிப்பாசிரியர்: சீனி.விசுவநாதன், மொழிபெயர்ப்பு: கி.அ.சச்சிதானந்தம், இரா.சுப்பராயலு , வெளியீடு: சீனி.விசுவநாதன்,  பக்.416, விலைரூ.350 . மகாகவி பாரதி ஒரு பத்திரிகையாளராகவும், தேசவிடுதலை என்ற இலட்சியத்துடன் ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும் இயங்கி வந்திருக்கிறார். அவர் விடுதலை வேட்கையுடன் நடத்திய கூட்டங்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், இந்தியா பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் ஆங்கிலேய ஆட்சியாளரைக் கோபமடையச் செய்தன. அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்ற நினைக்க வைத்தன. எனினும் பாரதி நிலைகுலைந்துவிடவில்லை. நண்பர்கள், […]

Read more

கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?

கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?, ஏ.எல்.சூர்யா, பி பாசிட்டிவ் புரொடக்ஷன்ஸ், பக்.304. விலை ரூ.300. பணம் சம்பாதிப்பதற்கு தொழில், வேலை மட்டும் இருந்தால் போதாது, மனமும் வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதிப்பேன் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவரும் தனது ஆழ்மனதில் பதித்துக் கொண்டு செயல்பட்டால், நிச்சயம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டும் நூல். நம்பிக்கை எவ்வாறு மனிதனை மாற்றுகிறது என்பதை விளக்குகிறது. அந்த நம்பிக்கை நம்மை இயங்கச் செய்ய தேவையற்ற சிந்தனைகள், பேச்சுகள், செயல்களை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றும் இந்நூல் […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழனிபாரதி, பக்.104, விலை 80ரூ. நீ வரைந்த கோலம் தான் நீயே உன்னை வரைந்தது போல என்பது போன்ற பல அழகிய கதைகள் நிறைந்துள்ளன. கவிதைப் பிரியர்களக்கு இந்நுல் பிடிக்கும். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சிலைத் திருடன்

சிலைத் திருடன், எஸ்.விஜயகுமார், தமிழில் பி.ஆர்.மகாதேவன், கிழக்கு பதிப்பகம், பக். 240, விலை 250ரூ. நம் கண் முன் நடந்துகொண்டிருக்கும், ஒரு குற்றச் செயலாக சிலைத்திருடன் நாவல், விறுவிறுப்பாக நகர்கிறது. இந்தியாவின், பழம்பெருமை பேசும் சிலைகள், மாயமாவதும், அவை உலக அருங்காட்சியங்களில் பளபள ஒளியில் மிளிர்வதும், அதைப் பற்றிய குறைந்தபட்ச வருத்தம் கூட இல்லாமல் நாம் இருப்பதும் எப்படி. இதைத்தான் சிலைத்திருடன் உரைக்கிறான். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/9788184939491.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ், ஷாலினி, கருஞ்சட்டை பதிப்பகம், விலை 80ரூ. பிரித்தறிவோம் எதற்கெடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’ என்று கேட்டுப் பழமைவாதங்களைப் பரப்பும் போக்கு அண்மைக்காலமாக தலைதூக்கி இருக்கிறது. ஆனால், பழங்காலத்தில் நிகழ்ந்ததாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுபவற்றில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்து அறிவதுதானே பகுத்தறிவு! இதை அறிவியல்பூர்வமாகவும் வரலாற்று சமூகவியல் பார்வையிலும் அலசி ஆராயும் புத்தகம்தான் மனநல மருத்துவர் ஷாலினியின் ‘கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்’. நன்றி: தினமலர், 15/1/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்

இருண்மையியல் கொள்கைகளும் பயில்முறைகளும்,  ம.திருமலை, செல்லப்பா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.220. ஒருவர் அல்லது ஒரு பொருள் தனிப்பட்டுத் துலக்கமாகத் தெரியாமலும் தக்க வெளிப்பாட்டில் இல்லாத முறையிலும் இருப்பது இருண்மை. இலக்கியப் படைப்பின் உள்ளே பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஒரு கருத்தானது, முதல் வாசிப்பில் தெளிவாகப் புலப்படாத நிலையில்தான் அது இருண்மை எனப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய அரசியல் நெருக்கடிகள் எதையும் வெளிப்படையாகக் கூற முடியாதபடி தடுத்தன. அப்போது படைப்பாளிகள் மறைபொருளாக, இரட்டைப் பொருள் கொண்ட உருவகநிலையில் எதையும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள் […]

Read more
1 2 3 4 5 6 8