அடுக்கம்

அடுக்கம், டி. செல்வராஜ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.280 ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் அரசு பணியாளர் எதிர்கொள்ளும் இன்னல், சமூகத்தில் தகவமைத்துக் கொள்வதற்கான போராட்டம், அரசு இயந்திரத்தில் ஊடுருவியுள்ள ஜாதிப் பாகுபாடு, சுரண்டல் போன்றவற்றை சித்தரித்து, ஏற்றத்தாழ்வு அடுக்குகளால் விளையும் வேற்றுமைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள புதினம். நெல்லை வட்டாரப் பின்னணியில் நிகழ்ந்த போராட்டங்களுடன் விளிம்பு நிலை மக்களின் இன்னல்கள், இயற்கைச் சீரழிப்பு, பழங்குடிச் சமூகம் மீதான அடக்குமுறையை களமாக கொண்டு நகர்த்தப்படுகிறது. ஒரு சிமென்ட் தொழிற்சாலை, விவசாயத்தைச் சிதைத்ததும், தொழிலாளிகளைச் சீரழித்ததுமாக கதை […]

Read more

மகாத்மாவும் மருத்துவமும்

மகாத்மாவும் மருத்துவமும், தமிழாக்கம்: டாக்டர் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 95ரூ. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்’ (IJMR) எனும் மருத்துவ இதழ் காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக ‘Gandhi and Health’ எனும் ஆங்கில நூலை வெளியிட்டது. அதன் தமிழாக்கம் இது. மருத்துவ அறிஞர்களும் காந்தியவாதிகளும் எழுதியிருக்கும் 20 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல் காந்திக்கும் மருத்துவத் துறைக்கும் இடையிலான உறவையும், அவருடைய மருத்துவப் பங்களிப்பையும் விவரிக்கிறது. வணிக நோக்கில் […]

Read more

பிச்சிப் பூ

பிச்சிப் பூ, பொன்னீலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.70. பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார். குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் […]

Read more

வாய்மொழிக் கதைகள்

வாய்மொழிக் கதைகள், ஆ.சிவசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.145. வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம் விரிவாக உள்ளது. பண்பாட்டை அறிவதில் வாய்மொழிக்கதைகளின் முக்கியத்துவத்தை நுட்பமாக உரைக்கிறது. அதன் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்து, புராணக் கதை, பழமரபுக்கதை, நாட்டார் கதை என்ற வகைமைக்கு உட்படுத்தியுள்ளார். அவை பற்றி தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. வாய்மொழிக் கதைகளின் சூழல் பயன்பாடு பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது. அவற்றை சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வதற்கான ஆய்வு உத்தியும் விரிவாக […]

Read more

வீரம் விளைந்த வேலுார் கோட்டை

வீரம் விளைந்த வேலுார் கோட்டை, சா.திருமலை கமலநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.100 புகழ்பெற்ற வேலுார் கோட்டை பற்றிய வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு நுால். அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. வேலுார் ஊர் பெயர் காரணம் இலக்கிய ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. வேலுார் கோட்டை வரலாறு, சிப்பாய் கலகம் வரை சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. கோட்டையில் கோலோச்சிய மன்னர்கள் பற்றிய விபரமும் கால வரிசைப்படி உள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆன்மிகத் தொண்டு புரிந்த மகான்கள் பற்றிய விபரமும் உள்ளது. […]

Read more

கொரோனாவா? முதலாளித்துவமா?

கொரோனாவா? முதலாளித்துவமா?, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.55. கொடியது கொரோனா; உலகையே முடக்கிப் போட்டுள்ளது. முதலாளித்துவம் செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும், தேசங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, 200 ஆண்டுகளாக வணிகச் சுழற்சியாக வந்து கொண்டுள்ளது. வறுமை, பசி, பட்டினியால் வாடும் மனிதரை, கொரோனா நச்சுக் கிருமியும் தாக்கத் துவங்கி விட்டது. பயங்கரவாதம் போன்றே கொரோனாவும் மனித குலத்தின் பொது எதிரி […]

Read more

எங்கெங்கும் மாசுகளாய்…

எங்கெங்கும் மாசுகளாய்…, மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்), ப.திருமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை ரூ.110. சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை […]

Read more

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும்

சுந்தர ராமசாமி கருத்தும் கலையும், ராஜ்கௌதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.270 எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் எண்ணத்தையும், போக்கையும் அவரது படைப்புகள் வாயிலாகக் கண்டறியும் முயற்சியின் வெளிப்பாடு தான் இந்த நுால். எல்லாவற்றையும் தன் கண்ணோட்டத்திற்குள் நுணுகிப் பார்க்கும் பார்வையை, சுந்தர ராமசாமியின் கருத்தாகக் காணமுடிகிறது. ‘சுந்தர ராமசாமியின் சிறுகதைகள், விமர்சன – விவாதக் கட்டுரைகள் முழுவதையும் படித்து அசை போட்ட பின், புளிய மரம் தந்த உற்சாகம் கிடைக்கவில்லை’ என, தன் என்னுரையிலேயே சுருங்கிய வடிவத் திறனாய்வாக வெளியிட்டுள்ளார் ஆசிரியர். ‘சு.ரா.வுக்கு […]

Read more

தலித் பண்பாடு

தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ. சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது. தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது. […]

Read more

பொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்

பொருளிலக்கணக் கோட்பாடு, உவமவியல், தொல்காப்பியம்,  செ.வை. சண்முகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை ரூ.240. உவமையும் உருவகமும் சாதாரண மக்களின் பேச்சில் மிகவும் இயல்பாக வெளிப்படும். ‘அவன் மனது ஒரு கல்லு’ எனச் சொல்லும் தொடரில், மனதைக் கல்லாக உருவகப்படுத்துவதைக் காண முடியும். ‘மலை போல் வந்த துன்பம் எல்லாம் பனி போல் விலகி விடும்’ என்னும் உவமைத் தொடரையும், வேறு உவமைத் தொடர்களையும் சாதாரண மக்கள் மிகுதியாகப் பயன்படுத்துவர். சாதாரண மக்களின் மனதில் இயல்பாகப் பதிந்து விட்ட இந்த உவமை பற்றித் […]

Read more
1 2 3 26